எக்ஸெல் டிப்ஸ் Exel Tips 1.5.2013


எக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்: தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில்







உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.

எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனைவரும் பொதுவான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்களில் உள்ள டேட்டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிகமான இடத்தை எடுத்திருக்காது. இதனால் டேட்டா உள்ள செல்களில் அதிகமான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத்தினைத்தரும்.




இந்த பிரச்னையைத் தீர்க்க எக்ஸெல் இரண்டு வழிகளைத் தருகிறது. டெக்ஸ்ட்டை நெட்டாக அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக்கலாம். எந்த செல்களில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும்.இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பல டேப்களில் அலைன்மெண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட்டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத்திட வழிகள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாமல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.




எக்ஸெல் பிட்ஸ்: தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். 
Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும். 
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft + Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும். 




ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும். 
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும். 
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப் பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.




எக்ஸெல் தொகுப்பில் தகவல்களை பேஸ்ட் செய்திட கண்ட்ரோல்+வி அல்லது பேஸ்ட் பட்டனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒரு செல்லில் உள்ள தகவல்களை கண்ட்ரோல்+சி கொடுத்து காப்பி செய்திடுங்கள். பின் எந்த செல்லில் அவற்றை பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். ஆஹா! பேஸ்ட் ஆகிவிட்டதா உங்கள் தகவல்கள்.









புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்





















20 ஆண்டைக் கடந்த WEB Browser


இன்றைக்கு இணையம், அதனைக் கொண்டு வந்து தரும் பிரவுசர் எல்லாம், நாம் எப்போதும் பயன்படுத்தும் கைக்குட்டை போல ஆகிவிட்டன. 20





ஆண்டுகளுக்கு முன்னால், “WEB” என்ப தெல்லாம் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அறிந்த ஒன்றாக இருந்தது. பின்னர், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக் கழக வல்லுநர்கள் இணைந்து மொசைக் (Mosaic) என்னும் பிரவுசரை உருவாக்கி நமக்கு அளித்தனர். இதுதான் கிராபிகல் முறையில் நமக்குக் கிடைத்த முதல் பிரவுசர். இதன் பின்னரே, இதனைப் பின்பற்றி மற்ற பிரவுசர்கள் நமக்குக் கிடைத்தன. இப்போது நீங்கள் எந்த சாதனத்தையும் ஒரு நிமிடம் இயக்கினால் போதும். இணையத்தில் நீங்கள் இருப்பீர்கள். 





மொசைக் பிரவுசர் வருவதற்கு முன்னால், இணையம் உங்களுக்குக் கிடைக்க பெரும்பாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும். அப்போது கேரக்டர் அடிப்படையிலான இன்டர்பேஸ் புரோகிராம் மூலம் தான், நமக்கு இணையம் கிடைத்து வந்தது. மொசைக் தொடங்கிய பிரவுசர் வரிசை, இன்று நன்றாக வளர்ந்து, பலத்த போட்டியுடன், நீயா? நானா? என்ற வகையில் கம்ப்யூட்டர் பயனாளர்களைப் பிடிக்க தொடர்ந்து மாற்றங்களை மேற்கொண்டு இயங்கி வருகின்றன. தொடக்க காலத்தில் வந்த பிரவுசர்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.






மொசைக் பிரவுசரை உருவாக்கியவர்கள் மார்க் ஆண்ட்ரீசென் மற்றும் எர்க் பினா (Marc Andreessen and Eric Bina) ஆவார்கள். ஆனால், முதன் முதலில் உருவான பிரவுசர் Mosaic அல்ல. அதற்கு முன்னால், ஒரு பிரவுசர் யூனிக்ஸ் சிஸ்டங்களில் பயன்படுத்தப்பட்டது. விண்டோஸ் இயக்கத்தில் முதல் பிரவுசராக செல்லோ (Cello) வெளியானது. பின்னரே மொசைக் வெளியானது.
மொசைக் பிரவுசர் அவ்வளவு எளிய நடைமுறையைப் 






