எக்ஸெல் டிப்ஸ் 14.4.2013 Exal Tips



விரும்பும் எழுத்தினை நிலைப்படுத்த

எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் அப்போது உள்ள எழுத்துவகை உங்களுக்கு





பிடிக்காமல் இருக்கலாம். அல்லது உங்களுக்குப் பிடித்த வகையினை நீங்கள் மாறாததாக அமைத்திட எண்ணலாம். அல்லது ஆங்கிலம் அல்லாமல் தமிழ் எழுத்துக்களில் அடங்கிய தகவல்கள் கொண்ட பைலை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தலாம். அப்போது ஒவ்வொரு முறையும் பாண்ட் விண்டோ சென்று தமிழ் எழுத்தினை செட் செய்வது சிக்கலாக இருக்கலாம். இதற்கு ஒரே வழி நீங்கள் விரும்பும் எழுத்து வகையினை நிலைத்த எழுத்தாக அமைப்பதுதான். இதனை செட் செய்திடக் கீழ்க்காணும்படி அமைத்திடுங்கள்.





1.“Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். 
2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “General” என்னும் டேபில் கிளிக் செய்திடவும்.
3. இப்போது கிடைக்கும் விண்டோவில் “Standard font” என்பதற்கு நேர் எதிராக பாண்ட் மற்றும் சைஸ் விண்டோ இருக்கும். இதில் நீங்கள் விரும்பும் எழுத்துவகையினைத் தேர்ந்தெடுத்து மற்றும் அதற்கான அளவினையும் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும். இனி எப்போது எக்ஸெல் ஒர்க் ஷீட்டைத் திறந்தாலும் காலி இடத்தில் இந்த பாண்ட் தான் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்கும்.






 எக்ஸெல் எழுத்தின் அளவு


மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் போலவே எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டியதிருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட் சம்பந்தமான டூல்களுக்கு இடது பக்கம் (பாண்ட் டூலின் வலது பக்கம்) பாய்ண்ட் அளவின் பீல்டு கட்டம் உள்ளது. இந்த பீல்டின் வலது பக்கம் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்தால் எழுத்தின் பாய்ண்ட் அளவுகள் பலவற்றைக் காணலாம். டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துவிட்டு இந்த சைஸை மாற்றினால் எழுத்துக்களின் அளவு மாறி இருப்பதனைக் காணலாம். 







ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கிளிக் செய்தால் கீழ் நோக்கி விரியும் அளவுகளில் மட்டுமே எழுத்தின் அளவை மாற்ற முடியும் என்பதல்ல. அளவு கட்டத்தில் சென்று, எழுத்தின் அளவை கீ போர்டு வழியாக டைப் செய்து அமைக்க முடியும். எக்ஸெல் தொகுப்பினைப் பொறுத்தவரை 1 முதல் 409 புள்ளி வரை இதனை அமைக்க முடியும். (இது உங்கள் பிரிண்டரின் திறனைப் பொறுத்தது) முழு எண் அளவில் மட்டுமின்றி பாதி அளவிலும் இந்த எழுத்தின் அளவை அமைக்கலாம்.


எக்ஸெல்
செல் ரேஞ்ச்: எக்ஸெல் தொகுப்பில் பார்முலாக்களில் செல்களின் ரேஞ்சினைக் குறிப்பிட வேண்டும். ரேஞ்ச் குறிப்பிடுகையில் கமா, கோலன் (இரு புள்ளி) ஸ்பேஸ் எனப் பலவகைகளைப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதனை அமைப்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. இந்த வகையில் சில அடிப்படையான விஷயங்கள் இங்கு காட்டப்படுகின்றன. 
முதலில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிறுத்தக் குறியீடுகள் சாதாரண டெக்ஸ்ட்டில் வருவது போல சொற்களுக்கிடையேயான நிறுத்தக் குறிகள் அல்ல. இவை பார்முலாவின் ஓர் அங்கமாகும். எனவே இவற்றைக் கவனமுடன் அமைக்க வேண்டும்.





( : ) : கோலன். இது ஒரு சிங்கிள் ரேஞ்சினைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக A1:C2 என்பது A1 முதல் C2 வரையிலான செல்களைக் குறிக்கிறது.
(,) : கமா என்னும் காற்புள்ளி இரண்டு ரேஞ்ச் செல்கள் இணைந்ததைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக A1:C2, B1:B4 என்பது ஏ1 முதல் சி2 வரையிலான ரேஞ்சையும் பி1 முதல் பி4 வரையிலான ரேஞ்ச் செல்களையும் இணைந்த தொகுதியைக் குறிக்கிறது. இது போன்ற இணைப்பு செல்களைக் குறிப்பிடுகையில் கவனமாகக் கண்காணித்துக் கொள்வது நல்லது. நீங்கள் விரும்புகின்ற வகையில் பார்முலா செயல்படுகிறதா என்பதனைக் கவனிக்க வேண்டும். 
இறுதியாக ஸ்பேஸ் என்னும் இடைவெளி செல் ரேஞ்ச்களில் குறுக்கிடும் செல்களை மட்டுமே குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக A1:C2 B1:B4 எனக் குறிப்பிட்டால் இந்த இரு ரேஞ்ச் செல்களும் எங்கு குறிக்கிடுகின்றனவோ அந்த செல்கள் மட்டுமே பார்முலாவில் இயக்கப்படும்.

புதிய பதிவுகளை E-MAIL ல்


s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்