பாதுகாப்பு இல்லாத மொபைல் போன்கள் Mobile Phones

இநதியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில், 50 சதவீதம் போன்கள், எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமலேயே செயல்படுவதாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக, செமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 44 சதவீத மொபைல் போன்களைப் பயன்படுத்துவோருக்குkkkk, அவர்கள் அதுவரை அறியாத நபர்களிடமிருந்து டெக்ஸ்ட் மெசேஜ் பெற்றுள்ளனர். இதில் ஓர் இணையதள முகவரி தரப்பட்டு, அதில் கிளிக் செய்திடுமாறு தகவல் தரப்பட்டுள்ளது. கிளிக் செய்தால், ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைக்கும் என்றும் ஆசை காட்டப்பட்டுள்ளது. அல்லது இதுவரை அறியாத மொபைல் போன் எண் ஒன்றுக்கு டயல் செய்திடுமாறும் செய்தி கிடைத்துள்ளது. இந்த செய்தியில் தரப்பட்டுள்ளவற்றைப்  பின்பற்றினால், மொபைல் போன்களின் தகவல்கள் திருடப்படுவதோடு, நிதி சார்ந்த மோசடிகளுக்கு வழி தரப்படும்.மேலும், மொபைல் பயன்படுத்தும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைய இணைப்பிற்கும் மொபைல் போன்களையே பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பற்ற நிலையில், இந்த மொபைல் போன்களுக்கு, இணையம் வழியாக ஆபத்து வந்து சேர்கிறது. பணம் திருடும் வேலைகளுக்கான தகவல்கள் மிக எளிதாகக் கைப்பற்றப்படுகின்றன என்று செமாண்டெக் சாப்ட்வேர் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் இந்தியா மற்றும் சார்க் நாடுகளுக்கான பிரிவின் நிரவாகி ரித்தேஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.இவர் மேலும் கூறுகையில், குழந்தைகளை இது போன்ற பாதுகாப்பற்ற நிலைகளுக்குச் செல்லவிடாமல் நாம் பாதுகாக்க வேண்டும் என்றார். அதே போல, பொதுமக்களிடமும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.நார்டன் ஆண்ட்டி வைரஸ் என்ற பெயரில் வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளைத் தயாரித்து உலகெங்கும் வழங்கி வரும் செமான்டெக் நிறுவனம், இந்திய பெரிய மற்றும் சிறிய நகரங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் இந்த விழிப்புணர்வினை வளர்க்கும் வகையில் திட்டம் மேற்கொள்ள இருக்கிறது.