இந்தியாவில் ஆப்பிள் பெற்ற வெற்றிக்கனி - Apple in india Win



இந்தியாவில் ஆப்பிள் சாதனங்கள் விற்பனை, அவற்றின் விலை காரணமாக,

kkk


மந்த கதியில் இருந்த நிலையில், அதன் ஐ போன் 4 விற்பனை அண்மையில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை உத்திதான்.





பொதுவாகவே, ஆப்பிள் நிறுவனம் தன் சாதனங்கள் விற்பனையை அதிகரிக்க எந்தவிதமான சோதனையையும் மேற்கொள்ளத் தயங்குவதே இல்லை. அதனால் தான், விற்பனை அடிப்படையில் அது உலகின் இரண்டாவது நிறுவனமாக உள்ளது. 






முதல் முறையாக, ஆப்பிள் நிறுவனத்தின் சரித்திரத்தில், இந்தியாவில், புதிய விற்பனை வழி ஒன்று அறிவிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள், தங்கள் பழைய மொபைல் போனைக் கொடுத்து புதிய ஐபோன் 4 வாங்கினால், அதன் விலையில் அதிக பட்சம் ரூ.7,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என 




அறிவித்தது. சந்தையில் குறிப்பிட்ட அந்த போனுக்கு விலை ரூ.7,000க்கும் மேலாக இருந்தால், கூடுதல் விலைக்கு, ஐபோன் 4க்கான துணை சாதனங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டது. அல்லது பரிசுக் கூப்பன்களும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போனையும் வாடிக்கையாளர்கள் கொண்டு வந்து, புதிய ஐபோனுக்கு மாற்றிக் கொள்ளலாம். லாவா, மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் உட்பட.




இந்த திட்டம் அறிவிக்கப்பட்டவுடன், இந்தியாவில் ஐபோன் 4 விற்பனை மிக வேகமாக இருந்தது. பல வாடிக்கையாளர்கள், இந்த சலுகையைப் பயன்படுத்தி, ஐபோன் 4 ஐ வாங்கினார்கள். ஐபோன் 5ன் விற்பனையைக் காட்டிலும், இந்த வகையில் ஐபோன் 4 விற்பனை அதிகமாக இருந்தது. ஆப்பிள் ஐபோன் 4ன் விலை ரூ.26,500 ஆக இருந்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில், அதிக பட்ச தள்ளுபடி அளிக்கையில், விலை ரூ.20,000க்கும் கீழே இறங்கியது. 




பொதுவாகவே, இந்தியாவில் முதல் முறை ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர் ரூ12,000 முதல் ரூ.20,000 வரை செலவழிக்கத் தயாராக இருப்பதால், இந்த திட்டத்தின் அடிப்படையில் பலரும் ஐபோன் 4 வாங்கினார்கள். இதனை இலக்காக வைத்துத்தான், ஆப்பிள் நிறுவனமும் இத்திட்டத்தினைக் கொண்டு வந்து வெற்றி பெற்றது. 2012 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 2 லட்சத்து 50 ஆயிரம் ஐபோன்கள், இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாயின. 
இதனைக் கண்ட சாம்சங் நிறுவனமும், தன் ஸ்மார்ட் போனை விற்பனை செய்திட புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








புதிய பதிவுகளை E-MAIL ல்




s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்