புதிய வகை டிக்ஷனரி....

பொதுவாக டிக்ஷனரியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுகையில், அதே மொழியில் விளக்கம் அளிக்கப்படும்; அல்லது ஒரு மொழி சொல்லுக்கு
இன்னொரு மொழி சொல் மற்றும் விளக்கம் அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் தமிழ் அகராதியில், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொல் தரப்பட்டு, இலக்கணக் குறிப்புகளுடன் விளக்கம் கிடைக்கும். 





இணையத்தில் இன்னொரு புதிய வகை டிக்ஷனரி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இது டிக்ட்ஸ் இன்போ (Dicts Info) என்று அழைக்கப்படுகிறது. இதன் இணைய தளம் சென்றால், அங்கு எந்த சொல்லுக்கு பொருளும் இன்னொரு மொழிச் சொல்லும் வேண்டுமோ, அந்த சொல்லை அதற்கான கட்டத்தில் அமைக்க வேண்டும். பின்னர், எந்த எந்த மொழிகளில் உங்களுக்கு பொருள் 




வேண்டுமோ, அந்த மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக, Computer என்ற ஆங்கிலச் சொல்லைக் கட்டத்தில் அமைத்து, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பொருள் வேண்டும் என இந்த இரண்டு மொழிகளைத் தேர்ந்தெடுத்து Search கட்டத்தில் கிளிக் செய்திட வேண்டும். 
உடன் Universal Dictionary என்ற தலைப்புடன் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று பிரிவுகளில் சொற்களும் பொருளும் காட்டப்படும். எடுத்துக்காட்டாக, அளிக்கப்பட்ட Computer என்ற சொல்லுக்கு, ஆங்கிலத்தில் அதற்கான விளக்கமும், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் அதற்கு இணையான சொற்களும் தரப்படுகின்றன.




இத்துடன் இந்த டிக்ஷனரி நின்று விடவில்லை. உடன், கொடுக்கப்பட்ட சொல் தொடர்பான மற்ற சொற்களும் தரப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, Computer என்ற சொல் தரப்பட்டபோது, Program, Calculator, Software, Computer Science என்ற சொற்களும், பொருளும் தரப்பட்டன. இந்த டிக்ஷனரியைப் பெற http://www.dicts.info என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.













புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்





















facebook இந்தியாவில் பேஸ்புக் மக்கள் 7.1 பேஸ்புக் பெருமை கொள்ளலாம்

உலகின் மிகப் பெரிய சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக், சென்ற டிசம்பர் வரையில், இந்தியாவில் 7 கோடியே 10 லட்சம் பதிவாளர்களைக்
கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை அடுத்து, இந்தியாவில் தான் அதிகம் பேர் பேஸ்புக் இணைய தளத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். மொத்தத்தில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 கோடியாக இருப்பதாகக் கணக்கிட்டாலும், இந்திய இணையப் பயனாளர்களில் பாதிப்பேருக்கும் மேலானவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதில் பேஸ்புக் பெருமை கொள்ளலாம்.





உலக அளவில் பேஸ்புக் நேயர்களைக் கணக்கிட்டால் இது வெறும் 7% தான். அண்மையில் பேஸ்புக் தளப் பதிவாளர் எண்ணிக்கை பன்னாட்டளவில் நூறு கோடியைத் தாண்டியது என்ற தகவல் வெளியானது. பேஸ்புக் தளத்தினைப் பொறுத்தவரை, இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் தான் வாடிக்கையாளர் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது. மொத்த




வாடிக்கையாளர்களில், 84% பேர் அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளில் உள்ளனர். பிரேசில் 2011ல், பேஸ்புக் தள நேயர்களின் எண்ணிக்கையை 81% உயர்த் தியது. மொத்த பயனாளர்கள் 6.70 கோடி பேர். இந்தோனேஷியா 25% வளர்ச்சி மேற்கொண்டு, 2012ல் 6 கோடி பேரைக் கொண்டிருந்தது.

தினந்தோறும் பேஸ்புக் தளத்தினைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், 2012ல் 28% ஆக உயர்ந்தது. இவர்களில் அதிகம் பேர், பிரேசில், இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களாவர். 2012 செப்டம்பரில் தினந் தோறும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 58 கோடியே 40 லட்சம் ஆகும்.




ஆனால், அனைத்து நாடுகளிலும், மொபைல் சாதனங்கள் வழியாக பேஸ்புக் தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.சென்ற டிசம்பர் முடிவில், இவர்களின் எண்ணிக்கை 15.7 கோடியாகும். மற்ற 52.3 கோடி பேர் மொபைல் சாதனங்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் களில் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத் தினார்கள். இருப்பினும் வருங்காலங்களில், மொபைல் வழி பேஸ்புக் பயன்படுத்து பவர்களே அதிகமாக இருப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.




