விண்டோஸ் 8: சில குறிப்புகள் 27.6.2013


போட்டோ நிர்வாகம்: நம் போட்டோக்களை எளிதாகக் கையாள, விண்டோஸ் 8, விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery) என்னும் அப்ளிகேஷன் 




ஒன்றை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வழங்கியுள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நாம் போட்டோக்களை மிக எளிதாக, நம் கம்ப்யூட்டரில் பதிய முடியும். Photos app மூலம் இவற்றை மாற்றிக் கொள்வது மிக எளிது என்பதால், நூற்றுக் கணக்கில் நாம் போட்டோக்களை, கம்ப்யூட்டருக்கு மாற்றுகிறோம். இந்த அப்ளிகேஷன் சில அடிப்படையான வேலைகளை மட்டுமே மேற்கொள்ள நமக்கு வழி காட்டுகிறது. இந்த அப்ளிகேஷனைத் திறந்து, நாம் காட்ட விரும்பும் போட்டோ பைலின் மீது ரைட் கிளிக் செய்து, பின்னர் அதனை நம் விருப்பப்படி காட்டுகிறோம்.

இதற்கும் மேலாக போட்டோக்களின் மீது வேலைகளை மேற்கொள்ள, மைக்ரோசாப்ட் இலவச அப்ளிகேஷன் புரோகிராமாக Windows Photo Gallery என ஒன்றைத் தந்துள்ளது. இதன் மூலம் போட்டோக்களை நாம் பல இலக்குகளுடன் கையாளலாம். இதனைப் பெற, மைக்ரோசாப்ட் இணைய




 தளம் சென்று Windows Photo Gallery என டைப் செய்து தேடவும். இந்த சாப்ட்வேர் தொகுப்பு, Windows Essentials 2012 என்ற கூட்டுத் தொகுப்பில் ஒரு புரோகிராம் ஆகும். நம் பட பைல்களைத் பெற்று மற்றும் அனுப்பும் வேலையை இந்த சாப்ட்வேர் தானாகவே மேற்கொள்ளும் வகையில் அமைத்திடலாம். நம் டிஜிட்டல் கேமரா குறித்த சில தகவல்களைத் தந்து இதனை செட் செய்திட வேண்டும். போட்டோக்களை அவை எடுக்கப்பட்ட நாள், பைல் அளவு, கேமரா மற்றும் பல பண்பு வகைகளின் அடிப்படையில் பிரித்து அமைக்கலாம். மேலும் ஒவ்வொரு பைலுக்கும், நாம் விரும்பும் தகவல்களை இணைக்கலாம். தலைப்பு கொடுக்கலாம்; அவற்றை அடையாளம் காணும் சொற்களைத் (tags) 




தரலாம். இவ்வாறு தகவல்களை இணைத்துவிட்ட பின்னர், அவற்றை வகைப்படுத்தித் தேடுவது எளிதாகிவிடும். 
இதே சாப்ட்வேர் தொகுப்பு மூலம் படங்களின் அளவை மாற்றலாம். டிஜிட்டல் கேமராக்களில் படங்களை எடுக்கையில் கண்களில் அமையும் சிகப்பு புள்ளிகளை நீக்கலாம். படங்களில் சில டச் அப் வேலைகளை மேற்கொள்ளலாம். இந்த வகைகளில், நம் படங்களை நாம் கையாள ஒரு எளிதான சாப்ட்வேர் தொகுப்பாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Windows Photo Gallery நமக்குக் கிடைத்துள்ளது.


