Windows 7 Shortcuts விண்டோஸ் 7 தரும் பயனுள்ள வசதிகள் பகுதி:4



புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பெற்று பயன்படுத்தத் தயங்குபவர்கள், இப்போது விண்டோஸ் 7 தொகுப்பினையே
பெறுகின்றனர். அதன் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்திப் பார்த்து, அவற்றின் தன்மையினை முழுமையாகப் பெறச் செயல்படு கின்றனர். 




விஸ்டாவின் தோல்விக்குப் பின் வந்த இந்த சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பல கூடுதல் வசதிகளைத் தந்துள்ளது. பல புதுமைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். 

புதிய செயல்முறையில் வேர்ட் பேட்






எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புடன் வரும் வேர்ட் புரோகிராமினையே அனைவரும் பயன்படுத்துகிறோம். அதனால் சிஸ்டத்துடன் வரும் நோட் பேட் மற்றும் வேர்ட் பேட் புரோகிராம்களை அவ்வளவாகப் பயன்படுத்துவது இல்லை. நோட்பேட் புரோகிராமினையாவது, சில புரோகிராம்களை எழுதுகையில் இயக்குகிறோம். ஆனால் வேர்ட் பேட் புரோகிராமினை முழுமையாக ஒதுக்கி வைக்கிறோம். இதனாலேயே மைக்ரோசாப்ட் நிறுவனமும், இதில் எந்த 





மாற்றங்களையும் ஏற்படுத்தாமலேயே, தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் தந்து வந்தது. இப்போது விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இது பெரிய மாற்றங்களுடனும் வசதிகளுடனும் தரப்பட் டுள்ளது. இப்போது டாகுமெண்ட்களை விருப்பப்படியான பார்மட்டில் உருவாக்க முடியும். ஆர்.டி.எப். (.rtf) பார்மட்டில் தான் இவற்றை முன்பு சேவ் செய்து வந்தோம். இப்போது இவற்றை Office Open XML documet (.docx) ஆகவும் சேவ் செய்திடலாம். இதனால் வேர்டில் உருவாக்கப்படும் இந்த பார்மட் பைல்களை, வேர்ட் பேடிலும் திறந்து எடிட் செய்திடலாம்.






டெஸ்க்டாப் ஒழுங்கமைப்பு


ஐகான்கள் திரையெங்கும் சிதறிக் கிடக்கின்றனவா! சிரமம் எடுத்து அவற்றைச் சீரமைக்க வேண்டாம். எப்5 கீயை, சற்று நேரம் அழுத்தியவாறு வைக்கவும். ஐகான்கள் தாமாக சீராக அமைக்கப்படும். அல்லது வழக்கம்போல, டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, விஸ்டாவில் உள்ளது போல, View, Auto arrange அழுத்தவும்.








புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்