இந்தியாவில் வரும் மாதங்களில் விண்டோஸ் 8 டேப்ளட் பிசி வருகிறது - விற்பனை பெருகுமா? Windows 8 tablet pc Coming INDIA

சென்ற வாரம், மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி சங்கட் அகர்கர், இந்தியாவில் வரும் மாதங்களில், விண்டோஸ் 8
சிஸ்டத்துடன் கூடிய டேப்ளட் பிசிக்களைப் பல நிறுவனங்கள் வெளியிட இருப்பதாகவும், இதன் மூலம் மக்களிடையே, விண்டோஸ் 8 சிஸ்டம் பழக்கம் பரவலாகப் பரவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.





தற்போதைய டேப்ளட் பிசி சந்தையில், ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவன சிஸ்டங்கள் கொண்ட டேப்ளட் பிசிக்கள், 97 சதவீதச் சந்தைப் பங்கினைக் கொண்டுள்ளன. விண்டோஸ் 8, மூன்றே மூன்று சதவீதப் பங்கினை மட்டுமே கொண்டுள்ளன.
சென்ற அக்டோபர் 25ல், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர்த்தக ரீதியாக வெளியானது. தொடு திரை இயக்கம், பெர்சனல் கம்ப்யூட்டர் முதல், ஸ்மார்ட் போன் வரையிலான அனைத்து இயக்கங்களையும்




ஒருங்கிணைக்கும் கட்டமைப்பான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என, டிஜிட்டல் உலகிற்குப் புதுமையான ஒன்றாக, விண்டோஸ் 8 அறிமுகமானது. ஆனால், எந்தப் பிரிவிலும் அவ்வளவான உற்சாகமான வரவேற்பினை இந்த சிஸ்டம் மக்களைச் சென்றடையவில்லை. குறிப்பாக, பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் பிரிவுகளில், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு, எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பில்லை. மேலும் மக்கள், கம்ப்யூட்டரிலிருந்து ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களுக்கு மாறத் தொடங்கி உள்ளனர்.

எனவே, மைக்ரோசாப்ட் தற்போது, டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களைக் குறி வைத்து தன் வர்த்தகப் பங்கினைத் தக்க வைக்க முயற்சிக்கிறது. 




ஆனால், ஏற்கனவே உள்ள ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் கொண்ட சாதனங்கள் கடுமையான போட்டியைத் தந்து வருகின்றன. எனவே, இந்த சந்தையில் தனக்கென ஓர் இடம் பிடிக்க, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 அதிக நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கும் என அனைவரும் கருதுகின்றனர். ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சாதனங்கள் 88 சதவீதப் பங்கினையும், ஐ.ஓ.எஸ். சிஸ்டம் சாதனங்கள் 10 சதவீதப் பங்கினையும் கொண்டுள்ளன, என சைபர் மீடியா ரிசர்ச் அமைப்பு கண்டறிந்துள்ளது. 




ஆனால், இந்தியச் சந்தையில் எப்படியும் தன் சிஸ்டம் கொண்ட சாதனங்களைப் பரவலாக்க மைக்ரோசாப்ட் இந்தியா முயற்சிக்கிறது. இந்தியாவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, இரண்டு ஆய்வு மற்றும் வளர்ச்சி மையங்கள், 5,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இயங்குகின்றன. சென்ற 2012 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் இந்தியா ரூ. 5,417 கோடி வருமானம் பெற்றது. 
மக்கள் வாங்கும் சக்திக்குள்ளான விலையில், விண்டோஸ் 8 சாதனங்கள் வரப்பெற்றால், மைக்ரோசாப்ட் இந்திய நிர்வாகிகளின் இலக்கு நிறைவேற வாய்ப்புள்ளது. சென்ற வாரம், ஹூய்லட் பேக்கார்ட் நிறுவனம் ரூ.43,500 விலையில் விண்டோஸ் 8 டேப்ளட் பிசி ஒன்றை விற்பனைக்கு




வெளியிட்டது. ஏசர், அசூஸ் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் புதிய விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களை, ரூ.25,000 முதல் ரூ.40,000 விலையில் வெளியிட உள்ளன. ஆனாலும், இன்னும் குறைவாக ரூ.15,000 முதல் ரூ. 25,000 விலையில் இவை வெளியானால் மட்டுமே, விண்டோஸ் 8 சாதனங்கள் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்