விண்டோஸ் 7 Usfull Tips..பகுதி:1



தேவையற்றவற்றை நீக்க

விண்டோஸ் 7 நமக்குக் கொடுக்கப்படும்போது, சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைந்தே கிடைக்கின்றன. இதில் என்ன பிரச்னை என்றால், சிஸ்டம் இயங்கத் தொடங்கும்போதே, இவையும் இயங்கி இயக்க நிலையில் இருக்குமாறு செய்திருப்பார்கள். எ.கா.: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, மீடியா பிளேயர், மீடியா சென்டர், டிவிடி மேக்கர் போன்ற புரோகிராம்கள்.




இவற்றில் பல நமக்குத் தேவையில்லை என நீங்கள் எண்ணலாம். அப்படியானால், ஏன் இவற்றை வைத்துக் கொண்டு, ராம் நினைவகத்தின் செயல்பாட்டின் திறனை இழக்க வேண்டும். நீக்கிவிடலாமே! அதற்கான வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கிடைக்கிறது. கண்ட்ரோல் பேனலில், Program and Features என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Turn Windows features on or off என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இவற்றில் இது போன்ற




ஒருங்கிணைக்கப்பட்டுள்ள புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படும். இதில் உங்களுக்குத் தேவைப்படும் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்ள அதன் முன்புறம் உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். 





பாஸ்வேர்ட் பாதுகாப்பு (Credential Manager)விண்டோஸ் 7 சிஸ்டத்தின் கண்ட்ரோல் பேனலில், கிரடென்ஷியல் மேனேஜர் என்னும் புதிய அப்ளிகேஷன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை இயக்க தேடல் பிரிவில் Credential என டைப் செய்திடவும். இதில் நம் 




பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றைக் குறிப்பிட்டு சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். நாம் அடிக்கடி செல்லும் இணையதளங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களையும், இதில் பதிந்து பாதுகாப்பாக வைக்கலாம். இவை Windows Vault என்பதில் சேவ் செய்து வைக்கப்படும். இந்த பைலையும் பேக்கப் எடுத்து வைக்கலாம்.





























புதிய பதிவுகளை E-MAIL ல்




s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்