விண்டோஸ் 7 Usfull Tips..பகுதி:3


ஐகான்களை ஒழுங்குபடுத்த 
திரையெங்கும் பல பைல்கள், போல்டர்கள், ஷார்ட்கட்கள் எனப் பலவாறாக வைத்து, குப்பையாக ஐகான்களை சிலர் வைத்திருப்பார்கள். இவற்றை ஒழுங்குபடுத்தும் வழி அறியாமலும் பலர், திரையைக் குழப்பமான வகையில் அமைத்திருப்பார்கள். இதற்கு நாம் சிரமப்படவே வேண்டாம். எப்5 கீயை, சற்று நேரம் அழுத்தியவாறு வைக்கவும். ஐகான்கள் தாமாக சீராக அமைக்கப்படும்.





அல்லது வழக்கம்போல, டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, வழக்கம் போல விண்டோ சிஸ்டத்தில் உள்ளது போல, View, Auto arrange அழுத்தவும்.





சிஸ்டத்தின் நிலை என்ன?
நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எந்த நிலையில் உள்ளது என்று அறிய நாம் விரும்புவோம். விண்டோஸ் 7 இதற்கான வழி ஒன்றைக் கொண்டுள்ளது. சர்ச் லைன் பெட்டியில், perfmon/report என டைப் செய்து என்டர் தட்டினால், கம்ப்யூட்டர் குறித்த அனைத்து



தகவல்களும் கிடைக்கும். கம்ப்யூட்டர் செயல்படும் திறன், பயன்படுத்தப்படும் திறன், பிரச்னைகள் இருப்பின், அவற்றைத் தீர்க்க வழி ஆகியவை காட்டப்படும்.இந்த அறிக்கை கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். இதனை கம்ப்யூட்டர் இயக்கம் குறித்து கூடுதலாக அறிந்தவர்களுக்கு அனுப்பி தீர்வுகளை எளிதாகப் பெறலாம்.





























புதிய பதிவுகளை E-MAIL ல்




s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்