வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால்

வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை
மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட்



தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி: மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Format தேர்ந்தெடுத்து அதில் Fonts பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் Effects என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Hidden என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட



வேண்டும் என்றால் Ctrl+A கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.


 


























கம்ப்யூட்டரில் அன்றும் இன்றும்


புரோகிராம் என்பது ஒரு டெலிவிஷன் ஷோ. இன்று கம்ப்யூட்டரில் இயங்கும் ஒரு கட்டளைத் தொகுப்பு அப்ளிகேஷன் என்பது வேலை தேடுவதற்கான
விண்ணப்பம். இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம்.





விண்டோஸ் என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம்.
கர்சர் என்பது புனிதமல்லாத தெய்வ நிந்தனை கொண்ட ஒரு சமாச்சாரம். இன்று கம்ப்யூட்டரில் நம் கட்டளைக்குக் கண் சிமிட்டும் ஒரு கோல் போஸ்ட். கீ போர்ட் என்பது அன்று ஒரு பியானோ. இன்று நம் விரல்களுடன் இயங்கி பல பணிகளை மேற்கொள்ளும் ஒரு சாதனம். 




மெமரி என்பது வயதாகும் போது நம்மிடம் தேயும் ஒரு ஆற்றல். இன்று கம்ப்யூட்டரின் இயக்கங்களுக்கு ஒரு தளம். சி.டி. அன்று ஒரு பேங்க் அக்கவுண்ட். இன்று பயன்படுத்தப்பட்ட பிறகு, வீணாகிப் போனால் ஆட்டோக்களிலும் சைக்கிள்களிலும் அழகுக்கு மாட்டப்படும் ஒரு தட்டு.
பொது இடத்தில் அன்ஸிப் செய்தால் அன்று உதைப்பார்கள். இன்று அன்ஸிப் செய்வதனை எல்லாரும் பார்க்கலாம். அன்று குப்பைகளைத் தான் கம்ப்ரஸ் செய்வார்கள். இன்று எளிதாகத் தகவல்களைத் தூக்கிச் செல்ல கம்ப்ரஸ் செய்கிறோம். ஹார்ட் டிரைவ் என்றால் முன்பு வெகு தூரம் களைப்பு தரும் பிரயாணம். இன்று அனைவரும் பேனா, பென்சில் இல்லாமலே எழுதும் ஒரு கம்ப்யூட்டர் பலகை.




லாக் ஆன் என்றால் அன்று எரியும் நெருப்பிற்கு இடும் விறகு. இன்று தங்கள் பணி தொடங்கிட அனைவரும் கம்ப்யூட்டரில் செய்திடும் முதல் செயலை இப்படித்தான் சொல்கிறோம். எலி வாழும் இடம் தான் அன்று மவுஸ் பேட். இன்று நம் கரங்களில் தவழும் கம்ப்யூட்டரின் குழந்தைக்கான படுக்கை.
கத்தரிக்கோல் வைத்துத் தான் அன்று கட் செய்தோம். இன்று இரண்டு கிளிக் செய்தே வெட்டுகிறோம். பல் தேய்க்கத்தான் அன்று பேஸ்ட். இன்று கையில் தொடாமலேயே நிறைய கம்ப்யூட்டரில் ஒட்டுகிறோம். எட்டுக்கால் பூச்சியில் மாளிகை தான் அன்று வெப். இன்று உலகைச் சுற்றி பின்னப்பட்ட டிஜிட்டல் வலையே வெப். காய்ச்சல் வந்தால் காரணம் வைரஸ். இன்று கம்ப்யூட்டரைக் கெடுக்கும் புரோகிராமே வைரஸ்.
























மைக்ரோசாப்ட் 2012 அதன் வியத்தகு செயல்பாடுகளைச் சற்று திரும்பிப் பார்க்கலாம்..


மைக்ரோசாப்ட் 2012  அதன் வியத்தகு செயல்பாடுகளைச் சற்று திரும்பிப் பார்க்கலாம்..

