விண்டோஸ் 8: கடவுள் வழி - இது என்ன புதிதாய் இருக்கிறதே! Windows 8 God way


இது என்ன புதிதாய் இருக்கிறதே! கடவுள் விட்ட வழி என்று சொல்லும் அளவிற்கு விண்டோஸ் 8, அதன் இஷ்டத்திற்கு இயங்குகிறதா? என்ற

சந்தேகம் இந்த தலைப்பைப் பார்த்தவுடன் வரலாம். அப்படி இல்லை. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிக முக்கியமான ஒரு வழி உள்ளது. அதற்கு God Mode என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து இங்கு காணலாம்.




நம் வாழ்க்கையில் புதியதாக எது வந்தாலும், கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்துகையில் சில பிரச்னைகள், சிக்கல்களைச் சந்திக்கிறோம். பின்னர் அதுவே, நாம் விரும்பும் ஒன்றாக மாறிவிடுகிறது. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், முற்றிலும் புதுமையான முறையில் பல வழிகளைக் கொண்டிருப்பதால், அதன் இயக்கத்திலும் பல விஷயங்கள் நமக்குத் தொடக்கத்தில் பிரச்னைகளைத் தருவதாகவே அமைகின்றன. ஆனால், அவற்றின் அமைப்பைப் புரிந்து கொள்கையில், அவையே நமக்குப் பிடித்த வசதிகளாகவும் காட்சி அளிக்கின்றன.






விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இது போல சிக்கலாகக் காட்சி தருவதில் முதல் இடம் பெறுவது, அதன் கண்ட்ரோல் பேனல் அமைப்பாகும். கண்ட்ரோல் பேனல் செட்டிங்ஸ் முழுமையும் நம்மால், ஒரே இடத்தில் பார்த்து செயல்படுத்த முடியவில்லை. இதற்கு முன் வந்த விண்டோஸ் இயக்கம் அனைத்திலும் கண்ட்ரோல் பேனல் மற்றும் அதன் பிரிவுகள் அனைத்தும் நமக்கு ஒரே இடத்திலேயே கிடைத்து வந்தன. இதில் அப்படி தரப்படவில்லை என, விண்டோஸ் 8 பயன்படுத்தத் தொடங்கும் அனைவரும் உணர்கிறோம். இரண்டு இடங்களில் கண்ட்ரோல் பேனல் கட்டமைப்பினைக் காணலாம். 




ஒன்று ஸ்டார்ட் ஸ்கிரீனுடன் இணைந்து காணப்படுகிறது. இன்னொன்று டெஸ்க் டாப் இடைமுகத்துடன் உள்ளது. ஆனால், இரண்டுமே, அதில் உள்ள விஷயங்களை அமைத்திட முழு அனுமதியினை உடனே தருவதில்லை. இது தொடக்கத்தில் மிக மிகச் சிக்கலான ஒன்றாகவே காட்சி தருகிறது. 
இது, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ள God Mode என்பதனை அறியும் 




வரையில் தான். இதனைப் பயன்படுத்திப் பார்த்த பின்னர், முதலில் ஏற்பட்ட சிக்கலான உணர்வு மறைந்துவிடுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் God Mode என்பது ஒரு ஸ்பெஷல் போல்டராகத் தரப்பட்டுள்ளது. இதில் கண்ட்ரோல் பேனலின் அனைத்து தொடர்புகளையும், அமைப்பு வழிகளையும் உள்ளடக்கி அமைத்துவிடலாம். இந்த ஸ்பெஷல் போல்டரை அமைப்பது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை. ஆனால், சிறிய செட்டிங்ஸ் ஒன்றை மாற்றி அமைக்க வேண்டியதிருக்கும்.




முதலில், டெஸ்க் டாப் திறந்து, விண்டோஸ் பைல் எக்ஸ்புளோரரைத் தொடங்கவும். இதற்கு முதலில் விண்டோஸ் பைல் எக்ஸ்புளோரரில், வியூ டேப் திறக்கவும். இங்கு File name extensions மற்றும் Hidden items என்ற இரண்டு பாக்ஸ்களிலும் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இந்த இரண்டு மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர், விண்டோஸ் 8 டெஸ்க் டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் New மற்றும் Folder என்பதற்குச் செல்லவும். 
இங்கு ஒரு குறியீட்டினை அமைக்க வேண்டும். “New folder” என்ற தற்காலிகப் பெயருக்குப் பதிலாக, GodMode.{ED7BA4708E54465E825 C99712043E01C}என்ற நீளமான டெக்ஸ்ட்டைச் சரியாக அமைக்கவும். இதனை அமைத்தவுடன் என்டர் தட்டினால், புதிய போல்டர் GodMode என்ற பெயரில் அமைந்திருப்பதனைக் காணலாம். kkkkkk
இந்த போல்டரில் டபுள் கிளிக் செய்திடுங்கள். இப்போது கண்ட்ரோல் பேனலில் உள்ள அனைத்தும் பெரிய பட்டியலாகக் காட்டப்படுவதனைக் காணலாம். அதன் செட்டிங்ஸ், அமைப்பு வசதிகள் ஆகியன அனைத்தும் பல பிரிவுகளாகக் காட்சி அளிக்கும். நீங்கள் விரும்பினால், இந்த GodMode போல்டரை டெஸ்க் டாப்பிலேயே வைத்திருக்கலாம். அல்லது ரைட் கிளிக் செய்து, ஸ்டார்ட் பேஜில் பின் செய்து வைக்கலாம். இதன் மூலம் இதற்கென தனி டைல் அமைத்துக் காட்டப்படும். அல்லது விண்டோஸ் பைல் எக்ஸ்புளோரரில் பின் செய்து வைக்கலாம். அல்லது நீங்கள் விரும்பும் எந்த இடத்திலும் பின் செய்து வைத்து அமைக்கலாம். என்ன, விண்டோஸ் 8 கொண்டிருக்கும் கடவுள் வழி இப்போது நீங்கள் விரும்பும் வழியாகிவிட்டதா!









புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்