Windows 8.விண்டோஸ் 8ல் பி.ஓ.பி. மெயில் கிடைக்குமா?



விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் மெயில் புரோகிராம்,
பி.ஓ.பி. மெயில் சிஸ்டத்தினை சப்போர்ட் செய்வதில்லை. ஏனென்றால், விண்டோஸ் 8 சிஸ்டம் எந்த இடத்திலும், எந்த சாதனத்தின் மூலமும் (பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், டேப்ளட் பிசி) மெயில்களைக் கையாளும் வசதியைத் தர இலக்கு கொண்டு தயாரிக்கப்பட்டது. அப்படியானால், விண்டோஸ் 8ல் பி.ஓ.பி. மெயில் கிடைக்க என்ன செய்திட வேண்டும்?





இதனை அறிந்து கொள்ளும் முன், பி.ஓ.பி. மெயில் என்பது என்ன என்று பார்க்கலாம். இன்டர்நெட் இரண்டு வகையான மெயில் வழிமுறையைப் பின்பற்றுகிறது. இதில் பழமை யானதுதான் பி.ஓ.பி. மெயில் Post Office Protocol (POP) வழிமுறை. புதிய முறையானது ஐ.எம்.ஏ.பி, Internet Messaging Access Protocol (IMAP) என்ற ஐமேப் வழிமுறை. 




பி.ஓ.பி. வழிமுறையில், மெயில்கள், நம் கம்ப்யூட்டரில் உள்ள இமெயில் கிளையண்ட் புரோகிராம் வழியாக, கம்ப்யூட்டரில் இறங்குகின்றன. பொதுவாக, கம்ப்யூட்டருக்கு வந்த பின்னர், அவை ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சர்வரிலிருந்து நீக்கப்படும். நாமாக, இருக்கட்டும் என அதனை வடிவமைத்திருந்தால், அவை அங்கேயே பெட்டி கொள்ளும் வரை இருக்கும். இதில் என்ன பிரச்னை என்றால், நாம் பல கம்ப்யூட்டர் மூலம் மெயில் பார்ப்பதாக இருந்தால், மெயில்கள் இந்த கம்ப்யூட்டரில் சிதறிக் கிடக்க ஆரம்பிக்கும். நமக்கு அனைத்தும் ஒரே வகையில் கிடைக்காது.
IMAP வழி முறை ஒரு சிறந்த தொழில் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. நம் இன் பாக்ஸ், அவுட் பாக்ஸ், மற்றும் பிற மெயில் பாக்ஸ்கள் அனைத்தும் ஒரே இடத்தில் மாற்றம் இல்லாமல் இருக்கும். எந்த சாதனத்தின் வழி பார்த்தாலும், இவை இடம் மாறாது. இதனாலேயே, விண்டோஸ் 8 சிஸ்டம் பி.ஓ.பி. வழிமுறையை சப்போர்ட் செய்வதில்லை. இந்த புதிய சிஸ்டம், மொபைல் சாதனங்கள் மூலமும் இயங்கி மெயில்களைப் பார்க்க வசதி தருவதால், பி.ஓ.பி. இல்லாமல், ஐமேப் தொழில் நுட்பத்தினைக் கொண்டுள்ளது. 




ஆனால், எனக்கு பி.ஓ.பி. வழிமுறைதான் வேண்டும் என்று விரும்புகிற கம்ப்யூட்டர் பயனாளர்கள் என்ன செய்திட வேண்டும்? இந்தக் கேள்விக்கு முதல் பதில் என்ன தெரியுமா? விண்டோஸ் 8 அப்படித்தான். ஏற்றுக் கொண்டு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்பதுதான். ஆனால், இது தீர்வு இல்லையே. விண்டோஸ் 8 தரும் மெயில் கிளையண்ட், பி.ஓ.பி. வழிமுறைய சப்போர்ட் செய்திடவில்லை எனில், அதனை ஏற்றுக் கொண்டு இயங்கும் ஒரு மெயில் கிளையண்ட் புரோகிராமினைப் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான். 
மைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் மெயில் (விண்டோஸ் எசன்ஷியல்ஸ் தொகுப்பின் ஒரு இலவச புரோகிராம் Windows Mail) பயன்படுத்தலாம். இது இலவசமாகவே கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்த டாட் நெட் பிரேம் ஒர்க் (.NET Framework 3.5) தேவை. விண்டோஸ் 8 இதன் பதிப்பு 4.5 ஐக் கொண்டுள்ளது. 
விண்டோஸ் எசன்ஷியல்ஸ் பதிந்து கொள்ளும் முன்பு, இதனைப் பதிந்து கொள்ளலாம். 





விண்டோஸ் 8 இன்டர்பேஸில், control என டைப் செய்து, கண்ட்ரோல் பேனல் என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வழக்கமான விண்டோஸ் இன்டர்பேஸ் கிடைக்கும். இதில் கண்ட்ரோல் பேனல் செல்வீர்கள். இங்கு features என டைப் செய்து, Turn Windows features on or off என்பதில் கிளிக் செய்திடவும்.
இனி கிடைக்கும் டயலாக் பாக்ஸில், NET Framework 3.5 (includes .NET 2.0 and 3.0) என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். தொடர்ந்து சென்று மெயில் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திடவும். பின்னர் மற்ற விண்டோஸ் எசன்ஷியல்ஸ் அப்ளிகேஷன்களை, உங்களுக்குத் தேவைப்பட்டால், இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

 







புதிய பதிவுகளை E-MAIL ல்




s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்