ஸ்டோரேஜ் டிஸ்க் - இந்த ஆண்டில் ஹார்ட் ட்ரைவின் விலை தொடர்ந்து குறையாமலே இருக்கும்? Hard Desk Storage

டிஜிட்டல் உலகில், அதன் தொழில் நுட்பத்தின் பரிமாணங்களும், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களும் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன.
இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கின்ற ஒரு சாதனம், குறுகிய காலத்திலேயே மிகப் பழைய சாதனமாக, எந்த வகையிலும் பயனற்ற ஒன்றாக மாறி வருகிறது. இப்போது யார் டயலைச் சுழற்றி தரைவழி இணைப்பு 




தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர்? பலருக்குத் தங்கள் மொபைல் எண்களே மறந்து போகின்றன. நமக்கு நெருக்கமான மனைவி மற்றும் நம் குழந்தைகளின் தொலைபேசி எண்களைக் கூட நினைவில் வைக்காமல், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். கம்ப்யூட்டர்களின் இடத்தில் லேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன் என சுழன்று வருகின்றன. இணையத் தொடர்பின் வேகம் மின்னலுக்கு ஒப்பாகி வருகிறது. டிஜிட்டல் திரைகள் விரிந்து, நம் விழிகளின் அசைவின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் நாள் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இவ்வாறு விரியும் டிஜிட்டல் சாதனங்கள் இனி எப்படி அமையும் என்பதை இங்கு காணலாம்.




ஸ்டோரேஜ் டிஸ்க்
இந்த ஆண்டில் ஹார்ட் ட்ரைவின் விலை தொடர்ந்து குறையாமலே இருக்கும். தாய்லாந்தில் வெள்ளம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மறையவில்லை. ஆனால், சாலிட் ஸ்டேட் டிஸ்க் தயாரிப்பு நிச்சயம் 





அதிகமாகும். இதன் விலை குறையும். டிஜிட்டல் சந்தையில் இன்னும் பல சாதனங்களில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். பிரிண்டர்களில் மூன்று டைமன்ஷன் பிரிண்டிங், ரௌட்டர் இயக்கத்தில் கூடுதல் வேகம், நாம் பேசுவதைப் புரிந்து கொண்டு செயலாற்றும் டிவி, கம்ப்யூட்டர் செயல்பாடுகளையும் ஏற்று





காட்டும் தடிமன் குறைவான திரைகள் எனப் பலவற்றைக் கூறலாம். இவை இந்த ஆண்டு வெளிவரும்போது அவை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கு காணலாம்.








புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்