குரோம் பிரவுசர் செட்டிங்ஸ் - பகுதி:1 Chrome Browser


பிரவுசர் பயன்பாட்டில், குரோம் பிரவுசர் தொடர்ந்து தன் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு இணையாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த




பயனாளர்களில், இரண்டும் 30 சதவீதத்திற்கும் மேலான பங்கினைக் கொண்டிருக்கின்றன. 

குரோம் பிரவுசரின் தொடர்ந்த பரவலுக்குக் காரணங்களாக நாம் பல சிறப்புகளைக் கூறலாம். இதன் வேகத்திற்கு அடுத்தபடியாக, இணைய தளம் மற்றும் தேடலுக்கென ஒரே விண்டோ இயக்கம் பலரைக் கவர்ந்துள்ளது. 




தேடலுக்கென தனியே விண்டோவினை நாம் இதில் தேட வேண்டியதில்லை. இந்த அமைப்பிலேயே நாம் இன்னும் சிலவற்றை நம் விருப்பப்படி அமைத்திடலாம். அதன் மூலம் நாம் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி, விரைவாக பிரவுசரைச் செயல்பட வைத்திடலாம். அவற்றை இங்கு பார்க்கலாம்.



பக்கங்களை எளிதாக படிக்ககுரோம் பிரவுசர் காட்டும் இணைய தளப்பக்கங்களின் டெக்ஸ்ட் மற்றும் 





படங்களை நாம் விரும்பும் அளவில், காண்பதற்குத் தெளிவாக இருக்கும் வகையில் அமைத்திடலாம். கண்ட்ரோல் (Ctrl) கீயினை அழுத்திக் கொண்டு, மவுஸின் வீலை முன்புறமாக நகர்த்தினால், இவை பெரிதாகவும், பின்புறமாக சுழற்றினால், சிறியதாகவும் மாறும். நம் தேவைக்கேற்ப இதனை அமைத்து நிறுத்தலாம். உங்களுடைய மவுஸில் ஸ்குரோல் வீல் இல்லை என்றால், பிரவுசரின் மேல் வலது மூலையில் உள்ள ஸ்பானர் படத்தில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் ஸூம் செட்டிங்ஸில் + மற்றும் - பட்டன்களை 




அழுத்தி இதனை அமைக்கலாம். 
அனைத்து இணைய தளங்களுக்குமான எழுத்தின் அளவையும் இந்த வகையில் அமைத்திடலாம். ஸ்பானர் ஐகானில் கிளிக் செய்து, Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து ‘Show advanced settings’ என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் கீழாகச் சென்று, Web content என்ற பிரிவினை அடையவும். இங்கு எழுத்தின் அளவை அமைத்திட Large or Very Large என இரு ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, அனைத்து இணைய தளங்களிலும் டெக்ஸ்ட் காட்டப்படும் அளவினை அமைக்கலாம். 
மற்ற பிரவுசர்களில் உள்ளது போலவே, குரோம் பிரவுசரிலும், எப்11 கீ அழுத்தி, மானிட்டர் திரை முழுவதும், இணைய தளம் தோன்றும் வகையில் அமைக்கலாம்.

தொடக்க நிலை தேவைகள்
மாறா நிலையில், குரோம் பிரவுசரில் விண்டோ ஒன்று திறக்கப்படுகையில், 





பிரவுசர் புதிய டேப் (New Tab) பக்கத்தினைக் காட்டும். இது காலியாக உள்ள பகுதி. இதில் நீங்கள் அடிக்கடி சென்று பார்த்த இணையதளங்களின் முகப்பு பக்கங்களின் படங்கள் இருக்கும். இதனையும் உங்கள் விருப்பப்படி அமைக்கலாம். ஸ்பேனர் ஐகான் கிளிக் செய்து, Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து On startup என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு ‘Open a specific page or set of pages’ என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். 





தொடர்ந்து அடுத்து உள்ள Set pages என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதனை அடுத்து ‘Use current pages’ என்பதில் கிளிக் செய்திடலாம். அல்லது மாறாக, நீங்கள் விரும்பும் இணையதளத்தினை ஹோம்பேஜாக மாற்ற, அந்த இணைய தளத்தின் முகவரியை டைப் செய்திடலாம். இங்கு, ஒன்றுக்கு மேற்பட்ட இணைய தளங்களின் முகவரிகளையும் டைப் செய்து அமைக்கலாம். பிரவுசர் திறக்கப்படும் போது, இவை அனைத்தும், ஒவ்வொரு டேப்பில் திறக்கப்படும். இங்கு இன்னொரு ஆப்ஷனையும் பார்க்கலாம். நீங்கள் இறுதியாகப் பார்த்த இணைய தளங்களையே பெற்று, தொடர்ந்து பணியாற்ற விரும்பினால், ‘Continue where I left off’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம்.