விண்டோஸ் 7: சில இடைஞ்சல்கள் - அவற்றை எப்படி தவிர்க்கலாம்? பகுதி:1


விண்டோஸ் 7 சிஸ்டம், பயன்படுத்த நமக்கு மிகவும் எளிமையானதாகவும், வேகமாக வேலைகளை முடிப்பதற்கான வசதிகள் கொண்டதாகவும் உள்ளது.
ஆனால், நாம் பணியாற்றுகையில், சின்ன சின்ன இடைஞ்சல்களை இது 




தருவதாக, நாம் அனைவரும் உணர்கிறோம். இவை நம் பணிக்கு கூடுதல் வசதிகளையும், பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகளையும் தருகின்றன. இருப்பினும் இவற்றை நாம் விரும்புவதில்லை. எனவே, அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பதை இங்கு காணலாம். 







 அழிக்கவா வேண்டாமா

எந்த ஒரு பைலை நாம் அழிக்க முற்பட்டாலும், அதனை அழிக்கவா? வேண்டாமா? என்ற கேள்வியினை விண்டோஸ் 7 கேட்கிறது. நாம் அடிக்கடி பைல்களை நீக்கும் பணியை மேற்கொள்வதாக இருந்தால், இது 









குறுக்கீடாகத்தான் இருக்கும். இது தேவையே இல்லை. ஏனென்றால், தெரியாமல் நாம் ஒரு பைலை நீக்கிவிட்டாலும், அதனை ரீ சைக்கிள் பின்னிலிருந்து அல்லது விண்டோஸ் எக்ஸ் புளோரர் பிரிவில் அன் டூ செயல்பாட்டினை மேற்கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த கேள்வியினை விண்டோஸ் தராமல் இருக்க, ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இங்கு Display delete confirmation என்று இருக்கும் இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.








புதிய பதிவுகளை E-MAIL ல்


s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்