இலவச 15 ஜிபி இடம் தரும் கூகுள் - மற்றவை போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன

{{{{{{15 GB}}}}}}

தன் ஜிமெயில் தளத்தில், அதுவரை யாரும் தராத வகையில், அதிகக்






கொள்ளளவில், இலவசமாக ஹார்ட் டிஸ்க் இடம் தந்து கூகுள் பிரபலமானது. தற்போது கூகுள் இலவசமாக இதுவரை தந்து வந்த டிஸ்க் இடத்தின் அளவை 15 ஜிபியாக உயர்த்தியுள்ளது. கூகுள் சந்தாதாரர்கள் அனைவரும், இனி ஜிமெயில் அக்கவுண்ட்டில் 10 ஜிபி இடமும், கூகுள் ட்ரைவ், கூகுள் ப்ளஸ் மற்றும் போட்டோக்கள் பதிந்து வைக்க, மேலும் 5 ஜிபி இடமும் பெறலாம். இந்த மூன்று சேவைக்குமாக மொத்தமாக 15 ஜிபி இடம் வழங்கப்படுகிறது. ஒரு பிரிவில் கூடுதலாகப் பயன்பாடு இருந்து, மற்றதில் குறைவாக 




இருந்தால், குறைவாக உள்ள பிரிவின் இடம், அதிகமாகப் பயன்படுத்தப்படும் பிரிவிற்குப் பயன்படுத்தப் படலாம். எடுத்துக் காட்டாக, கூகுள் ட்ரைவில் அதிகமான பைல்களை வைத்து, அதில் உள்ள 5 ஜிபி இடம் அதற்குப் 




போதுமானதாக இல்லை எனில், ஜிமெயில் பிரிவில் இடம் இருந்தால், அதனை எடுத்துக் கொண்டு, அதில் பைல்கள் சேவ் செய்யப்படும். இவ்வாறே, கூகுள் ப்ளஸ் போட்டோ சேவையில் இடம் தேவை என்றாலும், மற்ற இரு பிரிவுகளில் இடம் இருப்பின் இடம் எடுத்துக் கொள்ளலாம்.





15 ஜிபிக்கும் மேலாக இடம் தேவைப்படுபவர்கள் என்ன செய்திட வேண்டும்? 5 டாலர் வாங்கிக் கொண்டு, 100 ஜிபி இடம் ஒரு மாதம் பயன்படுத்த கூகுள் அனுமதிக்கிறது. அப்படியானால், கட்டணம் செலுத்தினால், அதிக பட்ச இடமாகக் கூகுள் எவ்வளவு தருகிறது என்று அறிய ஆவலா? மாதத்திற்கு 800 டாலர் செலுத்தி, 16 டெரா பைட் இடத்தினை கூகுளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். 

சென்ற ஆண்டில், கூகுள் அதன் கூகுள் ட்ரைவ் சேவையினைத் தொடங்கிய காலம் முதல், க்ளவுட் சேவைப் பிரிவில் இயங்கும் மற்ற பிரிவினருக்குப் போட்டியாக, இடம் வழங்குவதில் முதல் இடத்தைக் கொண்டிருந்தது. 




இதனால், மற்ற சேவை நிறுவனங்களும், அதே போல் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் மற்றும் ஆப்பிள் ஐ-க்ளவ்ட் இந்த வகையில் போட்டியைச் சந்தித்தன. ஆனால், சிறிய நிறுவனங்களான ட்ராப் பாக்ஸ், பாக்ஸ், சுகர்சிங்க் மற்றும் யு சென்ட் இட் ஆகியவை போட்டியைச் சமாளிக்க 




முடியாமல் திணறுகின்றன. ட்ராப் பாக்ஸ் 2ஜிபி இடம் இலவசமாகத் தருகிறது. ஏறத்தாழ 10 டாலருக்கு, ஒரு மாதம் பயன்படுத்த 50 ஜிபி இடம் தருகிறது. மைக்ரோசாப்ட் ட்ரைவ் 7 ஜிபி இடம் இலவசமாகத் தருகிறது. இவை அடுத்து என்ன செய்யப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
























பகுதி:3 - பாதுகாப்பான பிரவுசிங்(safe Browsing) - பாதுகாப்பிற்கு கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகள் SAFE





கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் சாதனப் புழக்கம் ஆகிய அனைத்தும், பலவகையான அச்சுறுத்தல்களால் சூழப்பட்டுள்ளன. இவை ஒரே மாதிரியாக
இல்லாமல் பல வகையாய் வடிவமைக்கப்படுவதால், நாம் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைகளும் பல வகைகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பாதுகாப்பான பிரவுசிங், கம்ப்யூட்டர் பயன்பாடு, இணைய உலா ஆகியவற்றைப் பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து பல தகவல்கள் தரப்பட்டு வருகின்றன. கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றன.