கடந்து போன 2012 ஆம் ஆண்டினைத் திரும்பிப் பார்த்தால், எத்தனை டிஜிட்டல் அதிசயங்கள் நடந்தேறி இருந்தன என்ற வியப்பு நம்மை நிச்சயம் சூழ்ந்து




கொள்ளும். இவற்றில் அதிக அதிசயத்தைத் தந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம் தான். அதன் வியத்தகு செயல்பாடுகளைச் சற்று திரும்பிப் பார்க்கலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்த வரை, 2012 ஆம் ஆண்டு, அதன் சாதனைகளை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சி அடையும் ஆண்டாகவே அமைந்தது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை முற்றிலும் புதிய முறையில் வடிவமைத்து, யாரும் எதிர்பாராத வகையில் வசதிகளைக் கொண்டதாக விண்டோஸ் 8 தொகுப்பினை வழங்கியது. பயனாளர்களுக்கான யூசர் இன்டர்பேஸ் என்னும் இடைமுகம் வியப்பினையும், வேகச்



செயல்பாட்டினையும் வழங்கியது. குறிப்பாக அதன் தொடுதிரை இயக்கம், நாம் அனைவரும் எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது. அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தன் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கும் வழங்கி, டிஜிட்டல் பாதையில், இன்னும் ஒரு வெற்றி மைல்கல்லினை மைக்ரோசாப்ட் அமைத்தது. விண்டோஸ் ஆர்.டி. என அழைக்கப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஏ.ஆர்.எம். கட்டமைப்பிலும் இயங்கி, இரு வேறு வகையான சாதனங்களிடையே ஒருங்கிணைப்பினைத் தந்தது.
 

அடுத்ததாக, விண்டோஸ் போன் 8 மொபைல் சாதனத்தினையும் மைக்ரோசாப்ட் கொண்டு வந்தது. பல புதிய வசதிகள் மட்டுமின்றி, எதிர்காலத்தில் இன்னும் பல புதிய கூடுதல் வசதிகளை அமைப்பதற்கான வாய்ப்புகளையும் இந்த போன் தந்தது. இதன் அமைப்பிற்கேற்ப, வடிவைக்கப்பட்ட நோக்கியா லூமியா 920 மற்றும் எச்.டி.சி. 8 எக்ஸ் மொபைல் சந்தையில் வெற்றிகரமாக விற்பனை ஆகி, மக்களின் வரவேற்பை உறுதி செய்து வருகின்றன.



மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மக்கள் பதிப்பாகிய, மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பின் புதிய தொகுப்பும் 2012ல் வெளியானது. இது இன்னும் விற்பனைச் சந்தைக்கு வரவில்லை என்றாலும், பயனாளர்கள் இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பல லட்சக்கணக்கானவர்கள் இதனைப் பயன்படுத்தி, இதில் இன்னும் மேற்கொள்ளக் கூடிய வசதி வாய்ப்புகள் குறித்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆபீஸ் தொகுப்பு, மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வரும் மற்ற தொகுப்புகளுடன் எளிதில் இணைந்து செயல்படும்படி அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். மேலும், அனைவரும் எளிதில் பெற்று பயன்படுத்தும் வகையில், இதன் உரிமம் பெறும் வழிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பாகும். 
மைக்ரோசாப்ட் நிறுவனம், தான் ஹார்ட்வேர் பிரிவிலும் சிறப்பாக இயங்க முடியும் என்பதனை 2012ல், சர்பேஸ் ஆர்.டி. என்னும் டேப்ளட் பிசியினை அறிமுகப்படுத்தியதன் மூலம் உறுதிப்படுத்தியது. இதன் மூலம், ஒரு சாப்ட்வேர் நிறுவனமாகத் தன்னை 
முன்னிறுத்திக்கொண்ட மைக்ரோசாப்ட், டிஜிட்டல் உலகில் சேவை மற்றும் ஹார்ட்வேர் நிறுவனமாகவும் இந்த ஆண்டில் தடம் பதித்துள்ளது. 
சர்பேஸ் ஆர்.டி. என்னும் இந்த டேப்ளட் பிசியின் செயல்பாடுகள், முற்றிலும் புதிய முறையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தனித்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளன. இதன் மிகச் சிறந்த வடிவமைப்பு இன்னும் பலரை வியக்க வைக்கிறது. மிக மிகக் குறைவான அளவில் தடிமன் கொண்ட இதன் கீ போர்டு, இதுவரை டிஜிட்டல் உலகம் பெற்றிராத ஒன்று. அது மட்டுமின்றி, அதனை விலக்கி, டேப்ளட் பிசிக்கான பாதுகாப்பு மேல் மூடியாகவும் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தான் ஏற்கனவே வழங்கி வரும் சேவைகளிலும் பல புதிய திருப்பங்களை மைக்ரோசாப்ட் 2012ல் ஏற்படுத்தியது. 
அதில் முதன்மையானது ஸ்கை ட்ரைவ். இதில் பல்வேறு நுன்மையான வசதிகளை ஏற்படுத்தி, மேம்படுத்தி, சிறந்த க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவாக ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அதன் மற்ற சேவைகளுடன் இதனை முற்றிலுமாக ஒருங்கிணைத்துத் தன் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான, முழுமையான சேவை வசதிகளைத் தந்தது. அடுத்ததாக, மிக நம்பிக்கை வைத்து, கூடுதல் வசதிகளைக் கொண்டதாக அளித்த சேவை எக்ஸ்பாக்ஸ் மியூசிக் சாதனமாகும். 




