உங்களுக்குத் தெரியுமா?Frist Computer முதன் முதலில் வந்த (ENIAC Electronic Numerical Integrator And Computer)

முதன் முதலில் ஏறத்தாழ 52 ஆண்டுகளுக்கு முன் வந்த எனியாக் (ENIAC






Electronic Numerical Integrator And Computer) என்னும் கம்ப்யூட்டர் 80 அடி நீளத்தில் 30 அடி அகலத்தில் 17,000 ட்யூப்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்றைய கம்ப்யூட்டர் எவ்வளவு இடத்தில் என்ன எடையில் இருக்கிறது என்று நமக்குத் தெரியும். இன்றைய கம்ப்யூட்டர் எனியாக் கம்ப்யூட்டரைக் காட்டிலும் 50,000 மடங்கு அதிவேகத்தில் செயல்பாடுகளை மேற்கொள்கிறது. முதல் கம்ப்யூட்டரைக் காட்டிலும் பத்து லட்சம் மடங்கு அதிகத் தகவல்களைக் கையாள்கிறது.




*இன்றைய மாடர்ன் கம்ப்யூட்டரின் முன்னோடி 1941ல் கொன்ராட் ஸ்யூஸ் (Konrad Zuse) என்பவரால் உருவாக்கப்பட்டது. அப்போது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த படியால் அவர் அதனை ஜெர்மனி நாட்டின் ஆட்சியாளர்களிடம் காட்டி மேலும் மேம்படுத்த நிதி உதவி கேட்டார். யுத்தம் தான் விரைவில் முடிந்துவிடப் போகிறதே; எதற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெர்மனியை ஆட்சி செய்தவர்கள் மறுத்து விட்டனர்.
* இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் நாட்டின் இன்டெலிஜன்ஸ் பிரிவு கொலாசஸ் மெஷின்ஸ் என்னும் சாதனத்தை நாஸிக்களின் ரகசியக் குறியீட்டினைக் கண்டறியப் பயன்படுத்தியது. இந்த மெஷின் கம்ப்யூட்டரின் முன்னோடி என்று கருதப்படுகிறது.





* புரோகிராம் செய்து அதன் மூலமாக இயங்கக் கூடிய சாதனத்தை சார்லஸ் பாப்பேஜ் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே கண்டு பிடித்தார். ஆனால் தொடர்ந்து பணியாற்ற நிதி உதவி கிடைக்காமல் தன் திட்டத்தைக் கைவிட்டார். பின்னர் 1943ல் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு வந்தது. 1998ல் லண்டனில் உள்ள சயின்ஸ் மியூசியம் பாப்பேஜ் உருவாக்கிய திட்டத்தின் அடிப்படையில் அப்போது என்ன என்ன பொருட்களைக் கொண்டு உருவாக்கினாரோ அதே போல ஒரு சாதனத்தை அமைத்து இயக்கி அருங்காட்சியகத்தில் வைத்தது. இன்னும் அது பாப்பேஜ் எதிர்பார்த்தபடி இயங்கிக் கொண்டுள்ளது.




* பெர்சனல் கம்ப்யூட்டர்கள் அதிகம் வைத்துள்ள முதல் எட்டு நாடுகளில் அமெரிக்கா முதல் இடம் பெற்றுள்ளது. அடுத்து வரும் ஏழு நாடுகளில் வைத்துள்ள கம்ப்யூட்டர்களின் மொத்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கை யில் அமெரிக்காவில் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.







புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்