அறியாத அழைப்புகள்
தேவையற்ற, நாம் அறியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை அறவே ஒதுக்க வேண்டும். அறிந்தவர்களிடமிருந்து கூட எதிர்பாராத வேளைகளில் 




வரும் அழைப்புகளைச் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்

வெவ்வேறு பாஸ்வேர்ட்




 இணைய செயல்பாடுகள் அனைத்திற்குமாக, ஒரே பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்த வேண்டாம். ஏதேனும் ஒரு பிரவுசரில் இது கண்டறியப்பட்டால், நீங்கள் முற்றிலுமாக உங்களின் தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும்.




 பாஸ்வேர்ட் சோதனை
பே பால் மற்றும் கூகுள் போன்ற நிறுவன தளங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளில் இப்போதெல்லாம் இரு நிலை பாதுகாப்பு சோதனை வசதி 




தரப்பட்டுள்ளது. இவற்றில் நுழையும் போது, உங்கள் மொபைல் போனுக்கு பாதுகாப்பு குறியீடு அனுப்பப்பட்டு, அதன் மூலமே, நீங்கள் இவற்றை அணுகும் 





வகையில் இது அமைக்கப்படுகிறது. இதனை அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்


























பகுதி:2 - பாதுகாப்பான பிரவுசிங்(safe Browsing) - பாதுகாப்பிற்கு கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகள் SAFE

கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் சாதனப் புழக்கம் ஆகிய அனைத்தும், பலவகையான அச்சுறுத்தல்களால் சூழப்பட்டுள்ளன. இவை ஒரே மாதிரியாக


இல்லாமல் பல வகையாய் வடிவமைக்கப்படுவதால், நாம் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைகளும் பல வகைகளில் இருக்க வேண்டிய நிலை 





ஏற்படுகிறது. பாதுகாப்பான பிரவுசிங், கம்ப்யூட்டர் பயன்பாடு, இணைய உலா ஆகியவற்றைப் பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து பல தகவல்கள் தரப்பட்டு வருகின்றன. கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றன.
செக்யூரிட்டி ஸ்கேன் செயல்படுத்துக




வாரம் ஒருமுறையாவது, ஹார்ட் ட்ரைவ் முழுவதும் ஸ்கேன் செய்திட வேண்டும். என்னதான், விண்டோஸ் மலிசியஸ் சாப்ட்வேர் பாதுகாப்பு மற்றும் ஆண்ட்டி வைரஸ் இயங்கினாலும், இந்த சோதனையையும் மேற்கொள்வது அவசியம்.




யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் செயல்படுத்துக
எக்ஸ்பி தொடங்கி, பின்னர் வந்த சிஸ்டங்களில் சந்தித்த அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, யூசர் அக்கவுண்ட் தற்போது 




விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 சிஸ்டங்களில் செயல்படுகின்றன. இவற்றைச் செயல்படுத்துவது அவசியம். 





விண்டோஸ் ஆண்ட்டி வைரஸ் சாதனங்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைத் தந்துள்ளது. இது தவிர, கட்டணம் செலுத்திப் பெறும் வகையில் பல தர்ட் 





பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பயன்படுத்தினாலும், மைக்ரோசாப்ட் தந்துள்ள புரோகிராமினையும் பயன்படுத்த வேண்டும். 



























பாதுகாப்பான பிரவுசிங்(safe Browsing) - பாதுகாப்பிற்கு கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகள் பகுதி:1



கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் சாதனப் புழக்கம் ஆகிய அனைத்தும், பலவகையான அச்சுறுத்தல்களால் சூழப்பட்டுள்ளன. இவை ஒரே மாதிரியாக




இல்லாமல் பல வகையாய் வடிவமைக்கப்படுவதால், நாம் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைகளும் பல வகைகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பாதுகாப்பான பிரவுசிங், கம்ப்யூட்டர் பயன்பாடு, இணைய உலா ஆகியவற்றைப் பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து பல தகவல்கள் தரப்பட்டு வருகின்றன. கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றன.





