சிஸ்டம் Usfull டிப்ஸ் Tips 9.4.13 Part 2


ரெசல்யூசன் (Resolution): மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க
இந்த அளவு அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. 
எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது டோனர் தெளிக்கப்படுகிறது என்பதையும் ரெசல்யூசன் என்பதன் மூலம் 
 ,
சொல்லப்படுகிறது.ஜி.எஸ்.எம். (GSM Global System for Mobile Communications): இந்தியா, கிரேட் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு மொபைல் போன் தொடர்பு தரும் சிஸ்டம். இன்னொரு மாற்றான சி.டி.எம்.ஏ. என்ற மொபைல் சிஸ்டம், இதைக் காட்டிலும் சிறப்பான தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவது என்றாலும், ஜி.எஸ்.எம். சிஸ்டம் தான் பெரும்பாலான இடங்களில் இயங்குகிறது. இந்தியாவில் இரண்டு சிஸ்டங்களும் இயங்குகின்றன. ஆனால், ஜி.எஸ்.எம். வகைதான் அதிக வாடிக்கையாளர்களையும், நிறுவனங்களையும் 
கொண்டுள்ளது.லைன் இன் (Line In): கம்ப்யூட்டர் அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஆடியோ சாதனத்தை இணைக்கும் வழி.ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio): ஒரு டிவியின் அல்லது மானிட்டரின் திரையின் அகல உயர விகிதத்தை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்கிறோம். வழக்கமான டிவிக்களின் திரை 4:3 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது 4 பங்கு அகலம் 3 பங்கு உயரம். தற்போது வருகின்ற புதிய ஸ்கிரீன்கள் 16:9 என்ற விகிதத்தில் அமைக்கப்படுகின்றன.