கம்ப்யூட்டர் டிப்ஸ்



வேர்டில் டெக்ஸ்ட் டைப்
வேர்டில் ஒரு சொல்லை டைப் செய்திடுகையில் அதன் பின் புலத்தில் பல 











வேலைகள் நடைபெறும். சொல்லின் எழுத்துக்கள் சரியாக அமைகின்றனவா என்று ஒரு சோதனை நடைபெறும். டைப் செய்வதில் உள்ள தவறுகளை மையப்படுத்தி ஏற்கனவே அவற்றிற்கான திருத்தங்கள் ஆட்டோ கரெக்ட் பட்டியலில் இருந்தால் அவை தானாக மாற்றப்படும். அந்த பட்டியலில் குறிப்பிட்ட சொல் இல்லாமல், அதில் தவறு இருந்தது என்றால், அந்த



சொல்லின் கீழாக சிகப்பு நிறத்தில் கோடிழுக்கப்படும். அதில் ரைட் கிளிக் செய்தால் ஒன்றுக்கு மேற்பட்ட அதே எழுத்துக்களில் அமைக்கப்படக் கூடிய சொற்களின் பட்டியல் தரப்படும். அதிலிருந்து நமக்குத் தேவையான சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.