லாக் ஸ்கிரீனிலிருந்து தொடங்க: விண்டோஸ் 8 அதன் லாக் ஸ்கிரீனிலிருந்து தொடங்குகிறது. இதன் தொடக்கமே மிக அழகாக நம்மைக் கவர்கிறது. ஆனால், அடுத்து என்ன செய்திட வேண்டும் என நமக்கு எதுவும் தெரியாமல் அதனையே பார்க்கிறோம். என்ன செய்யலாம்? ஸ்பேஸ் பாரினைத் தட்டுங்கள்; மவுஸ் வீலைச் சற்று சுழற்றுங்கள் அல்லது டச் 




ஸ்கிரீன் என்றால், கீழிருந்து மேலாக விரலால் ஸ்வைப் செய்திடுங்கள். இந்த வேலைகளை மேற்கொண்டால், நமக்கு வழக்கம் போலக் காட்டப்படும் லாக் இன் ஸ்கிரீன் கிடைக்கும். இங்கு நீங்கள் விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்திடுகையில் அமைத்த யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை அமைத்து, கம்ப்யூட்டரில் உங்கள் பணியைத் தொடங்குங்கள்.


சில அடிப்படை வசதிகள்: விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பணி இடை முகம் (interface) அனைத்தும் வண்ண வண்ண ஓடுகளால் அமைக்கப்பட்டு, தொடு உணர்தலில் சாப்ட்வேர் தொகுப்புகள் கிடைக்கும் வகையில் கிடைக்கின்றன. நீங்கள் டேப்ளட் பி.சி. பயன்படுத்துபவராக இருந்தால், இவை அனைத்தும் 





நேரடியாகவே கிடைக்கும். இடது வலதாகத் திரையில் சுழன்று சென்று, நமக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் டைல் மீது கிளிக் செய்து, அப்ளிகேஷனைப் பெறலாம். டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் மவுஸ் வீல் முன் பின்னாகச் சுழற்றி இவற்றைப் பெறலாம். 
இவை இல்லாமல், கீ போர்டினையும் பயன்படுத்தலாம். உங்கள் ஸ்டார்ட் ஸ்கிரீனில் இருக்கையில் Home அல்லது End கீகளைப் பயன்படுத்தி சாப்ட்வேர் டைல்ஸ் அடுக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் இந்த மூலைக்கும், அந்த மூலைக்குமாகச் செல்லலாம். பின்னர் கர்சர் கீகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட டைல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். பின்னர், என்டர் அழுத்தி, 





அதனை இயக்க நிலைக்குக் கொண்டு வரலாம். 
மீண்டும் ஸ்டார்ட் ஸ்கிரீன் பெற, விண்டோஸ் கீ அழுத்தவும். ஏதேனும் திறக்கப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம் உங்களுக்குத் தேவை இல்லை என்றால், அதன்மீது ரைட் கிளிக் செய்து, அல்லது ஸ்வைப் செய்து, கிடைக்கும் மெனுவில் Unpin என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிட்ட சில புரோகிராம்களின் டைல்ஸ்களை, ஓர் இடத்திற்குக் கொண்டு வந்து அவற்றை ஒரு குழுவாக அமைக்கலாம்.


























30 இணைய பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம்


இன்டர்நெட் இணைப்பினை பூமியின் மூலை முடுக்கெல்லாம் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்ற சூன் 15 அன்று, ஜெல்லி மீன் வடிவில்
அமைக்கப்பட்ட, ஒவ்வொன்றும் 20 பவுண்ட் எடையுள்ள, 30 இணைய 




பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்த இணைய பலூன்களில், சோலார் தகடுகளுடன், ஆண்டென்னாக்கள், கம்ப்யூட்டர்கள், மின்னணு சாதனங்கள், ஜி.பி.எஸ். சாதனங்கள், பேட்டரிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 





நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டெகாபோ ஏரியின் அருகே இருந்து இந்த பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதன் மூலம், இணைய தொடர்பு கிடைக்க இயலாத, பூமியின் பல இடங்களில் வாழும் 480 கோடி மக்களுக்கு, இணைய இணைப்பு கிடைக்க இருக்கிறது. 