இசையைப் பொறுத்த வரை, தன் முடிவான ஒரு சாதனமாக இதனை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. இன்டர்நெட்டில் இசைக் கோப்புகளை ஒருங்கிணைக்க எளியதாகவும், அதிக திறனுடன் கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. ஒவ்வொரு பயனாளரும் தங்களுக்குத் தேவையானதை, தாங்கள் விரும்புவதனை இன்டர்நெட் வழியே பெற இது வழி செய்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்ற ஆண்டில் தந்த புதிய சேவையாக அதன் அவுட்லுக் டாட் காம் சேவையைக் கூறலாம். இது இறுதியான சேவையாக இருந்தாலும், புதியதாகப் பல மாற்றங்களைக் கொண்டதாக இதனை மைக்ரோசாப்ட் புதுப்பித்து வழங்கியது. தன் ஹாட்மெயில் தளத்தினை முற்றிலுமாக நீக்கிவிட்டு, தொடக்கத்திலிருந்து அவுட்லுக் டாட் காம் மின்னஞ்சல் சேவைத் தளத்தை மாற்றி அமைத்துள்ளது. 
புதியதாகவும், பயன்படுத்த எளியதாகவும், கூடுதல் பாதுகாப்பு கொண்டதாகவும் அமைத்துத்தரப்பட்ட இந்த மின்னஞ்சல் சேவைக்கு, மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்கள் அனைவரும் பெரும் அளவில் வரவேற்பினைத் தந்து கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து சாப்ட்வேர் பிரிவில் மன்னனாக இயங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, 2012 ஆம் ஆண்டு என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிலான ஆண்டாக இருக்கும். கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில் மொபைல் பிரிவிலும் சாதனங்களைக் கொண்டு வந்த இந்த ஆண்டு அந்நிறுவனத்தின் முக்கிய சாதனைக் கற்களைப் பதித்த ஆண்டாகும்.



















புத்தாண்டு வால்பேப்பர் - New year wallpaper




































ஒரு கோடியே 60 லட்சம், சாம்சங் கம்ப்யூட்டர்கள்

இந்த ஆண்டில், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டால்
செய்யப்பட்ட, ஒரு கோடியே 60 லட்சம், சாம்சங் டேப்ளட் மற்றும் லேப் டாப் கம்ப்யூட்டர்களை, இந்தியாவிற்கு விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன துணைத் தலைவர், ஜின் பார்க்










அறிவித்துள்ளார். சாம்சங் தொடுதிரையுடன் கூடிய அல்ட்ரா புக் கம்ப்யூட்டரினை இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளது. ATIV Smart PC and ATIV Smart PC Pro Series 5 Ultra Touch ஆகியவை மற்ற கம்ப்யூட்டர்களாகும். இவை அனைத்தும் விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்களாகும்.
Ativ Smart PC and Ativ Smart PC Pro ஆகியவற்றில், பட்டன் ஒன்றை அழுத்துவதன் மூலம், நோட்புக் பெர்சனல் கம்ப்யூட்டராக இருக்கும் இவற்றை, டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர் சாதனமாக மாற்றலாம். இவற்றில் 11.6 அங்குல அகலத்தில் திரை தரப்பட்டுள்ளது. இவற்றின் தடிமன் முறையே, 9.9.மிமீ மற்றும் 11.9 மிமீ. ஆக உள்ளது. Ativ Smart PC ரூ.75,490 என விலையிடப் பட்டுள்ளது. Ativ Smart PC விலை ரூ.53,990.




