விண்டோஸ் 7 Usfull Tips..பகுதி:2


உதவியும் குறிப்புகளும் 
கம்ப்யூட்டரில் எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும், அதற்கான உதவி செயல் குறிப்புகள் தரப்படுவதுண்டு. எப்1 கீ அழுத்தினால், அவை கிடைக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கும். இதனை ஹெல்ப் என்ற டேப்பில் கிளிக் செய்வதன் மூலம் பெறலாம். இது முற்றிலும் புதிய வகையில் விண்டோஸ் 7 சிஸ்டம் தருகிறது.





இதனைத் திறந்தவுடன் கிடைக்கும் பக்கத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. Search Box, மைக்ரோசாப்ட் இணைய தளத்திற்கான நேரடி லிங்க், AND என்று பெயரிடப்பட்ட பட்டன். விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள AND பட்டனை அழுத்தலாம்; அல்லது ஹோம் பேஜில், இடது கீழ்ப்புறம் உள்ள More Support Options பிரிவில் கிளிக் செய்து, தேவையான தகவல்களைப் பெறலாம். இதில் தான் மைக்ரோசாப்ட் AND a Person for Helpஎன்ற பிரிவை மறைத்து 
வைத்துள்ளது. இதில் கிளிக் செய்தால் Remote Assistance, Microsoft Help Forums, மற்றும் Computer Manufactures Homepage ஆகியவை கிடைக்கும். இதன் மூலம் மிக அருமையாக உதவி பெறலாம்.










சிஸ்டம் பழுது பார்க்க:
விண்டோஸ் சரியாக இயங்கும் வரை நாம் மகிழ்ச்சியாக இருப்போம். கிராஷ் ஆகி காலை வாரி விடுகையில், பலருக்கு போன் போட்டு அட்வைஸ் 



 கேட்போம். அவர்களோ நம்மிடம் “ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி” உள்ளதா? என்று கேட்பார்கள். நாம் பதிலுக்கு அந்த பதட்டத்திலும் “அப்படீன்னா என்ன?” என்று கேட்போம். ஏனென்றால், சிஸ்டத்துடன் தரப்படும் சிடிக்களில், அப்படி ஒன்று உள்ளதென்று நாம் அறிந்து வைத்துக் கொள்வதில்லை. சரி, விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, இன்டர்நெட்டிலிருந்து டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தவர்கள் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். விண்டோஸ் 7 சிஸ்டம் இதுபோன்ற ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி தயாரிக்கும் வழியைக் கொண்டுள்ளது. சிஸ்டம் பூட் ஆவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலையில், இது போன்ற சிடிக்கள் நமக்கு கை கொடுக்கும். இதனைத் தயாரிக்க Start > All Programs > Maintenance > Create a System Repair Disc என்று செல்லவும். விண்டோஸ் 7, சிஸ்டத்தினை இயக்கக் கூடிய சிடி ஒன்றைத் தயாரித்துக் கொடுக்கும்.





























புதிய பதிவுகளை E-MAIL ல்




s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்