சிஸ்டம் டிப்ஸ் போல்டர் விரிந்து கொடுக்க Folders - USB Universal Serial Bus - 13.4.2013



போல்டர் விரிந்து கொடுக்க
 பைல்களைத் தேடுகையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் போல்டர்களைத்
திறக்கிறோம். பின்னர் அதனுள் பல துணை போல்டர்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொன்றாகக் கிளிக் செய்து திறக்க வேண்டியுள்ளது. அவ்வாறின்றி, ஒரே கீ அழுத்தலில் அனைத்து போல்டர்களும் திறக்கப்பட்டால், நமக்கு வேலை மிச்சம் தானே. இதற்கு விண்டோஸ் எக்ஸ் புளோரரில் இடது பக்கம் உள்ள பிரிவில் உங்கள் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் நியூமெரிக் கீ பேடில் உள்ள ஆஸ்டெரிஸ்க் கீயினை (*) அழுத்தவும். அவ்வளவுதான். போல்டர்கள் மற்றும் துணை போல்டர்கள் அனைத்தும் காட்டப்படுவதனைப் பார்க்கலாம். உங்கள் ட்ரைவில் அதிக போல்டர்கள் இருந்தால், இதற்கு சில நிமிடங்கள் ஆகலாம். சற்றுப் பொறுமையுடன் காத்திருந்து பார்க்கவும்.

USB Universal Serial Bus
 (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.