பெற்றிருக்கவில்லை. 1990 வரை இதனைப் பயன்படுத்துவது, ஏதோ மேஜிக் போல இருக்கும். அப்போதிருந்த விண்டோஸ் இயக்கமும், இன்டர்நெட் வழிமுறையான டி.சி.பி/ஐ.பி இயக்கத்தினை அவ்வளவாக சப்போர்ட் செய்திடவில்லை. விண்டோஸ் 95 சிஸ்டம் தான், இணைய வழிமுறைக்கேற்ற பயன்படுத்துவதற்கு எளிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாக வெளியானது. இன்டர்நெட் பக்கம் மக்களின் விருப்பம் செல்வதனை அறிந்த, மொசைக் பிரவுசர் தயாரித்த இருவரும், இதன் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்த திட்டமிட்டு, பிரவுசர் ஒன்றை உருவாக்கினார்கள். அப்போது கிடைத்ததுதான் Netscape. மைக்ரோசாப்ட் நிறுவனமும், மக்களின் இணைய ஆர்வத் தினைத் தாமதாமாகவே புரிந்து கொண்டது. மொசைக் குறியீடுகளைப் பயன்படுத்தி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் முதல் பதிப்பினை, ஆகஸ்ட் 1995 மாதம், விண்டோஸ் 95 சிஸ்டத்துடன் தந்தது. ஆனால், இன்றும் வெளியாகும் அனைத்து பிரவுசர்களிலும் மொசைக் பிரவுசரின் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.





ஏறத்தாழ பத்து ஆண்டுகள், 1991 வரை இன்டநெட் நமக்கு கேரக்டர் அடிப்படை யிலேயே கிடைத்து வந்தது. இன்றைய இன்டர்நெட் என்பது அப்போது கற்பனை யாகக் கூட மக்கள் அறிந்திருக்கவில்லை. 1993 வரை, தொழில் நுட்ப வல்லுநர்களான சிலரே இன்டர்நெட் பெற்று பயன்படுத்த முடிந்தது. பின்னரே, வேர்ல்ட் வைட் வெப் World Wide Web (WEB) என அழைக்கப்படும் வெப் உலகம் நம்மை அழைத்தது. இதன் காரண கர்த்தா டிம் பெர்னர்ஸ் லீ. அவருக்கு நாம் வணக்கம் கூறுவோம்.










புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்





















சிஸ்டம் டிப்ஸ் 28.4.2013 usfull Tips

சிஸ்டம் டிப்ஸ் 28.4.2013




















பூட் டிஸ்க் (Boot Disk): கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கத் தேவையான சிஸ்டம் பைல்களைக் கொண்ட, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட, சிடி அல்லது டிவிடி. பொதுவாக, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் தான், பூட் டிஸ்க்காக இருக்கும். இதில் பிரச்னை ஏற்படுகையில், சிஸ்டம் பைல்கள் கொண்ட பூட் டிஸ்க் மூலம் கம்ப்யூட்டரை இயக்குகிறோம்.








புதிய பதிவுகளை E-MAIL ல்




s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்





















மைக்ரோசாப்ட் அவசர எச்சரிக்கை? Microsoft Warning?

அண்மையில் தான் வெளியிட்ட பேட்ச் பைல் தொகுப்பில் உள்ள பைல்





ஒன்றினை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்திடும்படி, மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை செய்தி ஒன்றினை வழங்கியுள்ளது. இந்த பைல், விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் இயங்கும் போது, அடிக்கடி சிஸ்டம் கிராஷ் செய்தியினை வழங்குகிறது. இதனை புளு ஸ்கிரீன் ஆப் டெத் (‘Blue Screen of Death BSOD’) என பொதுவாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அழைப்பார்கள். இந்த செய்தி




 திரையில், நீல வண்ணக் கட்டத்தில், கம்ப்யூட்டர் இயங்க இயலா நிலைக்குச் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டு, உடனடியாகக் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்கக் கேட்டுக் கொள்ளப்படும். வேறு வழியே இல்லை; மீண்டும் இயக்கித்தான் ஆக வேண்டும். இந்த குறிப்பிட்ட பைல் இயக்கம், இது போல அடிக்கடி கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திட செய்தி தந்து கொண்டே இருப்பதாகத் தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து, மைக்ரோசாப்ட் தன் தவறான பைலை அன் இன்ஸ்டால் செய்திடும்படி கேட்டுக் கொண்டுள்ளது.






சென்ற ஏப்ரல் 8, வழக்கமான இரண்டாம் செவ்வாய்க் கிழமை அன்று, இந்த பேட்ச் பைல் வெளியிடப்பட்டது. இது வெளியான உடனேயே, இந்த பைலின் தவறான செயல்பாட்டினை உணர்ந்து கொண்ட மைக்ரோசாப்ட் இதனை தன் தளத்திலேயே சீர் செய்தது. ஆனால், ஆட்டோமேடிக் அப்டேட் முறையில், தானாகவே தங்கள் கம்ப்யூட்டர் அப்டேட் ஆகும் வகையில் செட் செய்தவர்களுக்கு, இந்த பிரச்னை உலகெங்கும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கம்ப்யூட்டர்களை இயக்குபவர்களுக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அடிக்கடி, தங்கள் கம்ப்யூட்டர்களை ரீபூட் செய்திடும் நிலைக்கு ஆளாகி, கம்ப்யூட்டரைப் பயன்படுத்த இயலா நிலைக்குச் சென்றனர். 