சரியான ஸ்டாண்டர்ட் விண்டோஸ் அக்கவுண்ட்

விண்டோஸ் எக்ஸ்பியில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் என்று ஒன்று அறிமுகப்படுத்தியது. ஏனென்றால், அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் யூசர் அக்கவுண்ட் வரையறை செய்யப்பட்டு இருந்தது. எனவே, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் ஸ்டாண்டர்ட் 




அக்கவுண்ட் என்று அறிமுகப்படுத்தப்பட்டு அட்மினிஸ்ட்ரேட்டர் இயக்கம் தந்த பிரச்னை தீர்க்கப்பட்டது. இதன் மூலம் சரியான அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட் கொடுத்து மட்டுமே செட்டிங்ஸ் மாற்றப்பட முடியும். கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மற்றும் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்களால் அதிக அளவில் மாற்றங்களை ஏற்படுத்த முடிவதில்லை. இந்த User Account Control வசதியை நாம் மேற்கொள்ள வேண்டும்.

பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் யூசர் அக்கவுண்ட்





ஒவ்வொரு யூசர் அக்கவுண்ட்டிற்கும் ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கும் முறையின் மூலம், நம் அனுமதியின்றி சிஸ்டத்திற்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. விண்டோஸ் விஸ்டா மற்றும் 7ல், Control Panel, User Accounts and Family Safety, User Accounts எனச் சென்று ‘Create a password for your account’ என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம். 

விண்டோஸ் அப்டேட் செட்டிங்ஸ்




 சிஸ்டத்தினை அப்டேட் செய்திடுக என்று மெசேஜ் பெறுவது நமக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால், இதனை அலட்சியப்படுத்துவது அதற்குச் சரியான தீர்வல்ல. விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 சிஸ்டங்களில், கண்ட்ரோல் பேனல் திறந்து, System and Security என்பதில் கிளிக் செய்திடுக. அதன் பின்னர் Windows Upate அதன் பின் Change settings எனச் சென்று, அப்டேட் செய்திடுவதற்கான செட்டிங்ஸ் அமைக்கவும்.


























குரோம் பிரவுசர் செட்டிங்ஸ் - பகுதி:1 Chrome Browser


பிரவுசர் பயன்பாட்டில், குரோம் பிரவுசர் தொடர்ந்து தன் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு இணையாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த




பயனாளர்களில், இரண்டும் 30 சதவீதத்திற்கும் மேலான பங்கினைக் கொண்டிருக்கின்றன. 

குரோம் பிரவுசரின் தொடர்ந்த பரவலுக்குக் காரணங்களாக நாம் பல சிறப்புகளைக் கூறலாம். இதன் வேகத்திற்கு அடுத்தபடியாக, இணைய தளம் மற்றும் தேடலுக்கென ஒரே விண்டோ இயக்கம் பலரைக் கவர்ந்துள்ளது. 




தேடலுக்கென தனியே விண்டோவினை நாம் இதில் தேட வேண்டியதில்லை. இந்த அமைப்பிலேயே நாம் இன்னும் சிலவற்றை நம் விருப்பப்படி அமைத்திடலாம். அதன் மூலம் நாம் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி, விரைவாக பிரவுசரைச் செயல்பட வைத்திடலாம். அவற்றை இங்கு பார்க்கலாம்.



பக்கங்களை எளிதாக படிக்ககுரோம் பிரவுசர் காட்டும் இணைய தளப்பக்கங்களின் டெக்ஸ்ட் மற்றும் 





படங்களை நாம் விரும்பும் அளவில், காண்பதற்குத் தெளிவாக இருக்கும் வகையில் அமைத்திடலாம். கண்ட்ரோல் (Ctrl) கீயினை அழுத்திக் கொண்டு, மவுஸின் வீலை முன்புறமாக நகர்த்தினால், இவை பெரிதாகவும், பின்புறமாக சுழற்றினால், சிறியதாகவும் மாறும். நம் தேவைக்கேற்ப இதனை அமைத்து நிறுத்தலாம். உங்களுடைய மவுஸில் ஸ்குரோல் வீல் இல்லை என்றால், பிரவுசரின் மேல் வலது மூலையில் உள்ள ஸ்பானர் படத்தில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் ஸூம் செட்டிங்ஸில் + மற்றும் - பட்டன்களை 




அழுத்தி இதனை அமைக்கலாம். 
அனைத்து இணைய தளங்களுக்குமான எழுத்தின் அளவையும் இந்த வகையில் அமைத்திடலாம். ஸ்பானர் ஐகானில் கிளிக் செய்து, Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து ‘Show advanced settings’ என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் கீழாகச் சென்று, Web content என்ற பிரிவினை அடையவும். இங்கு எழுத்தின் அளவை அமைத்திட Large or Very Large என இரு ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, அனைத்து இணைய தளங்களிலும் டெக்ஸ்ட் காட்டப்படும் அளவினை அமைக்கலாம். 
மற்ற பிரவுசர்களில் உள்ளது போலவே, குரோம் பிரவுசரிலும், எப்11 கீ அழுத்தி, மானிட்டர் திரை முழுவதும், இணைய தளம் தோன்றும் வகையில் அமைக்கலாம்.

