Chrome குரோம் பிரவுசர் நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர: Part 1

Part 1

குரோம் பிரவுசர் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து
வருகிறது. முதலில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் விருப்பமாக இருந்த இந்த பிரவுசர் தற்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் பிரவுசராக இடம் பிடித்து வருகிறது. லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.




1. கீ போர்ட் ஷார்ட்கட் பயன்பாடு:

மவுஸ் வழியாக மட்டுமின்றி, கீ போர்ட் ஷார்ட் கட் வழிகள் மூலமாகவும், பல செயல்பாடுகளை குரோம் பிரவுசரில் மேற்கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, கண்ட்ரோல்+1 தொடங்கி, கண்ட்ரோல் + 8 வரை அழுத்தினால், பிரவுசரில் திறக்கப்பட்டுள்ள இணைய தளங்களை அந்த எண் வரிசையில் இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.
இதன் செட்டிங்ஸ் மாற்ற ஆல்ட்+எப் அல்லது ஆல்ட் +இ (Alt +F / Alt+E) பயன்படுத்தலாம்.
Ctrl+D அப்போதைய இணைய தளத்திற்கு புக்மார்க் அமைக்கிறது.
Ctrl+H குரோம் ஹிஸ்டரியைத் தருகிறது.
Ctrl+J டவுண்லோட்ஸ் பிரிவிற்குச் செல்கிறது.
Ctrl+K அட்ரஸ் பார் வழியே, மிக வேகமான தேடலுக்கு வழி தருகிறது. தேடலுக்கான சொல்லை அமைத்து என்டர் தட்டினால் போதும்.
Ctrl+N புதிய விண்டோ திறக்கப்படுகிறது.





Ctrl+Sht+D அப்போது திறக்கப்பட்டிருக்கும் அனைத்து டேப்களையும், ஒரு புதிய புக்மார்க் போல்டரில் அமைக்கிறது.
Ctrl+Sht+N இன் காக்னிடோ எனப்படும், செயல்பாடுகளைப் பின்தொடராத தனி நபர் பயன்பாட்டிற்கு வழி கிடைக்கிறது.
Ctrl+Sht+T மூடப்பட்ட ஒரு டேப்பினைத் திறக்கிறது. இப்படியே இறுதியாக மூடப்பட்ட பத்து டேப்களை, அவற்றில் இயங்கிய இணையதளங்களுடன் திறக்கலாம்.
இவை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள். இது போல இன்னும் நிறைய பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. நாம் பயன்படுத்தும் எக்ஸ்டன்ஷன் அல்லது அப்ளிகேஷன்களுக்கு, நாமாகவும் ஷார்ட் கட் கீ தொகுப்பினை அமைக்கலாம். Alt+F/Alt+E மூலம் குரோம் மெனு சென்று Settings | Extensions பிரிவில் இச்செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.





2. செயல் தளங்கள் செல்ல குறுக்கு வழி:
குரோம் பிரவுசர் அட்ரஸ் பார் வழியாகவே, சில செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய தளங்களை நமக்குக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, chrome://bookmarks என டைப் செய்து புக்மார்க்ஸ் பக்கத்திற்குச் செல்லலாம். chrome://setting என்பது செட்டிங்ஸ் பக்கத்தினைத் திறந்து கொடுக்கும். இதே போல எக்ஸ்டன்ஷன் பக்கம் திறக்க chrome://extensions என அட்ரஸ் பாரில் அமைத்து என்டர் செய்திட வேண்டும். ஹிஸ்டரி பக்கம் கிடைக்க chrome://history என அமைக்க வேண்டும். இந்தச் சொற்களை புக்மார்க் ஆக சேவ் செய்து, அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்து பெறலாம்.






3. புதிய டேப் தரும் வசதிகள்:

குரோம் பிரவுசரில், புதிய டேப் மற்ற பிரவுசர்கள் தராத சில வசதிகளைக் கொண்டுள்ளது. புதிய டேப் பக்கத்தினை Ctrl+T அழுத்தியோ அல்லது குரோம் பிரவுசர் திறக்கப்பட்டவுடனேயோ பெறலாம். இங்கு நீங்கள் இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷன்கள், அப்போது மூடப்பட்ட தளங்கள், வெப் ஸ்டோர் என அனைத்தும் காட்டப்படுகின்றன. இவற்றில் தேவை யானதைக் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.









புதிய பதிவுகளை E-MAIL ல்


s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்