சில கம்ப்யூட்டர்களில், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கியவுடன், ஹார்ட் டிஸ்க் சோதனையை இந்த பைல் இயக்கம் மேற் கொண்டது. இதனால், வேறு எந்தப் பணியினையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியவில்லை.

இந்த பிரச்னையின் அடிப்படைத் தன்மையை யாராலும் அறிய இயலவில்லை. விண்டோஸ் சிஸ்டத்தின் அடிப்படை இயக்க குறியீடுகளை இந்த பேட்ச் பைல் குறுக்கிட்டு, இயக்கத்தின் தன்மையையே மாற்றியது. இதனால், பல கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல் தன்மையும் மாறியது. இது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், மைக்ரோசாப்ட் எச்சரிக்கையை உடனே வெளியிட்டது. 




ஆனாலும், மைக்ரோசாப்ட் வல்லுநர்களாலேயே இந்தப் பிரச்னையின் மூலத்தை அறிய முடியவில்லை. இந்தப் பிரச்னைக்கான முழு தீர்வினையும் தர இயலவில்லை. இது குறித்த மேலதிகத் தகவல்களுக்குhttp://support.microsoft.com/kb/2839011 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்தினை அணுகலாம்.








புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்





















திறக்கும் புரோகிராம் எதுவென்று தெரியலையா? program open


நண்பர்களிடம் இருந்தோ, அல்லது இன்டர்நெட்டில் இருந்தோ, புரோகிராம்






ஒன்றை பெற்றிருப்போம். உடனே அதனை இயக்கிப் பார்க்க ஆசைப்பட்டு , அதில் டபுள் கிளிக் செய்து, ஆஹா, இதோ புரோகிராம் இயங்கப்போகிறது; அதில் உள்ள புது விஷயங்களைத் தெரிந்து கொண்டு மற்றவர்களிடம் காட்டப் போகிறோம் என்று கர்வத்துடன் மானிட்டர் திரையைப் பார்ப்போம். ஆனால், அதில் இந்த புரோகிராமை எதில் திறக்க? என்ற வகையில் Open With என்று ஒரு சிறிய விண்டோ திறக்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சாப்ட்வேர் புரோகிராம்களின் பட்டியல் இருக்கும் - எம்.எஸ். ஆபீஸ் உட்பட. இதில் எதைத் தேர்ந்தெடுக்க? என்ற யோசனையில் சில நேரம் 




செலவழித்துவிட்டு, இதைக் கிளிக் செய்திடலாமே என்று ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்போம். ஆனால் மீண்டும் சில நேரம் கழித்து இதை விண்டோஸ் இயக்கத்தினால் திறக்க முடியவில்லை. வேறு ஒரு புரோகிராமினை இன்டர்நெட்டில் தேடலாமா? என்று ஒரு பரிந்துரையுடன் கூடிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். 





என்ன செய்யலாம்? இது போன்ற ஒரு சூழ்நிலையில்தான் விரக்தியின் விளிம்பு வரை சென்று கூகுள் சர்ச் இஞ்சினில் Open With என டைப் செய்து என்டர் தட்டினால், உடனே கிடைத்த பட்டியலில் openwith என்று ஒரு தளமே இருப்பது தெரிய வந்தது. அதனைத் திறந்து காண்கையில் இப்படிப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற் கென்றே இந்த தளம் உருவாக்கப்பட்டதனை உணர முடிந்தது. இந்த தளத்தைப் பார்ப்பதே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. முதல் காரணம் இதன் சேவை முற்றிலும் இலவசம். அடுத்ததாக நாம் எதிர்பார்க்கும், மற்றும் 




எதிர்பாராத பல எக்ஸ்டென்ஷன்கள் கொண்ட பைல்களுக்கெல்லாம் இது திறக்கும் புரோகிராமின் பெயரைத் தருகிறது. ஏன் .PNG, .SQL, மற்றும் CKZ என்றெல்லாம் கூட எக்ஸ்டென்ஷன்கள் உள்ளன என்று இங்கு தான் அறிந்து கொண்டேன். நீங்கள் திறக்க விரும்பும் பைலின் எக்ஸ்டென்ஷன் பெயரின் முதல் எழுத்தை டைப் செய்தால் அந்த எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு எக்ஸ்டென்ஷன் உள்ள அனைத்து பைல்வகைகளின் பட்டியலும் அவற்றிற்கான புரோகிராம்களும் தரப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 'B' என டைப் செய்தால் .BAT, .BFL என்ற எக்ஸ்டென்ஷன்கள் எல்லாம் 