5 Ultra Touch வரிசையில் வந்துள்ள விண்டோஸ் 8, சாம்சங் நோட்புக் கம்ப்யூட்டர்கள், தொடுதிரை கொண்ட சாம்சங் நிறுவன முதல் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்களாகும். இதன் திரை, மல்ட்டி டச் வசதி கொண்டு, 13.3 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையான அளவில் எச்.டி.எம்.ஐ. போர்ட், யு.எஸ்.பி 3 போர்ட் ஒன்று மற்றும் யு.எஸ்.பி 2 வகை போர்ட் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. மல்ட்டி எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஈதர்நெட் போர்ட், 1.3 மெகா பிக்ஸெல் இணைய கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.64,990.


























ஐபேட்ல் நாம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அப்ளிகேஷன்


ஐபேட்ல் நாம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அப்ளிகேஷன் 






புதியதாக ஐபேட் அல்லது ஐபேட் மினி வாங்கியிருக்கிறீர்களா? அதன் பளபளப்பின் தன்மையில் இன்னும் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? பயன்படுத்திப் பார்க்கையில் ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதன் பயன்பாடு, அந்த ஐபேட் அல்லது மினி ஐபேடில் அவ்வளவு சிறப்பாக, பல்முனையாக இருப்பதில்லை. அதில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தான் அதன் பயனை பல மடங்கு உயர்த்துகின்றன. எந்த அளவிற்கு அதிக அப்ளிகேஷன் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பதிந்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு ஐ பேட் அதிகப் பயனுள்ளதாகத் தெரியும். எனவே, ஐபேட் ஒன்றில், நாம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம்களை இங்கு காணலாம்.






1. ட்ராப் பாக்ஸ் (Dropbox): 
க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்டோர் செய்திட வசதி தரும் ட்ராப் பாக்ஸ் நிச்சயம் ஐபேடில் தேவை. இது ஓர் இலவச சேவை. அதிக நண்பர்களை பரிந்துரைத்து அவர்களும் பதிந்து கொண்டால், நீங்கள் 16 ஜிபி வரையில் அளவிலான பைல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இது மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் வசதி என்றாலும், உங்கள் ஐபேடில் வைத்துக் கொள்வதில் சிக்கல் எழாது. இதன் பிரபலமான தன்மையினாலேயே, ஆப்பிள் நிறுவனமும் இதே போல ஒன்றை உருவாக்கியது. ஆனால், மக்கள் அதனை விரும்பவில்லை.





2. பிளிப் போர்ட் (Flipboard): 
உங்களுக்கான டிஜிட்டல் பக்கங்களை மிகச் சிறப்பாக உருவாக்க, பிளிப் போர்ட் உதவுகிறது. இதுவும் இலவசமாகவே கிடைக்கிறது. நாம் நமக்கென ஓர் இதழை இதன் உதவியுடன் தயாரித்து வெளியிடலாம். இதனைப் பெற https://itunes.apple. com/us/app/flipboardyoursocialnews/id358801284?mt=8 என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

3. பேஸ்புக் (Facebook): 
நீங்கள் பேஸ்புக் தளத்தை அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால், நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்கள் ஐபேடில் இருக்க வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அப்ளிகேஷன் 2011 ஆம் ஆண்டில் இடையேதான் கிடைக்கத் தொடங்கியது. இதனைப் பெற இணைய தளத்தில் https://itunes.apple.com/us/app/facebook/id284882215?mt=8 என்ற முகவரிக்குச் செல்லவும். 