லூன் திட்டம் (Loon Project) என அழைக்கப்படும் இந்த திட்டம், தொலைவான இடங்களில் வாழும் அனைவருக்கும், எப்படியேனும், இணைய இணைப்பினைத் தரும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணைய பலூன்களில், ஹீலியம் வாயு நிரப்பப்பட்டு, இணைய இணைப்பு தருவதற்கான 
ட்ரான்ஸ்மீட்டர் சாதனங்கள் இணைக்கப்பட்டிருக்கும். மொத்தம் 30 பலூன்கள், பூமிக்கு மேலே 12 மைல் தூரத்தில், ஸ்ட்ராட்டோ ஸ்பியர் என அழைக்கப்படும் பகுதியில் பறக்கவிடப்படும். இவற்றின் விட்டம் 49 அடி. 780 ச.மைல் அல்லது 1,250ச. கிலோ மீட்டர், பரப்பில் வாழும் மக்களுக்கு, ஒவ்வொரு பலூனும் இணைய இணைப்பினை வழங்க முடியும். இந்த பலூன்கள், கூகுள் எக்ஸ் சோதனைச் சாலையில், கூகுள் கிளாஸ் மற்றும் கூகுள் ட்ரைவர் இல்லாமல் இயங்கும் கார் ஆய்வுத் திட்ட விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள், இணைய இணைப்பிற்கென, பைபர் கேபிள்களை அமைப்பதற்கான செலவினை மேற்கொள்வது கடினம் என்பதால், இந்த ஏற்பாட்டினை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த இணைய பலூன்கள், மிக மெல்லிய பாலிதைலீன் பிலிம் கொண்டு 




உருவாக்கப்பட்டவை. 
நியூசிலாந்தின் தெற்கு ஏரி அருகே இருந்து அனுப்பப்பட்ட இவை, வெகு எளிதாக, ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்றதாக, இதனை அனுப்பிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இவை நம் கண்களுக்குப் புலப்படாத தூரத்தில் பறந்து இணைய இணைப்பினை வழங்கி வருகின்றன. இதில் இணைக்கப்பட்டுள்ள, சிறிய டேபிள் அளவில் உள்ள சோலார் பேனல்கள், இவை செயல்படுவதற்குத் தேவையான மின் சக்தியை நான்கு மணி நேரத்தில் பெற்று தருகின்றன. தரையில் அமைக்கப்பட்டுள்ள இணையக் கட்டமைப்பில் செயல்படும் மையங்களிலிருந்து, இந்த இணைய பலூனில் உள்ள ரிசீவர்களுக்குத் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. ஒவ்வொரு பலூனும், 780 சதுர மைல் அளவில், இணையத் தகவல்களை வழங்குகின்றன. அது மட்டுமின்றி, ஒரு பலூனிலிருந்து, அதிக பட்சம் ஐந்து பலூன்களுக்குத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. ஸ்ட்ராட்டோஸ்பியர் என அழைக்கப்படும், குறிப்பிட்ட விண் எல்லையில், இந்த பலூன்கள் சென்று செயல்படத் 





தொடங்குகையில், மனிதனின் கண்களுக்கு இவை புலப்படாது. இவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதால், விண் வெளியில், ஓர் இணைய இணைப்புக் கட்டமைப்பு ஏற்படுகிறது. 
இதன் மூலம் உலகின் அனைத்து மூலைகளுக்கும் இணைய தொடர்பினை வழங்க முடியும். எடுத்துக்காட்டாக, ஆப்கானிஸ்தானின், மிக ஆழமான, வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதைகளையும், அங்கு வசிக்கும் மக்களையும், இந்த பலூன் வெளிப்படுத்தும் சிக்னல்கள் எளிதாக அடைய முடிந்தன. நூற்றுக்கு நான்கு பேர் மட்டுமே இணைய இணைப்பு தற்போது பெற்று வரும், கேமரூன் நாடு முழுவதும், இந்த பலூன்கள் இணைய இணைப்பினைத் தந்தன. பைபர் கேபிள்களை அமைத்து இணைய இணைப்பினை வழங்குவதைக் காட்டிலும், பரந்து விரிந்த ஆகாயத்தைப் பயன்படுத்தி, குறைந்த செலவில், உலகம் முழுமைக்கும் இணைய இணைப்பினை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற இலக்குடன் இந்த பலூன் இணைய இணைப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பல நூறு இணைய பலூன்களை, விண்வெளியில், வளையங்களாக நிற்க வைத்து, இணைப்பு கொடுத்து, உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் இணைய இணைப்பு வழங்குவதே, இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என 




