Chrome குரோம் பிரவுசர் நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர: Part 2


Part 2

4. பிரவுசருக்கான டாஸ்க் மானேஜர்:




விண்டோஸ் சிஸ்டத்திற்கு இருப்பதைப் போல, குரோம் பிரவுசர் தன் செயல் பாட்டினைக் கண்காணிக்க, தனியே ஒரு டாஸ்க் மானேஜரைக் கொண்டுள்ளது. இதனை, Shift+Esc கீகளை அழுத்திப் பெறலாம். இதில் எவ்வளவு மெமரி பயன்படுத்தப்படுகிறது, சி.பி.யு.நிலை, இணையத்திலிருந்து பெறப்பட்ட பைட்ஸ், அனுப்பப்பட்ட பைட்ஸ் அளவு, டேப்ஸ், அப்ளிகேஷன்கள், ப்ளக் இன் புரோகிராம்கள் போன்ற பல தகவல்கள் கிடைக்கின்றன. இதன் மூலம், பிரவுசர் இயங்குவதில் பிரச்னை ஏற்படுகையில், சிக்கல் எங்கு என அறிந்து தீர்ப்பது எளிதாக இருக்கும். 







5. தடயம் அறியா இணைய உலா:
குரோம் பிரவுசர் இன் காக்னிடோ என்ற வகை பிரவுசிங் வசதியினைத் தருகிறது. இதனை இயக்கி, இணைய தளங்களைப் பார்வையிடுகையில், அவை குறித்த தகவல்களை குரோம் பிரவுசர் குறித்து வைக்காது. நாம் தேடும் தளங்களை, அதில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பிறர் அறிந்து கொள்ளாமல் இருக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். Ctrl+Shift+N அழுத்தி இந்த வகை பிரவுசிங் செயல் பாட்டினை மேற்கொள்ளலாம்.





6. ஆம்னிபாக்ஸ் தேடல்:
குரோம் பிரவுசரின் அட்ரஸ் பாரை, தேடல் கட்டமாகப் பயன்படுத்தி, நாம் இணையத் தேடலை மேற்கொள்ளலாம். இதனால், தேடல் வேகம் அதிகரிக்கிறது. தேடும்போது இந்தக் கட்டத்தினை ஆம்னிபாக்ஸ் (Omnibox) என குரோம் அழைக்கிறது.














புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்