கேள்விப்படாத கூகுள் சேவைகள் - Google பகுதி:1


எந்தக் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்காத வகையில், கூகுள் டாட் காம் இணைய தளம், தேடலுக்கான சிறந்த தளமாக இன்று இடம் பிடித்துள்ளது. கூகுள் தளத்துடன், நாம் ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள்





மேப்ஸ் என மேலும் சில கூகுள் தரும் வசதிகளை அறிந்து வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வசதிகளையும் சிலர் தெரிந்து தங்கள் வழக்கமான பணியில் இணைத்திருக்கலாம். கூகுள் தரும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கூட ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு 




ஆச்சரியமானதாகத்தான் உள்ளது. இருப்பினும், கூகுள் இன்னும் பல சேவைகளை நமக்கு வழங்கி வருவது பலருக்குத் தெரியவில்லை. இவை எல்லாமே, இணையத்தில் இருக்கின்றன. நம் வாழ்வை இன்னும் சிறப்பாகவும், சுவைபடத்தக்கதாகவும் மாற்றி வருகின்றன.




 கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேட் (Google transliterate) 

இது ஒரு இலவச மொழி பெயர்க்கும் புரோகிராம். 64 மொழிகளுக்கிடையே மொழி பெயர்க்கும் பணியைத் தருகிறது. இதன் மூலம் சொற்கள், வாக்கியங்கள், இணையப் பக்கங்களை மொழி பெயர்க்கலாம். எண்ணற்ற 




தகவல்கள் அவை எந்த மொழியிலிருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மொழியில் பெற முடியும். ஒருவர் தங்கள் மொழியில் இருப்பதனை, அல்லது அடுத்த மொழியிலிருப்பதனை, அதன் ஒலிக்குறிப்பில் டைப் செய்தால் போதும். சரியான டெக்ஸ்ட்டில் அவை அமைக்கப்பட்டு, மொழி பெயர்க்கப்படும்.




கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட் (Google Art Project): இது கூகுள் தரும் ஸ்ட்ரீட் வியூ போன்றதாகும். மியூசியம்,கலை அரங்கங்கள் ஆகியவற்றிற்கு, வாடிக்கையாளர்கள், இணைய வெளியிலேயே சுற்றுலா மேற்கொள்ளலாம். கலைத் துறையில் முன்னணியில் ஈடுபடும், 40 நாடுகளைச் சேர்ந்த 151 





வல்லுநர்களுடன் இணைந்து இந்த தளத்தினை கூகுள் அமைத்துள்ளது. மியூசியம் நிர்வாகிகளிடமிருந்து அளப்பரிய தகவல்களும், கூகுள் நிறுவனத்தின் நவீன தொழில் நுட்பமும் இந்த தளத்தில் இணைந்து வாடிக்கையாலர்களுக்கு நல்லதொரு அனுபவத்தினைத் தருகின்றன.








புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்