சிஸ்டம் டிப்ஸ் - சென்ட் டூ மெனுவை நீட்டலாம் 10.5.2013


சென்ட் டூ மெனுவை நீட்டலாம்





Send To மெனுவில் கூடுதலாக பைல்களை பதிப்பதில், விஸ்டா இயக்கம் எக்ஸ்பி இயக்கத்தில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. விஸ்டாவில் Control Panel ஐத் திறக்கவும். அதன்பின் Folder Options பிரிவைத்தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் View டேப்பினைத் திறக்கவும். இங்கு தரப்படும் ஆப்ஷன்களில் 




Show hidden Files and Folders என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இனி ஸ்டார்ட் கம்ப்யூட்டர் எனக் கிளிக் செய்து சி டிரைவினைத் திறக்கவும். இதில் யூசர்ஸ் என்னும் போல்டரைத் திறக்கவும். இதில் உங்களுடைய 




பெயரை யூசர் நேமாக உள்ளதைத் தேர்தெடுக்கவும். அடுத்து App Data, Roaming, Microsoft Windows, Send To என வரிசையாகச் செல்லவும். போல்டரைக் காண முடியாவிட்டால் % AppData%\Microsoft Windows\ Send To என அட்ரஸ் பாரில் டைப் செய்திடவும். அடுத்து என்டர் செய்த பின் Send To மெனுவில் நீங்கள் உங்களுக்குத் தேவையானதை இணைக்கலாம்.







போல்டர் விரிந்து கொடுக்க





பைல்களைத் தேடுகையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் போல்டர்களைத் திறக்கிறோம். பின்னர் அதனுள் பல துணை போல்டர்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொன்றாகக் கிளிக் செய்து திறக்க வேண்டியுள்ளது. அவ்வாறின்றி, ஒரே கீ அழுத்தலில் அனைத்து போல்டர்களும் 




திறக்கப்பட்டால், நமக்கு வேலை மிச்சம் தானே. இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இடது பக்கம் உள்ள பிரிவில் உங்கள் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் நியூமெரிக் கீ பேடில் உள்ள ஆஸ்டெரிஸ்க் கீயினை (*) அழுத்தவும். அவ்வளவுதான். போல்டர்கள் மற்றும் துணை 




போல்டர்கள் அனைத்தும் காட்டப்படுவதனைப் பார்க்கலாம். உங்கள் ட்ரைவில் அதிக போல்டர்கள் இருந்தால், இதற்கு சில நிமிடங்கள் ஆகலாம். சற்றுப் பொறுமையுடன் காத்திருந்து பார்க்கவும்.