பகுதி:1 - விண்டோஸ்: தடைகளை தகர்க்க - தீர்வுகளைக் காண்பதற்கு முன்னால், ஓர் உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும்.


தீர்வுகளைக் காண்பதற்கு முன்னால், ஓர் உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும். விண்டோஸ் இயக்கத்தின் வேகத்திறன் குறை வதனை

யாராலும் தடுக்க முடியாது. நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால், 





பைல்களை உருவாக்குவோம்; அழிப்போம். புதியதாக எழுதுவோம். இணையம் சென்று, ட்ரைவர் புரோகிராம்களை அப்டேட் செய்வோம். சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்திடுவோம். வேண்டாத சாப்ட்வேர் தொகுப்புகளை நீக்குவோம். இதற்குத் தானே கம்ப்யூட்டர் உள்ளது என்கிறீர்களா! ஆம், ஆனால், இந்த வேலைகளே, டிஸ்க்கைச் சிதறலாக அமைத்து, குப்பை பைல்களைக் குவித்து, இன்னும் கம்ப்யூட்டர் இயங்கு திறனைக் குறைக்கும் அனைத்தையும் கொண்டுவிடும். 





இருப்பினும், கம்ப்யூட்டரை நல்லதொரு முறையில் அணுகினால், நிச்சயமாக, கம்ப்யூட்டரின் செயல் திறன் குறைவதைத் தள்ளிப்போடலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.


சிஸ்டம், டேட்டா வெவ்வேறு இடங்களில்






கம்ப்யூட்டரில் சிஸ்டம் மற்றும் நம் பெர்சனல் டேட்டா ஆகியவைத் தனித்தனி ட்ரைவ்களில் பதியப்பட வேண்டும். வெவ்வேறு ஹார்ட் டிஸ்க்குகளில் பதிந்தால், இன்னும் நன்றாக இருக்கும். இதனால், உங்கள் சிஸ்டம் ட்ரைவ், அதிகச் சிதறல்களைச் சந்திக்காது. சிஸ்டம் கிராஷ் ஆகும் போது, உங்களின் டேட்டா பைல்கள் இன்னொரு ட்ரைவில் இருந்தால், அவற்றை இழக்கும் வாய்ப்பு நிகழாது. இவ்வாறு சிஸ்டம் பைல்களுக்கென ட்ரைவில் பிரிவினை ஏற்படுத்துகையில், சிஸ்டம் இயங்கத் தேவைப்படும் இடத்தைத் தர 




வேண்டும். விண்டோஸ் 7 சிஸ்டம் எனில், குறைந்த பட்சம் 20 ஜிபி அல்லது அதற்கும் மேலாக இடம் இருக்க வேண்டும். எப்போதும் அந்த ட்ரைவில் 5 ஜிபி காலி இடம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் சிஸ்டம் இயங்குவது எளிதாகவும், வேகமாகவும் நடைபெறும். இது குறையும் 




பட்சத்தில், ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட சில புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். தேவையற்ற பைல்களை இடமாற்றம் செய்திடலாம்; அல்லது நீக்கிவிடலாம். 

ஏற்கனவே அமைந்த நிலையில், நீங்கள் கூறும் அளவிற்கு இடம் இல்லையே எனக் கூறாமல், பிரிவின் இடத்தை