பகுதி:3 - பாதுகாப்பான பிரவுசிங்(safe Browsing) - பாதுகாப்பிற்கு கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகள் SAFE





கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் சாதனப் புழக்கம் ஆகிய அனைத்தும், பலவகையான அச்சுறுத்தல்களால் சூழப்பட்டுள்ளன. இவை ஒரே மாதிரியாக
இல்லாமல் பல வகையாய் வடிவமைக்கப்படுவதால், நாம் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைகளும் பல வகைகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பாதுகாப்பான பிரவுசிங், கம்ப்யூட்டர் பயன்பாடு, இணைய உலா ஆகியவற்றைப் பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து பல தகவல்கள் தரப்பட்டு வருகின்றன. கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றன.







அறியாத அழைப்புகள்
தேவையற்ற, நாம் அறியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை அறவே ஒதுக்க வேண்டும். அறிந்தவர்களிடமிருந்து கூட எதிர்பாராத வேளைகளில் 




வரும் அழைப்புகளைச் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்

வெவ்வேறு பாஸ்வேர்ட்




 இணைய செயல்பாடுகள் அனைத்திற்குமாக, ஒரே பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்த வேண்டாம். ஏதேனும் ஒரு பிரவுசரில் இது கண்டறியப்பட்டால், நீங்கள் முற்றிலுமாக உங்களின் தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும்.




 பாஸ்வேர்ட் சோதனை
பே பால் மற்றும் கூகுள் போன்ற நிறுவன தளங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளில் இப்போதெல்லாம் இரு நிலை பாதுகாப்பு சோதனை வசதி 




தரப்பட்டுள்ளது. இவற்றில் நுழையும் போது, உங்கள் மொபைல் போனுக்கு பாதுகாப்பு குறியீடு அனுப்பப்பட்டு, அதன் மூலமே, நீங்கள் இவற்றை அணுகும் 





வகையில் இது அமைக்கப்படுகிறது. இதனை அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்