இன்னும் மூன்று ஆண்டுகளில் டேப்ளட் கம்ப்யூட்டர்கள்? - கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்து ஆய்வு.tab


 கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் கார்ட்னர்





நிறுவனம், இன்னும் மூன்று ஆண்டுகளில் டேப்ளட் கம்ப்யூட்டர்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளது. விண்டோஸ் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், 72 சதவீதம் இவை கூடுதலாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனையாவது, தொடர்ந்து சரிவு நிலையைச் சந்திக்கும் என்றும் கருதப்படுகிறது.





 


டேப்ளட் பிசிக்கள், பிரதான கம்ப்யூட்டிங் சாதனமாக இடம் பெறும் நாள் விரைவில் வரும். டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் போன்களின் பக்கம் செல்லும் பயனாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் பக்கம் மீண்டும் திரும்ப மாட்டார்கள். கார்ட்னர் நிறுவன ஆய்வு இந்த முடிவுகளைத் தெரிவிப்பதுடன், எந்த வகையில், பெர்சனல் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு குறையும் எனவும் காட்டியுள்ளது. 2013 ஆம் ஆண்டில், வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டர், நோட்புக் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு 7.6 சதவீதம் 




குறையும். இந்த ஆண்டில், 31 கோடியே 50 லட்சம் பெர்சனல் கம்ப்யூட்டர்களே விற்பனை ஆகும். 2012ல் இது 34 கோடியே 10 லட்சமாக இருந்தது. நவீன மொபைல் போன்களின் பயன்பாடு, 2012ல் 98 லட்சமாகும். ஆனால், 2013ல், இது 2 கோடியே 36 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டும். 






இதற்கு எதிர்மாறாக, ஈடுகட்டும் வகையில், டேப்ளட் பிசிக்கள், 2012ல் 11 கோடியே 60 லட்சமாக இருந்து, 2013ல், 19 கோடியே 70 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது 69.8 சதவீத வளர்ச்சியாகும். இது உலகின் அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் வளர்ச்சியாக இருக்கும். நோட்புக் பெர்சனல் கம்ப்யூட்டரைக் காட்டிலும், டேப்ளட் பிசிக்கள், மொபைல் போன் போன்ற துணையாக மக்களால் விரும்பப்படும் என கார்ட்னர் ஆய்வு தெரிவிக்கிறது.

 







புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்