டாகுமெண்ட் வரிகளுக்கிடையே இடைவெளி Office 2003 - 2007


ஆபீஸ் 2003 விட்டுவிட்டு, புதிய கம்ப்யூட்டரில் வேர்ட் 2007 






இதில் வரிகளுக்கிடையே உள்ள இடைவெளி, வழக்கமாக இல்லாமல் சற்று அதிகமாகவே உள்ளதாகவும், இதனை சிங்கிள் லைன் ஸ்பேஸ் இருக்குமாறு அமைப்பது எப்படி என்றும் கேட்டுள்ளார். மேலும் இதனை மாறா நிலையில் அனைத்து டாகுமெண்ட்களுக்குமாக அமைக்கக் கூடிய வழிகளையும் கேட்டிருக்கிறார். அவருக்கான விரிவான பதிலை, இங்கு கட்டுரையாகவே தருகிறேன்.






பயன்பாட்டு சாப்ட்வேர் தொகுப்புகளை மாற்றுகையில் இது போன்ற சிறிய சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகள் தலை தூக்கும். சில வேளைகளில் புதிய தொகுப்பினை விட்டு விட்டு, பழைய தொகுப்பிற்கே மாறிவிடலாமா என்ற எண்ணமும் தோன்றும். அவ்வாறின்றி, தொடர்ந்து பயன்படுத்திக் 




கொண்டிருந்தால், அதன் புதிய வசதிகளை நன்கு அறிவதோடு, விரைவாகவும் பணியாற்றத் தொடங்கிவிடுவோம். வாசகர் கேட்டுள்ள பல கேள்விகள் இந்த தயக்கத்தினால் வந்தவையே. இவற்றிற்கான தீர்வினைக் காணலாம். 
வேர்ட் டாகுமெண்ட்டில், வரிகளுக்கிடையேயான இடைவெளியை Line spacing என்ற டூல் கையாள்கிறது. இதன் மூலம் ஏற்கனவே தயார் நிலையில் உள்ள டாகுமெண்ட்டில் மாற்றங்களை மேற்கொள்ளலாம். நமக்கு விருப்பப்பட்ட இடைவெளியை மாறா நிலையில், தயாரிக்கப்பட இருக்கும் அனைத்து டாகுமெண்ட்டுகளுக்குமாக அமைக்கலாம். ஏற்கனவே அமைக்கப்பட்ட டாகுமெண்ட்டினைத் திறந்து, அதில் ஹோம் டேப்பினைக் கிளிக் செய்திடவும். இங்கு வலது புறமாக உள்ள பாராகிராப் என்னும் பிரிவினைக் காணவும். இங்கு காட்டப்படும் சிறிய ஐகான்கள் மீது கர்சரைக் கொண்டு சென்றால், ஒன்றில் Line spacing என்ற பலூன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், வரிசையாக எத்தனை அளவில் வரி இடைவெளி வேண்டுமோ, அவை பட்டியலாகத் தரப்பட்டிருக்கும். 1.0 என்பதில் டிக் செய்து, பின் கீழாகச் சென்று, Remove space after paragraph என்பதில் கிளிக் செய்திடவும். இதனால், கூடுதலாகச் சேர்க்கப்பட்ட இடைவெளி வரிகள் நீக்கப்படும். உங்கள் டாகுமெண்ட் முழுவதும் இந்த ஏற்பாட்டினை அமைக்க, கண்ட் ரோல் + ஏ அழுத்தி, டெக்ஸ்ட் முழுவதும் தேர்ந்தெடுத்து, பின் செட் செய்திடலாம். 




மாறா நிலையில், அனைத்து டாகுமெண்ட்களுக்கும் இதே செட்டிங்ஸ் அமைக்கலாம். இதற்கு, ஹோம் டேப்பில், வலது கீழ் மூலையில், ஸ்டைல் பிரிவில், உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்தால், ஸ்டைல்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் கீழாக மூன்று சிறிய பட்டன்கள் கிடைக்கும். கர்சரை இவற்றின் மீது கொண்டு சென்றால், வலது புறம் இருக்கும் ஐகான் Manage Styles என்பதற்கானது எனத் தெரிய வரும். இந்த Manage Styles டயலாக் பாக்ஸில், Set Defaults என்று ஒரு டேப் இருக்கும். இதனைத் 





தேர்ந்தெடுத்தால், இங்கு டேப் அகலம், எழுத்துருவின் ஸ்டைல் மற்றும் அளவினை மாற்றி அமைக்கலாம். இங்கேயே, பாராகிராப் மற்றும் லைன் ஸ்பேசிங் அளவுகளையும் மாற்றி அமைக்கலாம். இங்கே, நான் ஏரியல் என்ற எழுத்துருவினையும், அதன் அளவாக 12 பாய்ண்ட் மற்றும் பாரா ஒரு வரி இடைவெளி என செட் செய்து அமைத்தேன். நீங்கள், உங்களுக்குத் தேவையான எழுத்து, ஸ்டைல் மற்றும் வரி இடைவெளியினை அமைக்கலாம். 





அனைத்தையும் செட் செய்துவிட்டு, புதிய அமைப்புகள் இனி தயாரிக்கப்படும் அனைத்து டாகுமெண்ட்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால், New documents based on this template என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். 
இவ்வாறே, மாற்றங்கள் தேவைப்படும் போதெல்லாம், செயல்படலாம்.