Windows 7 Shortcuts விண்டோஸ் 7 தரும் பயனுள்ள வசதிகள் பகுதி:5



புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பெற்று பயன்படுத்தத் தயங்குபவர்கள், இப்போது விண்டோஸ் 7 தொகுப்பினையே
பெறுகின்றனர். அதன் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்திப் பார்த்து, அவற்றின் தன்மையினை முழுமையாகப் பெறச் செயல்படு கின்றனர். 




விஸ்டாவின் தோல்விக்குப் பின் வந்த இந்த சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பல கூடுதல் வசதிகளைத் தந்துள்ளது. பல புதுமைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். 



சிஸ்டத்தினை ரிப்பேர் செய்திட






கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வாசகர்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டு அவசர அழைப்புகளைக் கொடுப்பதுண்டு. அவர்களிடம், ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி உள்ளதா என்று கேட்டால், பதில் கிடைக்காது. ஏனென்றால், சிஸ்டத்துடன் தரப்படும் சிடிக்களில், அப்படி ஒன்று உள்ளதென்று தெரிந்தவர்கள், அதனைப் பத்திரமாக வைத்திருப்பதில்லை. அப்படியானால், 





விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, இன்டர்நெட்டிலிருந்து டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். விண்டோஸ் 7 சிஸ்டம் இதுபோன்ற ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி தயாரிக்கும் வழியைக் கொண்டுள்ளது. சிஸ்டம் பூட் ஆவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலையில், இது போன்ற சிடிக்கள் நமக்கு கை கொடுக்கும்.

இதனைத் தயாரிக்க Start > All Programs > Maintenance > Create a System Repair Disc என்று செல்லவும். விண்டோஸ் 7, சிஸ்டத் தினை இயக்கக் கூடிய சிடி ஒன்றைத் தயாரித்துக் கொடுக்கும்.




பிரச்னைகளைக் கண்டறிய


சில வேளைகளில், சிஸ்டத்தின் சில செயல்பாடுகள் மட்டும் முடங்கிப் போகும். அந்த வேளையில், எதனால் பிரச்னை ஏற்படுகிறது என நமக்குத் தெரியாது. இதனைக் கண்டறிந்து கொள்ள, விண்டோஸ் 7 வழி ஒன்றைத் தருகிறது. அது போன்ற சூழ்நிலையில், கண்ட்ரோல் பேனல் செல்லவும். 

அங்கு System and Security என்பதன் Find and Fix என்ற பிரிவைப் பார்க்கவும். அல்லது சர்ச் பாக்ஸில் Troubleshooting என்று டைப் செய்து என்டர் தட்டவும். பொதுவான பிரச்னைகள், நீங்கள் அமைத்துள்ள செட்டிங்ஸ், சிஸ்டம் கிளீனிங் போன்ற வழிகளில், பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கலாம். இதற்கு முன் இதே போல ஏற்பட்டிருந்தால், சர்ச் பாக்ஸில் Troubleshooting history என்று டைப் செய்து பார்க்கவும். இந்த விண்டோவின் இடது மேல் பக்க மூலையில் View All என்ற லிங்க்கில் கிளிக் செய்தால், இதற்கு முன் இது போல ஏற்பட்ட சிக்கல்கள், அவற்றின் தன்மை மற்றும் தீர்வுகள் காட்டப்படும்.








புதிய பதிவுகளை E-MAIL ல்


s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்