தொடக்க நிலை தேவைகள்
மாறா நிலையில், குரோம் பிரவுசரில் விண்டோ ஒன்று திறக்கப்படுகையில், 





பிரவுசர் புதிய டேப் (New Tab) பக்கத்தினைக் காட்டும். இது காலியாக உள்ள பகுதி. இதில் நீங்கள் அடிக்கடி சென்று பார்த்த இணையதளங்களின் முகப்பு பக்கங்களின் படங்கள் இருக்கும். இதனையும் உங்கள் விருப்பப்படி அமைக்கலாம். ஸ்பேனர் ஐகான் கிளிக் செய்து, Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து On startup என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு ‘Open a specific page or set of pages’ என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். 





தொடர்ந்து அடுத்து உள்ள Set pages என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதனை அடுத்து ‘Use current pages’ என்பதில் கிளிக் செய்திடலாம். அல்லது மாறாக, நீங்கள் விரும்பும் இணையதளத்தினை ஹோம்பேஜாக மாற்ற, அந்த இணைய தளத்தின் முகவரியை டைப் செய்திடலாம். இங்கு, ஒன்றுக்கு மேற்பட்ட இணைய தளங்களின் முகவரிகளையும் டைப் செய்து அமைக்கலாம். பிரவுசர் திறக்கப்படும் போது, இவை அனைத்தும், ஒவ்வொரு டேப்பில் திறக்கப்படும். இங்கு இன்னொரு ஆப்ஷனையும் பார்க்கலாம். நீங்கள் இறுதியாகப் பார்த்த இணைய தளங்களையே பெற்று, தொடர்ந்து பணியாற்ற விரும்பினால், ‘Continue where I left off’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம்.


























பகுதி:4 - விண்டோஸ்: தடைகளை தகர்க்க - தீர்வுகளைக் காண்பதற்கு முன்னால், ஓர் உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும் new

தீர்வுகளைக் காண்பதற்கு முன்னால், ஓர் உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும். விண்டோஸ் இயக்கத்தின் வேகத்திறன் குறை வதனை




யாராலும் தடுக்க முடியாது. நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால், 
பைல்களை உருவாக்குவோம்; அழிப்போம். புதியதாக எழுதுவோம். இணையம் சென்று, ட்ரைவர் புரோகிராம்களை அப்டேட் செய்வோம். சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்திடுவோம். வேண்டாத 





சாப்ட்வேர் தொகுப்புகளை நீக்குவோம். இதற்குத் தானே கம்ப்யூட்டர் உள்ளது என்கிறீர்களா! ஆம், ஆனால், இந்த வேலைகளே, டிஸ்க்கைச் சிதறலாக அமைத்து, குப்பை பைல்களைக் குவித்து, இன்னும் கம்ப்யூட்டர் இயங்கு திறனைக் குறைக்கும் அனைத்தையும் கொண்டுவிடும். 




இருப்பினும், கம்ப்யூட்டரை நல்லதொரு முறையில் அணுகினால், நிச்சயமாக, கம்ப்யூட்டரின் செயல் திறன் குறைவதைத் தள்ளிப்போடலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.




ஹார்ட் டிரைவ் டிபிராக்
கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினை குறிப்பிட்ட கால இடைவெளியில் டிபிராக் செய்திட வேண்டும். இந்தக் கால இடைவெளி, உங்கள் வேலையின் 




தன்மையைப் பொறுத்தது. அடிக்கடி, புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்பவரகவும், பைல்களை நீக்கு பவராகவும் இருந்தால், ட்ரைவினை அடிக்கடி டிபிராக் செய்வதும் மேற்கொள்ளப்பட வேண்டும். 





விண்டோஸ் சிஸ்டம் அனைத்திலும் இந்த டிபிராக் செய்திடும் பணி எளிதாகவே நிறைவேறும் வகையில் வசதிகள் தரப்பட்டுள்ளன. 




