காட்டப்படுகின்றன.
இவற்றைக் காட்டிவிட்டால் போதுமா? அதற்கான புரோகிராம் நம்மிடம் இல்லையே என்ற சூழ்நிலையும் ஏற்படும். இதற்கும் இந்த தளம் தீர்வினைத் தருகிறது. எந்த எக்ஸ்டென்ஷன் கொண்ட பைலைத் திறக்க புரோகிராமினைத் 





தேடுகிறீர்களோ அதில் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இருக்கும் தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இலவசமாக புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கலாம். இது நிச்சயமாய் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு தளமாக உள்ளது. எனவே புக்மார்க் செய்து கொள்ளுங்கள். அடிக்கடி தேவைப்படும். இதன் முகவரி site








புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்





















இந்தியாவில் ஆப்பிள் பெற்ற வெற்றிக்கனி - Apple in india Win



இந்தியாவில் ஆப்பிள் சாதனங்கள் விற்பனை, அவற்றின் விலை காரணமாக,

kkk


மந்த கதியில் இருந்த நிலையில், அதன் ஐ போன் 4 விற்பனை அண்மையில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை உத்திதான்.





பொதுவாகவே, ஆப்பிள் நிறுவனம் தன் சாதனங்கள் விற்பனையை அதிகரிக்க எந்தவிதமான சோதனையையும் மேற்கொள்ளத் தயங்குவதே இல்லை. அதனால் தான், விற்பனை அடிப்படையில் அது உலகின் இரண்டாவது நிறுவனமாக உள்ளது. 






முதல் முறையாக, ஆப்பிள் நிறுவனத்தின் சரித்திரத்தில், இந்தியாவில், புதிய விற்பனை வழி ஒன்று அறிவிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள், தங்கள் பழைய மொபைல் போனைக் கொடுத்து புதிய ஐபோன் 4 வாங்கினால், அதன் விலையில் அதிக பட்சம் ரூ.7,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என 




அறிவித்தது. சந்தையில் குறிப்பிட்ட அந்த போனுக்கு விலை ரூ.7,000க்கும் மேலாக இருந்தால், கூடுதல் விலைக்கு, ஐபோன் 4க்கான துணை சாதனங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டது. அல்லது பரிசுக் கூப்பன்களும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போனையும் வாடிக்கையாளர்கள் கொண்டு வந்து, புதிய ஐபோனுக்கு மாற்றிக் கொள்ளலாம். லாவா, மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் உட்பட.




இந்த திட்டம் அறிவிக்கப்பட்டவுடன், இந்தியாவில் ஐபோன் 4 விற்பனை மிக வேகமாக இருந்தது. பல வாடிக்கையாளர்கள், இந்த சலுகையைப் பயன்படுத்தி, ஐபோன் 4 ஐ வாங்கினார்கள். ஐபோன் 5ன் விற்பனையைக் காட்டிலும், இந்த வகையில் ஐபோன் 4 விற்பனை அதிகமாக இருந்தது. ஆப்பிள் ஐபோன் 4ன் விலை ரூ.26,500 ஆக இருந்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில், அதிக பட்ச தள்ளுபடி அளிக்கையில், விலை ரூ.20,000க்கும் கீழே இறங்கியது. 




பொதுவாகவே, இந்தியாவில் முதல் முறை ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர் ரூ12,000 முதல் ரூ.20,000 வரை செலவழிக்கத் தயாராக இருப்பதால், இந்த திட்டத்தின் அடிப்படையில் பலரும் ஐபோன் 4 வாங்கினார்கள். இதனை இலக்காக வைத்துத்தான், ஆப்பிள் நிறுவனமும் இத்திட்டத்தினைக் கொண்டு வந்து வெற்றி பெற்றது. 2012 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 2 லட்சத்து 50 ஆயிரம் ஐபோன்கள், இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாயின. 
இதனைக் கண்ட சாம்சங் நிறுவனமும், தன் ஸ்மார்ட் போனை விற்பனை செய்திட புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








புதிய பதிவுகளை E-MAIL ல்




s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்