4. எய்ம் (AIM for IPAD): 
பெரிய அளவிலான டச் கீ போர்டுடன், இன்ஸ்டண்ட் மெசேஜ் சாதனமாக ஐ பேட் இயங்குகிறது. சிறிய அளவிலான செய்திகள், அதற்கான பதில்களை மிக எளிதாக இதில் மேற்கொள்ளலாம். இருப்பினும் ஐ பேட் சாதனத்திற்கான எய்ம் அப்ளிகேஷன் பலருக்கு பிடித்துள்ளது. இதில் உரையாடல்களைக் கையாள்வது மிக எளிது. இதன் மூலம் பேஸ்புக் மற்றும் கூகுள் டாக் நண்பர்களுடன் உறவாடலாம். டெக்ஸ்ட் மெசேஜ் எடுத்துக் கொள்ளும் போன்களுக்கு, வை பி மூலம் இணைக்கப்பட்ட ஐ பேட் சாதனம் வழியாக, இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம். இதுவும் இலவசமே. இதனைப்பெற https://itunes. apple.com/us/app/ aimforipad/id364193698?mt=8 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.


















விண்டோஸ் 8 அழகான வால்பேப்பர்

♥ படங்களை பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யுங்கள் 

 (Size 1920x1080)






♥ படங்களை பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யுங்கள் 

  (Size 1920x1080)



♥ படங்களை பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யுங்கள் 
 (Size 1920x1080)































www.skumar-computer-tips.blogspot.com
















































உங்களின் நண்பர்கள், உறவினர்கள் எங்கு இருந்தாலும் சரி, அவர்களுடன் நினைத்த நேரத்தில் எந்தவிதக் கட்டணமும் இன்றி உரையாட விரும்புகிறீர்களா?

உங்களின் நண்பர்கள், உறவினர்கள் எங்கு இருந்தாலும் சரி, அவர்களுடன் நினைத்த நேரத்தில் டெக்ஸ்ட் மூலம், எந்தவிதக் கட்டணமும் இன்றி
உரையாட விரும்புகிறீர்களா? நட்பின் பாலத்தை இறுக்கமாகப் பிணைக்க எந்த கயிறு நமக்கு இலவசமாகக் கிடைக்கும் என்று தேடுகிறீர்களா? உங்களுக்கு உதவத்தான் WhatsApp  




என்ற அப்ளிகேஷன் உள்ளது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தால் போதும். உங்கள் நண்பர்களுடன் எந்த நேரத்திலும், அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும், உங்கள் செய்தி அவர்களுக்குச் சென்றுவிடும். இதற்கு ஒரே ஒரு தேவை, உங்களிடமும், நீங்கள் தொடர்பு கொள்ளும் நண்பர்களிடமும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ள சாதனம் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். இன்றைய வழக்கம் போல, இணைய இணைப்பில் இரண்டு போன்களும் இருக்க வேண்டும். 
முதலில் உங்கள் ஆண்ட்ராய்ட் டேப்ளட் அல்லது ஸ்மார்ட் போன் என ஏதேனும் ஒரு சாதனத்தில், இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுண்லோட் செய்திடவும்.இதனை “Play Store” என்ற இணைய தள ஸ்டோர் மூலம் மேற்கொள்ளலாம். தேடல் தளம் ஒன்றின் மூலம் “WhatsApp” என்று டைப் செய்து, பட்டியலிடப்படும் தளங்களில் ஒன்றிலிருந்து இதனை டவுண்லோட் செய்திடவும்.




இந்த அப்ளிகேஷனுக்கான ஐகான் பச்சை நிற வண்ணத்தில், சித்திரக் கதையில், கதா பாத்திரங்கள் பேசும் குமிழ் போல, உள்ளாக ஒரு டெலிபோன் படத்துடன் இருக்கும். முதன் முதலில் நீங்கள், இந்த அப்ளிகேஷனை இயக்கத் தொடங்குகையில், உங்கள் தொலைபேசி எண்ணைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும். அடுத்து, உங்கள் பெயர், உங்கள் நண்பர்களுக்கு எப்படிக் காட்டப்பட வேண்டும் எனக் கேட்டு, அதனையும் வாங்கிக் கொள்ளும். இதில் உங்கள் படம் அல்லது உங்களைக் காட்டும் நீங்கள் விரும்பும் படம் ஒன்றையும் அமைக்கலாம். இதனைப் பின்னொரு காலத்திலும் நீங்கள் மேற்கொள்ளலாம். அடுத்து, ஒரு காலியாக உள்ள பக்கம் “Chats” என்ற தலைப்பில் காட்டப்படும். இதன் நடுவே பென்சில் ஸ்கெட்ச் ஒன்று காட்டப்படும். இதுதான் உங்களுடைய முகப்புப் பக்கம் (homepage).