பகுதி:3 - விண்டோஸ்: தடைகளை தகர்க்க - தீர்வுகளைக் காண்பதற்கு முன்னால், ஓர் உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும்.


தீர்வுகளைக் காண்பதற்கு முன்னால், ஓர் உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும். விண்டோஸ் இயக்கத்தின் வேகத்திறன் குறை வதனை
யாராலும் தடுக்க முடியாது. நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால், 
பைல்களை உருவாக்குவோம்; அழிப்போம். புதியதாக எழுதுவோம். இணையம் சென்று, ட்ரைவர் புரோகிராம்களை அப்டேட் செய்வோம். சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்திடுவோம். வேண்டாத சாப்ட்வேர் தொகுப்புகளை நீக்குவோம். இதற்குத் தானே கம்ப்யூட்டர் உள்ளது என்கிறீர்களா! ஆம், ஆனால், இந்த வேலைகளே, டிஸ்க்கைச் சிதறலாக அமைத்து, குப்பை பைல்களைக் குவித்து, இன்னும் கம்ப்யூட்டர் இயங்கு திறனைக் குறைக்கும் அனைத்தையும் கொண்டுவிடும். 
இருப்பினும், கம்ப்யூட்டரை நல்லதொரு முறையில் அணுகினால், நிச்சயமாக, கம்ப்யூட்டரின் செயல் திறன் குறைவதைத் தள்ளிப்போடலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.




டேட்டா பைல் தனியாகஅனைத்து டேட்டா மற்றும் பெர்சனல் பைல்களையும், சிஸ்டம் அல்லாத ட்ரைவிற்கு மாற்றவும். குறிப்பாக, சிஸ்டம் ட்ரைவான, சி ட்ரைவில் உள்ள மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, டேட்டா ட்ரைவிற்கு மாற்றவும். 





விண்டோஸ் 7 சிஸ்டம் எனில், ஸ்டார்ட் சென்று ரைட் கிளிக் செய்திடவும். உங்கள் யூசர் நேம் தேர்ந்தெடுத்து திறக்கவும். பின்னர், அனைத்து போல்டர்களுக்கும் சென்று, கீழே தந்துள்ளபடி செயல்படவும். போல்டர் ஒன்றில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Properties தேர்ந்தெடுக்கவும். பின்னர் Location டேப் அழுத்தி, தொடர்ந்து Move அழுத்தவும். இனி, நீங்கள் இவற்றை எங்கு அமைக்க விரும்புகிறீர்களோ, அதனை பிரவுஸ் செய்து தேர்ந்தெடுக்கவும். அங்கு, எந்த போல்டரைக் கொண்டு செல்கிறீர்களோ, போல்டரின் அதே பெயர் தரப்பட வேண்டும். பின்னர், சேவ் செய்து ஓகே அழுத்தி வெளியேறவும். இதன் மூலம், உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம், இனி உங்கள் பைல்கள் எங்கு, எந்த போல்டரில் சேமிக்கப்பட வேண்டும் என்பதனைத் தெரிவிக்கிறீர்கள். இனி உருவாக்கப்படும் பைல்கள் 





அனைத்தும், புதிய இடத்தில் உள்ள போல்டரிலேயே சேவ் செய்யப்படும். பழைய போல்டரில் டேட்டா பைல் இருந்தால், அவற்றை நீங்களாக கட் செய்து, புதிய போல்டரில் பேஸ்ட் செய்திட வேண்டும். 

ராம் மெமரி கிளீன்





விண்டோஸ் இயக்கத்தில் பூட் மெனு என ஒன்று உள்ளது. சிஸ்டம் தொடங்குகையில், இதில் உள்ள புரோகிராம்கள் இயக்கப்படும். பல புரோகிராம்கள், இந்த பூட் மெனுவில் சென்று தங்களை ஒட்டிக் கொள்ளும். இதனால், ராம் நினைவகத்தின் இடம் எந்தவிதப் பயனுமின்றி வீணாகும். 




விண்டோஸ் இயக்க வேகம் மட்டுப்படுத்தப்படும். இதற்கு, ஸ்டார்ட் மெனு சென்று, ரன் கட்டத்தில் msconfig என டைப் செய்திடவும். Startup போல்டர் திறக்கப்படும். அதில், உங்களுக்குத் தேவைப்படாத புரோகிராம் இருப்பின், அதனை நீக்கவும்.