பகுதி:4 - விண்டோஸ்: தடைகளை தகர்க்க - தீர்வுகளைக் காண்பதற்கு முன்னால், ஓர் உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும் new

தீர்வுகளைக் காண்பதற்கு முன்னால், ஓர் உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும். விண்டோஸ் இயக்கத்தின் வேகத்திறன் குறை வதனை




யாராலும் தடுக்க முடியாது. நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால், 
பைல்களை உருவாக்குவோம்; அழிப்போம். புதியதாக எழுதுவோம். இணையம் சென்று, ட்ரைவர் புரோகிராம்களை அப்டேட் செய்வோம். சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்திடுவோம். வேண்டாத 





சாப்ட்வேர் தொகுப்புகளை நீக்குவோம். இதற்குத் தானே கம்ப்யூட்டர் உள்ளது என்கிறீர்களா! ஆம், ஆனால், இந்த வேலைகளே, டிஸ்க்கைச் சிதறலாக அமைத்து, குப்பை பைல்களைக் குவித்து, இன்னும் கம்ப்யூட்டர் இயங்கு திறனைக் குறைக்கும் அனைத்தையும் கொண்டுவிடும். 




இருப்பினும், கம்ப்யூட்டரை நல்லதொரு முறையில் அணுகினால், நிச்சயமாக, கம்ப்யூட்டரின் செயல் திறன் குறைவதைத் தள்ளிப்போடலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.




ஹார்ட் டிரைவ் டிபிராக்
கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினை குறிப்பிட்ட கால இடைவெளியில் டிபிராக் செய்திட வேண்டும். இந்தக் கால இடைவெளி, உங்கள் வேலையின் 




தன்மையைப் பொறுத்தது. அடிக்கடி, புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்பவரகவும், பைல்களை நீக்கு பவராகவும் இருந்தால், ட்ரைவினை அடிக்கடி டிபிராக் செய்வதும் மேற்கொள்ளப்பட வேண்டும். 





விண்டோஸ் சிஸ்டம் அனைத்திலும் இந்த டிபிராக் செய்திடும் பணி எளிதாகவே நிறைவேறும் வகையில் வசதிகள் தரப்பட்டுள்ளன.