விண்டோஸ் 8.1 சோதனைத் தொகுப்பு பயன்படுத்திப் பார்க்க மைக்ரோசாப்ட் எச்சரிக்கை?


ஜூன் 26 முதல், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தின் முன் தொகுப்பு அல்லது சோதனை தொகுப்பு, விண்டோஸ் 8 வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க







இருக்கிறது. பல மாற்றங்களை எதிர்நோக்கி இருக்கும் வாடிக்கையாளர்கள் நிச்சயம் இவற்றைப் பயன்படுத்தி சோதனை செய்திட ஆவலாக உள்ளனர். ஆனால், இது குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை ஒன்றைத் தற்போது 




தந்துள்ளது. இந்த சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்திப் பார்க்க ஆசைப்பட்டால், நீங்கள் ஏற்கனவே விண்டோஸ் 8 சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொண்டிருக்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தையும், மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இது, விண்டோஸ் சிஸ்டத்தினை ரீ இன்ஸ்டால் செய்வதைப் போன்றதாகும். 





இது, நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிரமம் தரும் வேலையாகும். ஏனென்றால், அதிகமான எண்ணிக்கையில் பல அப்ளிகேஷன் புரோகிராம்களை, ஒவ்வொருவரும் இன்ஸ்டால் செய்திருப்பார்கள். எனவே, நிச்சயம், இந்த சோதனைத் தொகுப்பினைக் கட்டாயம் பயன்படுத்திப் பார்க்க வேண்டுமா? என்ற எண்ணத்திற்குத் தள்ளப்படுவார்கள். மேலும், மைக்ரோசாப்ட், இந்த சோதனைத் தொகுப்பு, விண்டோஸ் ஆர்வலர்களுக்கும், 





தகவல் தொழில் நுட்பத்தில் பணி புரிபவர்களுக்கு மட்டுமே என்பதனைத் தெளிவு படுத்தியதுள்ளது. 
மேலும், விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், நேரடியாக, 




விண்டோஸ் 8.1 இறுதிப் பதிப்பு வெளியாகும் போது, நேரடியாக அதற்கு மாறினால், தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை ரீ இன்ஸ்டால் செய்திடத் தேவை இருக்காது.