சி கிளீனர் பதிப்பு 4.01 New Free Download


சென்ற மாதம் தான், பிரிபார்ம் நிறுவனம், தன் சி கிளீனர் பதிப்பின் 4 ஆவது





பதிப்பினை, பல புதிய சிறப்பம்சங்களுடன் வெளியிட்டது. தற்போது பதிப்பு 4.01 வெளியாகியுள்ளது. இதில் விண்டோஸ் 8 ரெஜிஸ்ட்ரி கிளீனிங், முழுமையாகச் செயல்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. அதே போல, பைல் தேடிக் கண்டறிதல் மற்றும் சிஸ்டம் மற்றும் பிரவுசர் மானிட்டரிங் ஆகிய பணிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன், புதிய சில 





பணிகளுக்கான டூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
கூகுள் குரோம் பிரவுசருக்கான சுத்தப்படுத்தும் டூல் மேம்படுத்தப்பட்டுள்ளது. பயர்பாக்ஸ் பதிப்பு 19 மற்றும் பிறவற்றுடன் இணைந்து செயல்படும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. 





விண்டோஸ் 8 ரெஜிஸ்ட்ரி சுத்தப்படுத்த, புதிய குறியீட்டு முறை தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 உடன் இணைந்து செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இன்னும் சில வசதிகளும் தரப்பட்டுள்ளன. 




எனவே இலவசமாகக் கட்டணம் எதுவும் இன்றி பயன்படுத்துபவர்கள், இந்த புதிய பதிப்பினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். சி கிளீனர் புரபஷனல் தொகுப்பு வைத்துள்ளவர்களின் புரோகிராம்கள் தாமாகவே மேம்படுத்திக் கொள்ளப்படும்.



Download



புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்