அடுத்து இந்த WhatsApp அப்ளிகேஷன், உங்கள் தொலைபேசியில் உள்ள எண்கள் உள்ள போன்களில், எதில் எல்லாம், இந்த அப்ளிகேஷன் உள்ளதோ, அவற்றைப் பட்டியலிடும். இதன் வலது மேலாக, லென்ஸ் மற்றும் பென்சில் படம் ஒன்று காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், உங்கள் Chats மூலம், நீங்கள் தேடலை மேற்கொள்ளலாம். உங்கள் நண்பர் எவருடனாவது, டெக்ஸ்ட் சேட்டிங் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால், திரையில் காட்டப்படும் அவரின் பெயர் மேலாகத் தொடவும். இது உடனேயே ஒரு அரட்டைப் பெட்டியைத் (‘chat box’) திறக்கும். இதில் செய்தி ஒன்றை நீங்கள் டைப் செய்து, உடன் அனுப்பலாம். மேலாக வலது பக்கம், ஒரு பேப்பர் கிளிப் படமும், ஸ்மைலி ஐகானும் காட்டப்படும். பேப்பர் கிளிப் ஐகானில் கிளிக் செய்து, ஏதேனும் போட்டோ, வீடியோ, ஆடியோ, இடம் மற்றும் பிறர் தொடர்பு தகவல்களை இணைத்து அனுப்பலாம். 





Gallery என்பதில் கிளிக் செய்தால், உங்கள் போனில் உள்ள காலரி திறக்கப்பட்டு, அதில் உள்ள படங்கள் காட்டப்படும். இந்த அப்ளிகேஷன் மூலம் எந்த படத்தை அனுப்ப விரும்புகிறீர்களோ, அந்த படத்தின் மீது கிளிக் செய்து, செய்தியுடன் இணைத்து அனுப்பலாம். அப்போதே, கேமராவினைத் திறந்து, போட்டோ எடுத்து, இணைத்து அனுப்பலாம். இதே போல வீடியோ பைல்களையும் அனுப்பலாம். அடுத்து வாய்ஸ் ரெகார்டரில் பதிவு செய்த ஆடியோ பைல்கள், அப்போது பதியப்படும் குரல் பைல், என எதனையும் இணைத்து அனுப்பலாம். 
அடுத்து, Location என்பதன் கீழ், நீங்கள் இருக்கும் இடம் குறித்த தகவல்களை அனுப்பலாம். இதனை உங்கள் நண்பருக்குத் தெரிவிப்பதன் மூலம், உலகின் எந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதனை, உங்கள் நண்பருக்குத் தெரியப்படுத்தலாம். அதற்கேற்ற வகையில் உங்கள் நண்பர் உங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
ஸ்மைலி ஐகானில் கிளிக் செய்தால், பல எமோட்டிகான் எனப்படும் உணர்ச்சிப் படங்கள் பட்டியல் கிடைக்கும். நீங்கள் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், நீங்கள் எளிதில் பின்னர் தேர்வு செய்வதற்காக, அண்மையில் நீங்கள் பயன்படுத்திய (recent emoji) ஸ்மைலி ஐகான்கள் பட்டியலிடப்படும். இதில் காட்டப்படும் ஒவ்வொரு ஐகான் கிளிக்கிலும், ஐகான்கள் வகைப்படுத்தப்பட்டு கிடைக்கும். 
இந்த செயல்பாட்டின் போது, முந்தைய ஸ்கிரீன் செல்ல வேண்டும் என்று விரும்பினால், பேக் ஸ்பேஸ் கீயினை அழுத்தினால் போதும். உங்களிடம் ஆண்ட்ராய்ட் போன் இருந்து, இதுவரை நீங்கள் இதனைப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால், உடனே இந்த வசதியைப் பயன்படுத்தவும்.