இத்திட்டத் தலைவர் மைக் கேசிடி குறிப்பிட்டுள்ளார். 
இந்த திட்டத்தின் செயல்பாட்டினை சோதனை செய்திட, உலகின் பல இடங்களில் இருந்து, தன்னார்வ இணையப் பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் வீடுகளில், பாஸ்கட் பால் அளவிலான, சிகப்பு ரிசீவர்கள் பொருத்தப்பட்டன. பயனாளர்களுக்குத் திட்டத்தின் முழு விபரமும் வழங்கப்படவில்லை. இணைய இணைப்பு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களே திரட்டப்பட்டன.
இந்த இணைய பலூன்கள், 3ஜி தகவல் வேகத்தைக் கொண்டுள்ளன. உலகில், மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத இடங்களில் ஏற்படும் பேரிடர் காலங்களில், இந்த இணைய இணைப்பு பலூன்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வது எளிதாகும். இதனால் உயிர் இழப்பு தடுக்கப்படும்.
இவ்வகை இணைப்பின் மூலம், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால், கூகுள் போன்ற இணைய விளம்பர நிறுவனங்களின் வருமானம் பெருகும். இந்த திட்டத்தில், எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என கூகுள் அறிவிக்கவில்லை. 
பதினெட்டு மாத கடும் உழைப்பு மற்றும் ஆராய்ச்சிக்குப் பின்னர் இந்த இணைய பலூன்களின் செயல்பாடு சாத்தியமாகியுள்ளது. 
கிறைஸ்ட் சர்ச் என்ற இடத்திலிருந்து இந்த பலூன்கள் ஏவப்பட்டன. இந்த இடம் இந்த திட்டத்திற்கேற்ற இடமாக, கூகுள் தேர்ந்தெடுத்தது. 2011 ஆம் ஆண்டு, ஏற்பட்ட நில அதிர்வில், இந்த இடத்தில் வாழ்ந்த மக்கள், உலகின் மற்ற இடங்களுடன் தொடர்பற்ற நிலையில், பல வாரங்கள் வாழ்ந்தனர். நில அதிர்வில், 185 பேர் பலியாயினர். இது போன்ற பேரிடர் நிகழ்வுகளில், இணைய பலூன் இணைப்பு செயல்பட்டு, மக்கள் இறப்பதைத் தடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய தகவல்களையும், உதவியையும் வழங்க இயலும்.

























மைக்ரோசாப்ட் பிங் ட்ரான்ஸ்லேட்டர் - மொழி பெயர்ப்பு சாதனம் தற்போது 40 மொழிகளை சப்போர்ட் செய்கிறது.


விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சாதனங்களில் பயன்படுத்த
மொழி பெயர்ப்பு சாதனம் ஒன்றை, சென்ற வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனம் 





வெளியிட்டுள்ளது. இந்த மொழி பெயர்ப்பு சாதனம் தற்போது 40 மொழிகளை சப்போர்ட் செய்கிறது. தொடர்ந்து மொழிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான பலவகை மொழி பெயர்ப்பு டூல்ஸ்கள் அனைத்தும் இதில் ஒருமுகப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன. 
டெக்ஸ்ட் மொழி பெயர்ப்பு, கேமரா மொழி பெயர்ப்பு, டெக்ஸ்ட் டு ஸ்பீச் என அனைத்து வகை மொழி பெயர்ப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. டெக்ஸ்ட் மொழி பெயர்ப்பு என்பது நேரடியானது. மொழி பெயர்க்கப்பட வேண்டிய 






