இலவசமாக website Doctor For Free இணையத்தில் மருத்துவரை நாடலாம்


இணையத்தில், நம் உடல் நிலை, அதற்கான மருத்துவம் குறித்த பல தளங்கள் இயங்குகின்றன. உடல் நலத்தில் பிரச்னை ஏற்படுகையில், மருத்துவர்





ஒருவரை நாடி, சரியான முறையில் சிகிச்சை பெறுவதுதான் நல்லது. இருப்பினும், நம் பிரச்னை மட்டுமின்றி, உடல்நலம் குறித்த பொதுவான தகவல்களை நாம் தெரிந்து கொள்வது நல்லது. அந்த வகையில் இயங்கும் தளங்களில்,இணையதளத்தில் டாக்டர்  என்ற முகவரியில் இயங்கும் ஒரு தளம் வித்தியாசமான முறையில் தகவல்களைத் தந்து நம் சந்தேகங்களையும் தீர்க்கிறது.




சாதாரண மக்கள் மட்டுமின்றி, மருத்துவர்களும் இந்த தளம் சென்று, நோய், அதன் தன்மை, அதற்கான மருத்துவம் குறித்துத் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, இந்த தளத்தில் தொடர்பு கொண்டுள்ள மருத்துவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம். ஏற்கனவே இது போன்று கேட்ட கேள்விகளும், அவற்றிற்கு அளிக்கப்பட்ட பதில்களும் இந்த தளத்தில் கிடைப்பதால், சிரமமின்றி எளிதாகவும், விரைவாகவும் தகவல்களை அறியலாம். புதியதாக அறிய வேண்டும் எனில், இந்த தளத்தின் மூலம், மருத்துவ வல்லுநர் ஒருவரைத் தொடர்பு கொண்டு, தீர்வுகளைப் பெற முடியும். 




இந்த தளத்தில் மருத்துவ அறிவுரை இலவசமாக வழங்கப்படுகிறது. இது எப்படி செயல்படுகிறது எனப் பார்க்கலாம். இந்த தளம் சென்று உங்களுடைய பெயர், இமெயில் முகவரி, உடல்நலம் குறித்த முழு தகவல்கள், உங்களின் கேள்வி இவற்றை நிரப்பி அனுப்பினால், அந்த தளத்திலேயே உங்கள் கேள்வி குறித்து எத்தகைய பதில் கிடைக்கலாம் என்று சுட்டிக் காட்டப்படும். பின் உங்களுக்கான பதில், உங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த சேவை இந்த தளத்தின் முதன்மைச் சேவை என்றாலும், வேறு சில பிரிவுகளும் இதில் உள்ளன. இதன் ஹோம் பேஜில், பொதுவாக மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து எழுப்பும் கேள்விகளும், அதற்கான பதில்களும் இடம் பெற்றுள்ளன. அண்மைக் காலத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் இங்கு முக்கியத்துவம் கொடுத்துத் தரப்பட்டிருக்கும்.




Topics A to Z: உடல்நலம் குறித்தெல்லாம் கேள்வி இல்லை. மருத்துவத்தில் குறிப்பிட்ட பிரிவில் ஆய்வு மேற்கொள்ள எண்ணமா? இந்த பிரிவில் நீங்கள் விரும்பும் தலைப்பு உள்ளதா எனத் தேடிப் பார்த்து, அது குறித்து பல கருத்துக்களை அறிந்து கொள்ளலாம்.
Drugs A to Z: பலவகையான மருந்து குறித்த தகவல்களை இங்கு பெறலாம். அருகில் இருக்கும் மெனுவில் அடிக்கடி கேட்கப் பட்ட மருந்துகள் பட்டியலிடப்பட்டு தரப்பட்டிருக்கும். 
Diet and Fitness: இங்கு கட்டுப்பாடான உணவு, உடல் நலம் பேணல் குறித்த பல தகவல்கள் தரப்படுகின்றன. உணவு கலோரிகள், உடல் கட்டமைப்பு மற்றும் வளர்த்தல், உணவு உட்கொள்வதில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் தீங்கான இடைவெளிகள், வைட்டமின் என இது போன்ற பல பிரிவுகளில் தகவல்கள் கிடைக்கின்றன. 





Parenting and Pregnancy – இந்த பிரிவில் குழந்தை உருவாதல் மற்றும் வளர்ப்பு குறித்த தகவல்கள் கிடைக்கின்றன.
Sex and Beauty – நாம் மற்றவரிடம், ஏன் டாக்டரிடம் கூடக் கேட்கத் தயங்கும் தகவல்கள் அழகாக இங்கு தரப்பட்டுள்ளன. அத்துடன் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்தும் பல தகவல்கள் இங்கு கிடைக்கின்றன.

புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்