2004ல் தொடங்கப்பட்டு, பிப்ரவரி 4 முதல் தன் ஒன்பதாவது ஆண்டு இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது பேஸ்புக். ஆர்குட், யாஹூ 360 போன்றவற்றின் வாடிக்கையாளர்கள் படிப்படியாய் குறைந்துவிட, பேஸ்புக் வேகமாக வளர்ந்து, தானே முதல் இட சமூக இணைய தளம் என்ற பெயரினைப் பெற்றுள்ளது.







புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்





















top 10 ஒரு வாரத்தில் அதிகம் வாசித்த 10 பதிவுகள் 20.2.2013




































புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்





















Bluetooth புளுடூத் என்று பெயர் வர காரணம்??


புளுடூத் என்று பெயர் வர காரணம்??

900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் 





சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென் மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான்









 உருவாக்கினர். இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில், தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர். மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.







புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்





















எச்சரிக்கை? மொபைல் போன் வைரஸ் அதிகரிக்கும்


 மொபைல் போன் பாதுகாப்பு பிரிவில் இயங்கும் ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம், நடப்பு 2013 ஆம் ஆண்டில், மொபைல் போன்களில் வைரஸ்கள்

அதிக அளவில் பரவத் தொடங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்டி வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி, அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை உலக அளவில் விற்பனை செய்து வரும் நிறுவனங்களில், மெக் அபி மற்றும் நார்டன் நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் ட்ரெண்ட் மைக்ரோ




இயங்குகிறது. இந்நிறுவனம் அண்மையில் விடுத்த அறிக்கையில், ஸ்மார்ட் போன்கள், குறிப்பாக 

ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் தற்போது இந்த விஷயத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு இணையாக இயங்கு கின்றன. எனவே இவற்றில் பரவும் வகையில் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளை உருவாக்குவது ஹேக்கர்களுக்கு மிக எளிதாக உள்ளது. சென்ற ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாத காலத்தில் மட்டும், மால்வேர் புரோகிராம்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகியுள்ளது என ட்ரெண்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே 30,000 என்ற எண்ணிக்கையில் இருந்த இவை, இக் காலத்தில் 1,75,000 என்றளவில் உயர்ந்தன. இவை மிகவும் ஆபத்தானவையாகவும் உலவி வருகின்றன. 
தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புதல், தொடர்ந்து எரிச்சலூட்டும் வகையில் விளம்பரங்களைக் காட்டுதல், ஸ்பேம் எனக் கண்டறிந்து விலக்க முடியாத வகையில், குப்பை தகவல்களைத் தருதல் என இவற்றின் செயல்பாடுகள் உள்ளன. மொபைல் வழி பேங்க் அக்கவுண்ட் செயல்பாடுகளை மேற் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, 2014 ஆம் ஆண்டில், இவற்றில் இடை புகுந்து நிதி மாற்றம் குறித்த தகவல்களைத் திருடி, பயனாளர்களுக்கு நிதி இழப்பு வரை மேற்கொள்ளும் வைரஸ்கள் நிறைய வெளியாகலாம் எனவும் ட்ரெண்ட் மைக்ரோ எச்சரித்துள்ளது.




2012 ஆம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 3,50,000 வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் இருந்தன. 2013ல் இவை மூன்று மடங்காகப் பெருகும் எனவும் அறியப் பட்டுள்ளது. எப்படி விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் களில் இடம் பிடித்ததோ, அதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டம், மொபைல் போன் களில் இடம் பிடிக்கும். எனவே, மால்வேர் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், இவற்றை தங்கள் இலக்காகக் கொண்டு இயங்கி வருகின்றனர். மேலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வடிவமைப்பின் குறியீடுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதுவும் இதில் அவர்களுக்குச் சாதகமான அடித்தளத்தைக் கொடுக்கிறது. 




கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அப்ளிகேஷன்களை இந்த வகையில் ஸ்கேன் செய்திட புதிய வழிகளை Bouncer என்ற முறையில் கூகுள் கொண்டு வந்தது. தற்போது அதிகம் புழங்கும் அண்மைக் காலத்திய சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் பதிப்பில் இது வழங்கப்பட்டது. 
புதிய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்கையில் காட்டப்படும் எச்சரிக்கை செய்தி பெட்டியினையும், அதில் உள்ள தகவல்களையும் தெளிவாகக் காட்டும் வகையில் கூகுள் தந்து வருகிறது. அனுமதி கேட்கும் வழிகள் எந்த மறைமுக செய்தியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்பவர், ஒருமுறைக்கு பல முறை சிந்தித்த பிறகே, அதனை இன்ஸ்டால் செய்திடுவார். 





ஆனால், வைரஸ் மற்றும் மால்வேர் வடிவமைப்பவர்கள் இதற்கெல்லாம் தயங்குபவர்களாக இருக்கப் போவதில்லை. எனவே, நாம் தான் அதிகக் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என ட்ரெண்ட் மைக்ரோ கேட்டுக்கொண்டுள்ளது.







புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்