உங்கள் செல்வத்திற்கு கம்ப்யூட்டர் ஏதேனும் டிஜிட்டல் சாதனம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளீர்களா? என்ன என்ன செய்யக் கூடாது உங்களுக்கு டிப்ஸ் பகுதி:2 Part:2


 


அனுமதி முக்கியம்
உங்கள் மகன்/மகள் புதிய தளம் ஒன்றிலோ, சேவைக்கெனவோ தங்களைப் பதிவு செய்திடும் முன், உங்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பதனை அன்பாக வற்புறுத்தவும். 




எச்சரிக்கையாக இருக்கஇணையப் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்க, அனைத்து வழிகளையும் கற்றுக் கொடுங்கள். எப்படியெல்லாம், சிலர், இணையத்தில் நம்மை ஏமாற்றி, தகவல்களை வாங்குவார்கள் என்பதனைக் கூறவும். எந்நிலையிலும் மெயில்களில் காட்டப்படும் இணைய முகவரிகளில் கிளிக் செய்திடக் கூடாது என்பதனை அவசியம் தெரிவிக்கவும்.





வயது வரையறையைப் பின்பற்றபல இணைய தளங்களில் அக்கவுண்ட் வைத்துக் கொள்ள வேண்டும் எனில், குறைந்த 
பட்ச வயது அளவினைக் கட்டாயமாகக் கொண்டுள்ளன. ஆனால், நம் குழந்தைகள், அதனை ஏமாற்றும் விதமாக, தங்கள் வயதைக் கூடுதலாகக் காட்ட முயற்சிப்பார்கள். உடனே, ஆஹா! என்ன புத்திசாலித்தனம் என்று பாராட்டாமல், பொய்யான தகவல் கொடுப்பது சரியல்ல என்று கற்றுக் கொடுங்கள். எப்படி நல்ல நேர்மையான குடிமகனாக, குடிமகளாக உங்கள் குழந்தை இந்த உலகில் வளர வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதே போல இணைய உலகிலும், அவர்கள் நல்ல குடிமக்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.







பேச விடுங்கள்:உங்கள் குழந்தைகள் அவர்களின் எண்ண ஓட்டங்களைக் கூறுகையில் காது கொடுத்துக் கேளுங்கள். உனக்கு ஒன்றும் தெரியாது என்று என்றும் கூற வேண்டாம். சில வேளைகளில், அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் கூடக் கிடைக்கலாம்.
More Coming......








புதிய பதிவுகளை E-MAIL ல்




s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்