பகுதி:2 = விண்டோஸ்: தடைகளை தகர்க்க - தீர்வுகளைக் காண்பதற்கு முன்னால், ஓர் உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும்

 

தீர்வுகளைக் காண்பதற்கு முன்னால், ஓர் உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும். விண்டோஸ் இயக்கத்தின் வேகத்திறன் குறை வதனை

யாராலும் தடுக்க முடியாது. நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால், 
பைல்களை உருவாக்குவோம்; அழிப்போம். புதியதாக எழுதுவோம். 




இணையம் சென்று, ட்ரைவர் புரோகிராம்களை அப்டேட் செய்வோம். சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்திடுவோம். வேண்டாத சாப்ட்வேர் தொகுப்புகளை நீக்குவோம். இதற்குத் தானே கம்ப்யூட்டர் உள்ளது என்கிறீர்களா! ஆம், ஆனால், இந்த வேலைகளே, டிஸ்க்கைச் சிதறலாக அமைத்து, குப்பை பைல்களைக் குவித்து, இன்னும் கம்ப்யூட்டர் இயங்கு திறனைக் குறைக்கும் அனைத்தையும் கொண்டுவிடும். 
இருப்பினும், கம்ப்யூட்டரை நல்லதொரு முறையில் அணுகினால், நிச்சயமாக, கம்ப்யூட்டரின் செயல் திறன் குறைவதைத் தள்ளிப்போடலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.






டேட்டா பைல் தனியாக
அனைத்து டேட்டா மற்றும் பெர்சனல் பைல்களையும், சிஸ்டம் அல்லாத ட்ரைவிற்கு மாற்றவும். குறிப்பாக, சிஸ்டம் ட்ரைவான, சி ட்ரைவில் உள்ள மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, டேட்டா ட்ரைவிற்கு மாற்றவும். விண்டோஸ் 7 சிஸ்டம் எனில், ஸ்டார்ட் சென்று ரைட் கிளிக் செய்திடவும். உங்கள் யூசர் நேம் தேர்ந்தெடுத்து திறக்கவும். பின்னர், அனைத்து 




போல்டர்களுக்கும் சென்று, கீழே தந்துள்ளபடி செயல்படவும். போல்டர் ஒன்றில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Properties தேர்ந்தெடுக்கவும். பின்னர் Location டேப் அழுத்தி, தொடர்ந்து Move அழுத்தவும். இனி, நீங்கள் இவற்றை எங்கு அமைக்க விரும்புகிறீர்களோ, அதனை பிரவுஸ் செய்து தேர்ந்தெடுக்கவும். அங்கு, எந்த போல்டரைக் கொண்டு செல்கிறீர்களோ, போல்டரின் அதே பெயர் தரப்பட வேண்டும். பின்னர், சேவ் செய்து ஓகே அழுத்தி வெளியேறவும். இதன் மூலம், உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம், இனி உங்கள் பைல்கள் எங்கு, எந்த போல்டரில் சேமிக்கப்பட 




வேண்டும் என்பதனைத் தெரிவிக்கிறீர்கள். இனி உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும், புதிய இடத்தில் உள்ள போல்டரிலேயே சேவ் செய்யப்படும். பழைய போல்டரில் டேட்டா பைல் இருந்தால், அவற்றை நீங்களாக கட் செய்து, புதிய போல்டரில் பேஸ்ட் செய்திட வேண்டும். 





டிஸ்க் கிளீன் அப் (Disk Cleanup)
இந்த பயன்பாடு, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள தற்காலிக பைல்கள், ரீசைக்கிள் பின் பகுதியில் உள்ள அழிக்கப்பட்ட பைல்கள், சிஸ்டம் 





இயங்குகையில் ஏற்படும் எர்ரர் பைல்கள் ஆகியவற்றைத் தேடி நீக்கும். இதனை இயக்க, Start > All Programs > Accessories > System Tools > Disk Cleanupஎனச் செல்ல வேண்டும். விண்டோஸ் 7 எனில், ஸ்டார்ட் சென்று அங்கு உள்ள கட்டத்தில், Disk Cleanup என டைப் செய்து என்டர் தட்ட, இந்த பயன்பாடு கிடைக்கும். பின் எந்த ட்ரைவினைக் கிளீன் செய்திட வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, இதனை இயக்கவும்.