டெக்ஸ்ட்டினை டைப் செய்து, எந்த மொழியில் இது மொழி பெயர்க்கப்பட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால், டெக்ஸ்ட் மொழி பெயர்க்கப்பட்டு கிடைக்கும். இது 40 மொழிகளுக்குக் கிடைக்கிறது.
கேமரா மொழி பெயர்ப்பு என்பது, நமக்குப் பொருள் விளங்காத டெக்ஸ்ட்டை, கேமராவில் படமாகப் பிடித்து, அதனை உள்ளீடாக இட்டு, தேவைப்படும் மொழியில் அதன் மொழி மாற்றத்தினைப் பெறுவதாகும். அடையாளங்கள்,






 சில மெனுக்கள், செய்தித்தாள் அல்லது அச்சடிக்கப்பட்ட எந்த ஒரு டெக்ஸ்ட் என எதனையும் படம் பிடித்து, உள்ளீடாகத் தந்து மொழி பெயர்ப்பினைப் பெறலாம்.
டெக்ஸ்ட் டு ஸ்பீச் என்பது, டெக்ஸ்ட் ஒன்றை, அதனைத் தாய் மொழியாகக் 







கொண்ட ஒருவரின் உச்சரிப்பில் மொழி பெயர்ப்பாகப் பெறுவது. இணைய இணைப்பின்றியும் மொழி பெயர்ப்பினைப் பெறலாம். இதனால், அதிகச் செலவில் ரோமிங் கட்டணம் செலுத்துவதனைத் தவிர்க்கலாம். இதற்கென உள்ள மொழித் தொகுதிக்கான டூல்ஸ்களை டவுண்லோட் செய்தால் போதும். 
விண்டோஸ் ஸ்டோர் அப்ளிகேஷன் எதனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், அங்கிருந்தவாறே, இந்த மொழி பெயர்ப்பு டூல்ஸ்





 பயன்படுத்தி பயன் பெறலாம். வேறு ஒரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், இடது அல்லது வலது திரையில், பிங் ட்ரான்ஸ்லேட்டரை இயக்கி, தேவையான மொழி பெயர்ப்பு பணியினை மேற்கொள்ளலாம்.






ஒரு மொழி பெயர்ப்பு பணியில் வேறு எதனை நாம் எதிர்பார்க்கப் போகிறோம்!. இவையே போதும். இருப்பினும் கூகுள் ட்ரான்ஸ்லேட் டூல் ஒரு விஷயத்தில், இதனை மிஞ்சி நிற்கிறது. தற்போதைய கணக்குப்படி 71 மொழிகளில், கூகுள் ட்ரான்ஸ்லேட் மொழி பெயர்க்கிறது.



























கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் பகுதி 2 - Gmail shortcut keys



14. a(Reply All): மெசேஜ் பெறும் அனைவருக்கும் பதில் அனுப்பப்படும். இதையும்
ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால் பதில் அனைத்தும் புதிய 





விண்டோவில் உருவாக்கப்படும்.
15. f (forwarding): மெசேஜ் பார்வேர்ட் செய்யப்படும். இதனுடன் ஷிப்ட் இணைந்து அழுத்தினால் பார்வேர்ட் செய்யப்படும் மெசேஜ் புதிய விண்டோவில் கிடைக்கும். 
16. <Esc>: கர்சர் ஏதேனும் இன்புட் பீல்டில் இருந்தால், அதிலிருந்து அதனை வெளியே கொண்டு வரும்.





17. <Ctrl> + s: ஒரு மெசேஜ் கம்போஸ் செய்கையில் அப்போதைய டெக்ஸ்ட்டை ஒரு ட்ராப்ட்டாக சேவ் செய்திடும். இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்துகையில், கர்சர் மெசேஜ் விண்டோவினுள் இருக்க வேண்டும். மெசேஜ் அமைக்கும் கட்டம் To, CC, BCC, அல்லது Subject ஆகிய பீல்டுகளில் ஒன்றில் இருக்க வேண்டும். 





