கம்ப்யூட்டர் ஒன்றுக்கு ஒரு புரோகிராமினை (Programming) உருவாக்க - போன் ஒன்றுக்கு அப்ளிகேஷன் (Application) making ஒன்றை வடிவமைக்க,


ஏன் இத்தனை புரோகிராமிங் மொழிகள்?






கம்ப்யூட்டர் ஒன்றுக்கு ஒரு புரோகிராமினை உருவாக்க, போன் ஒன்றுக்கு அப்ளிகேஷன் ஒன்றை வடிவமைக்க, ஏன், ஓர் இணைய தளம் ஒன்றை அமைக்க, நாம் புரோகிராமிங் மொழிகள் பலவற்றில், ஏதேனும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த புரோகிராமிங் மொழிகள் 






மூலமாகத்தான், நாம் கம்ப்யூட்டர்கள் என்ன செய்திட வேண்டும் என்பதனைக் கூற முடியும். அதனுடன் நாம் நம் விருப்பத்தினைத் தெரிவிக்க முடியும். டாகுமெண்ட் தயாரிக்க, கேம் விளையாடுகையில் விருப்பங் களைத் தெரிவிக்க, போட்டோ ஒன்றினை எடிட் செய்திடுகையில், நாம் எதிர்பார்க்கும் விளைவுகளை உருவாக்க எனப் பல வேலைகளை இந்த புரோகிராமிங் மொழிகள் மூலமாகத்தான் நாம் மேற்கொள்ள இயலும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வேலை என்பதால், ஒவ்வொரு புரோகிராமிங் மொழி தேவைப்படுகிறது. நாம் பேசும் மொழிகளைப் போலவே, இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வரையறைகளுடன் இயங்குகின்றன. இயங்கும் தளங்களும் வேறுபட்டு இருக்கின்றன.




ஏன் இத்தனை புரோகிராமிங் மொழிகள்? அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரே புரோகிராமிங் மொழி இருக்கக் கூடாதா? என்ற கேள்விகள் எழலாம். வெவ்வேறு செயல்பாட்டு வழிகளுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் பல இருப்பதால், புரோகிராமிங் மொழிகளும் நிறைய உள்ளன. சில புரோகிராமிங் மொழிகள், பல்வேறுபட்ட கம்ப்யூட்டர்களிலும், ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கக் கூடிய வகையில் உள்ளன. சில மொழிகள், புரோகிராம் ஒன்றில் உள்ளாக இயங்குபவையாக இருக்கின்றன. 

(இவற்றை scripting languages என அழைக்கின்றனர்.) மற்றவை, புரோகிராம் முழுவதையும் உருவாக்குவதுடன், அதன் பல பிரிவுகளுக்கு விளக்கம் அளிப்பவையாகவும் உள்ளன. (இவற்றை system programming languages என அழைக்கிறோம்.) இவற்றில் சிலவற்றை அதன் எடுத்துக்காட்டுகளுடன் காணலாம்.



ஸ்கிரிப்டிங் மொழிகள் என்று அழைக்கப்படும் மொழிகளில் ஓர் எடுத்துக்காட்டு, இணையப் பக்கங்களை வடிவமைக்கப் பயன்படும் (HTML) எச்.டி.எம்.எல். புரோகிராமிங் மொழியாகும். இது புரோகிராம் ஒன்றின், அதாவது, வெப் பிரவுசர் புரோகிராம் உள்ளாக இயங்குகிறது. பிரவுசர் ஒன்றின் செயல்பாடுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என விளக்குவது இதன் வேலை. டெக்ஸ்ட் டிஸ்பிளே செய்வது, படங்களைக் காட்டுவது, பயனாளர்களிடம் இருந்து ஆப்ஷன் மற்றும் படங்களைப் பெறுவது ஆகியவற்றை ஒரு பிரவுசரில் இது மேற்கொள்கிறது. ஒரு வெப் பிரவுசர், இந்த எச்.டி.எம்.எல். குறியீடுகளைப் புரிந்து கொண்டால், அதில் காட்டப்படும் இணையப் பக்கங்கள் நமக்குச் சரியாகக் கிடைக்கும்.
இதனுடன் வேறு ஒன்றை இணைத்து ஒப்பிட்டுப் பார்ப்போம். சி ப்ளஸ் ப்ளஸ் என்பது இன்று அனைவராலும் அவசியமாகப் பயன்படுத்தப்படும் ஒரு புரோகிராமிங் மொழியாகும். புரோகிராமர் ஒருவர் தான் விரும்பிய அனைத்தையும் கம்ப்யூட்டர் வழி செயல்பட வைத்திட, இந்த புரோகிராமிங் மொழி உதவுகிறது. இதன் தன்மை என்னவென்றால், அடிப்படை இடைமுகம் அமைப்பதிலிருந்து, புரோகிராமினை இயக்கும் மேத்தமடிகல் பார்முலாக்கள் வரை, அத்தனையும் சரியாக, முழுமையாக வடிவமைக்கப்பட்டு, புரோகிராமரால் இணைக்கப்பட வேண்டும். புரோகிராமிங் மொழிகளுக்கிடையேயான வேறுபாடுகளை அறிந்து கொள்ள ஒரு சின்ன எடுத்துக் காட்டினைப் பார்ப்போம். மேலே தரப்பட்டுள்ள அனைத்து புரோகிராமிங் மொழிகளின் குறியீடுகளும் hello world என்ற டெக்ஸ்ட்டைக் காட்டிட எழுதப்பட்ட புரோகிராம்களே. அவற்றின் அமைப் பிலிருந்து நாம் வேறுபாட்டினைத் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய அளவில், ஏறத்தாழ 20 புரோகிராமிங் மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரபலமான சிலவற்றை இங்கு வகைப்படுத்தித் தருகிறேன்.




1. விண்டோஸ் அப்ளிகேஷன்கள்: C#, Visual C++, Visual Basic.Net, DirectX API’s, HTML 5, Jav
2. மேக் ஓ.எஸ். அப்ளிகேஷன்கள்: Objective C, X Code with Cocoa Framework, Java
3. ஐபோன் அப்ளிகேஷன்கள்: Objective C with Cocoa Framework
4. ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்: Java and some C#







5. இணையப் பக்கங்கள்: HTML, CSS, Flash, JavaScript, Java, PHP, Perl, ASP.net

6. டிவிக்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்கள்: Assembly and C#
மேலே தரப்பட்டுள்ள விளக்கங்கள், ஓரளவிற்கு புரோகிராமிங் மொழிகளின் வகைகளையும், அவற்றின் தேவைகளையும் தந்திருக்கும் என நினைக்கிறேன். இவற்றிலிருந்து நீங்கள் உங்கள் தளத்தினைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கான புரோகிராமிங் மொழிகளை ஆழமாகக் கற்கலாம்.புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்