விண்டோஸ் 7 Usfull Tips..பகுதி:4


புதிய வடிவமைப்பில் வேர்ட் பேட்

டெக்ஸ்ட் அமைத்தல் மற்றும் எடிட்டிங் பணிகளுக்கு பெரும்பாலும், நாம் எம்.எஸ். ஆபீஸ் வேர்ட் பயன்படுத்துகிறோம். சிஸ்டத்துடன் வரும் நோட்பேட் மற்றும் வேர்ட் பேட் ஆகியவற்றைத் திறப்பது கூட இல்லை. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இவற்றில் அவ்வளாக புதிய கூடுதல் வசதிகளைத் தர




எண்ணியதில்லை. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுள்ள வேர்ட் பேட், பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, டாகுமெண்ட்களை விருப்பப்படியான பார்மட்டில் உருவாக்க முடியும். ஆர்.டி.எப். (.rtf)பார்மட்டில் தான் இவற்றை முன்பு சேவ் செய்து வந்தோம். இப்போது இவற்றை Office Open XML documet (.docx) ஆகவும் சேவ் செய்திடலாம். இதனால் வேர்டில் உருவாக்கப்படும் இந்த பார்மட் பைல்களை, வேர்ட் பேடிலும் திறந்து எடிட் செய்திடலாம்.







பிரச்னைகள் எங்கே எப்படி?

சில வேளைகளில், சிஸ்டத்தின் சில செயல்பாடுகள் மட்டும் முடங்கிப் போகும். அந்த வேளையில், எதனால் பிரச்னை ஏற்படுகிறது என நமக்குத் தெரியாது. இதனைக் கண்டறிந்து கொள்ள, விண்டோஸ் 7 வழி ஒன்றைத் தருகிறது. அது போன்ற சூழ்நிலையில், கண்ட்ரோல் பேனல் செல்லவும்.




அங்கு System and Security என்பதன் கீழ் Find and Fix என்ற பிரிவைப் பார்க்கவும். அல்லது சர்ச் பாக்ஸில் Troubleshooting என்று டைப் செய்து என்டர் தட்டவும். பொதுவான பிரச்னைகள், நீங்கள் அமைத்துள்ள செட்டிங்ஸ், சிஸ்டம் கிளீனிங் போன்ற வழிகளில், பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கலாம். இதற்கு முன் இதே போல ஏற்பட்டிருந்தால், சர்ச் பாக்ஸில் Troubleshooting history என்று டைப் செய்து பார்க்கவும். இந்த விண்டோவின் இடது மேல் பக்க மூலையில் View All என்ற லிங்க்கில் கிளிக் செய்தால், இதற்கு முன் இது போல ஏற்பட்ட சிக்கல்கள், அவற்றின் தன்மை மற்றும் தீர்வுகள் காட்டப்படும்.





























புதிய பதிவுகளை E-MAIL ல்




s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்