18. # (Delete): குறிப்பிட்டவையை அழிக்கும். 
19. l (label): லேபிள் கான்வெர்சேஷன் மெனுவைத் திறக்கும். இதன் மூலம் கான்வெர்சேஷன் ஒன்றுக்கு லேபிள் கொடுக்கலாம்.
20. v (Move to): இன்பாக்ஸிலிருந்து கான்வெர்சேஷன் ஒன்றை லேபிள், ஸ்பாம் அல்லது ட்ரேஷ் பெட்டிக்கு அனுப்பும்.
21. <Shift> + i: மெசேஜ் ஒன்றை படித்ததாக (Read) மார்க் செய்திடும். பின் அடுத்த மெசேஜிற்குச் செல்லும்.
22. <Shift> + u: மெசேஜ் ஒன்றை படிக்காததாக (Unread) மார்க் செய்திடும். பின் அடுத்த மெசேஜிற்குச் செல்லும்.




23. [: ஆர்க்கிவ் அனுப்பி முந்தைய மெசேஜுக்குச் செல்ல
24. ]: ஆர்க்கிவ் அனுப்பி அடுத்த மெசேஜுக்குச் செல்ல
25. z: அதற்கு முன் மேற்கொண்ட செயல்பாட்டினை நீக்குகிறது.
26. <Shift> + n: புதிய மெசேஜ் வந்திருந்தால் உங்கள் கான்வெர்சேஷனை அப்டேட் செய்திடும்.





27. q: கர்சரை சேட் சர்ச் பாக்ஸுக்குக் கொண்டு செல்லும்.
28. y: தற்போதைய வியூவிலிருந்து மெசேஜ் அல்லது கான்வர்சேஷனை மாற்றும். அதாவது இன்பாக்ஸில் இருந்தபடி இதனைக் கொடுத்தால்,






 ஆர்க்கிவ் கொண்டு செல்லும். ஸ்டார்டு பட்டியலில் இருந்தபடி கொடுத்தால், ஸ்டார் நீக்கும். ட்ரேஷ் பாக்ஸில் இருந்தபடி கொடுத்தால், இன்பாக்ஸ் கொண்டு செல்லும். ஏதேனும் லேபிள் கீழாக உள்ள மெசேஜுக்கு இதனைக் கொடுத்தால், அந்த லேபிளை மெசேஜிலிருந்து நீக்கும்.
29. (.) :புள்ளி அடையாளம்: ‘More Actions’ ட்ராப் டவுண் மெனுவினைக் கொடுக்கும். 


























30. ?:கீ போர்டு ஷார்ட் கட் மெனுவினைக் கொடுக்கும்.

கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் - Gmail shortcut keys பகுதி 1


இன்று பரவலாக அனைவரும் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக கூகுள் இமெயில் உள்ளது. இதற்கான ஷார்ட் கட் கீ

தொகுப்புகளை இங்கு பார்க்கலாம். மவுஸின் கர்சரை அங்கும் இங்கும் 





எடுத்துச் செல்ல விரும்பாமல், கீ போர்டு மூலம் செயல்பட விரும்பும் வாசகர்களுக்கு இவை பயனளிக்கும். கீழே கீயும், ஆங்கிலத்தில் கட்டளைச் சொல்லும், அதற்கான செயல்பாடும் தரப்பட்டுள்ளன. முதலில் இந்த ஷார்ட் கட் கீகளைச் செயல்படுத்த, கூகுள் மெயில் தளத்தில் சென்று, செட்டிங்ஸ் பக்கத்தில், ஷார்ட்கட் கீகளை இயக்கத் தேவையான வகையில் செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். 

1. c (Compose): புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.





2. Shift> + c: புதிய விண்டோவில் புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.
3. /<(Search): உங்களுடைய கர்சரை சர்ச் பாக்ஸில் கொண்டு சென்று வைத்திடும். 
4. k : புதியதொரு கான்வெர்சேஷனுக்கு இமெயிலுக்கு – செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்.




