விண்டோஸ் 8 மற்றும் ஆர்.டி. விலை குறையலாம்? - மைக்ரோசாப்ட், நிலைமையைச் சீர் செய்திட அதிரடியாகச் சில முடிவுகளை எடுக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர் (Microsoft)


சென்ற அக்டோபர் 25ல் மிகுந்த ஆரவாரத்தோடும், விளம்பரத்தோடும்,




மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. கம்ப்யூட்டர் செயல்படும் நிலையை முற்றிலும் மாற்றி அமைத்து வடிவமைக்கப்பட்ட இந்த ஓ.எஸ். மிக வேகமாக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்த்தது. ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளும் மனப்பாங்கு மக்களிடையே அதிகமாக இல்லை என்று தெரிய வந்துள்ளது. விண்டோஸ் 7 




வெளியான 74 நாட்களில், 6 கோடி உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனை எட்டிப் பிடிக்க விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு சில மாதங்கள் ஆயின. டேப்ளட் பிசிக்களில், விண்டோஸ் சிஸ்டம் பதிந்தவற்றின் விற்பனையும் மிக மந்தமாகவே உள்ளது. அசூஸ் நிறுவனம் டிசம்பருடன் முடிந்த காலாண்டில் விற்பனை செய்த 30 லட்சம் டேப்ளட் பிசிக்களில், 5 டேப்ளட் கம்ப்யூட்டர்களில் மட்டுமே விண்டோஸ் சிஸ்டம் கேட்டு வாங்கப்பட்டது. மற்றவை அனைத்தும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பதிந்தவையே.





இதனால், சாம்சங் நிறுவனம் விண்டோஸ் ஆர்.டி. பதிந்த தன் டேப்ளட் பிசி விற்பனையை ஜெர்மனியில் நிறுத்திவிட்டது. இதனைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் விண்டோஸ் டேப்ளட் பிசி விற்பனை செய்யப்படுவது வாபஸ் செய்யப்படலாம்.






இந்தச் சூழ்நிலையை முற்றிலுமாகப் புரிந்து கொண்ட மைக்ரோசாப்ட், நிலைமையைச் சீர் செய்திட அதிரடியாகச் சில முடிவுகளை எடுக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இவற்றில் ஒன்று விலை குறைப்பாக இருக்கலாம். முற்றிலுமான விலை குறைப்பாகவோ, அல்லது குறிப்பிட்ட கால கெடுவிலான விலை தள்ளுபடியாகவோ இருக்கலாம். அந்த வகையில் தற்போது விண்டோஸ் 8 மற்றும் எம்.எஸ்.ஆபீஸ் 2013 இணைந்து 30 






டாலருக்கு வழங்கப்படுகிறது. இதன் முழு விலை 120 டாலராகும்.
மேலும் சில மாற்றங்கள் மேற்கொள்வது குறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேசி வருகிறது.
புதிய பதிவுகளை E-MAIL ல்


s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்