5. j: முந்தைய பழைய கான்வெர்சேஷனுக்கு – இமெயிலுக்கு – செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்.
6. n: அடுத்த மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும்.
7. p: முந்தைய மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும். விரிந்த நிலையில் என்டர் தட்ட சுருங்கும். இவை இரண்டும் கான்வெர்சஷேன் வியூவில் இருந்தால் தான் செயல்படும்.





8. o அல்லது என்டர்: ஒரு கான்வெர்சேஷனைத் திறக்கும்; திறந்திருந்தால் மூடும். 
9. u: கான்வெர்சேஷன் லிஸ்ட்டுக்குத் திரும்பச் செல்லும். பேஜை ரெப்ரெஷ் செய்து, இன்பாக்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
10. e(archive): எந்த வியூவில் இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்படும் கான்வெர்சேஷன்கள் அனைத்தையும் ஆர்க்கிவ் கொண்டு செல்லும்





.
11. s (fixing a star): ஒரு மெசேஜ் அல்லது கான்வெர்சேஷனுக்கு ஸ்டார் அடையாளம் அளிக்கிறது. இதன் மூலம் அந்த குறிப்பிட்ட கான்வெர்சேஷன் தனி அந்தஸ்து பெறுகிறது.
12. !:(Spam) குறிப்பிட்ட மெசேஜை ஸ்பாம் எனக் குறியிட்டு உங்கள் 




கான்வெர்சேஷன் லிஸ்ட்டிலிருந்து அதனை வெளியே தள்ளுகிறது.
13. r: (Reply) மெசேஜ் அனுப்பியருக்கு பதில் அனுப்பப்படும். இதையே ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால், பதில் மெசேஜ் புதிய விண்டோவில் இருக்கும்.


























விண்டோஸ் 8.1 சோதனைத் தொகுப்பு பயன்படுத்திப் பார்க்க மைக்ரோசாப்ட் எச்சரிக்கை?


ஜூன் 26 முதல், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தின் முன் தொகுப்பு அல்லது சோதனை தொகுப்பு, விண்டோஸ் 8 வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க







இருக்கிறது. பல மாற்றங்களை எதிர்நோக்கி இருக்கும் வாடிக்கையாளர்கள் நிச்சயம் இவற்றைப் பயன்படுத்தி சோதனை செய்திட ஆவலாக உள்ளனர். ஆனால், இது குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை ஒன்றைத் தற்போது 




தந்துள்ளது. இந்த சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்திப் பார்க்க ஆசைப்பட்டால், நீங்கள் ஏற்கனவே விண்டோஸ் 8 சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொண்டிருக்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தையும், மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இது, விண்டோஸ் சிஸ்டத்தினை ரீ இன்ஸ்டால் செய்வதைப் போன்றதாகும். 





இது, நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிரமம் தரும் வேலையாகும். ஏனென்றால், அதிகமான எண்ணிக்கையில் பல அப்ளிகேஷன் புரோகிராம்களை, ஒவ்வொருவரும் இன்ஸ்டால் செய்திருப்பார்கள். எனவே, நிச்சயம், இந்த சோதனைத் தொகுப்பினைக் கட்டாயம் பயன்படுத்திப் பார்க்க வேண்டுமா? என்ற எண்ணத்திற்குத் தள்ளப்படுவார்கள். மேலும், மைக்ரோசாப்ட், இந்த சோதனைத் தொகுப்பு, விண்டோஸ் ஆர்வலர்களுக்கும், 





தகவல் தொழில் நுட்பத்தில் பணி புரிபவர்களுக்கு மட்டுமே என்பதனைத் தெளிவு படுத்தியதுள்ளது. 
மேலும், விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், நேரடியாக, 




விண்டோஸ் 8.1 இறுதிப் பதிப்பு வெளியாகும் போது, நேரடியாக அதற்கு மாறினால், தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை ரீ இன்ஸ்டால் செய்திடத் தேவை இருக்காது.