Chrome Browser குரோம் பிரவுசர் நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர: Part 3

Part 3
7. டேப்களை மாற்றி அமைக்க:






குரோம் பிரவுசரின் டேப்கள் நிலையானது அல்ல. நம் வசதிப்படி அவற்றின் இடத்தை மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, நாம் சில தின இதழ்களின் டேப்களை அடுத்தடுத்து அமைத்துப் பார்க்க விரும்பினால், அவற்றை இழுத்து வரிசையாக அமைத்துக் கொள்ளலாம். டேப்கள் அதிகம் இடம் எடுத்துக் கொள்ளாத வகையில் அட்ரஸ் பாருக்குக் கீழாக பின் அப் செய்தும் வைக்கலாம்.


8. தானாகத் தளங்கள் திறக்கப்பட:





குறிப்பிட்ட இணைய தளங்களை, பிரவுசர் திறந்தவுடன் திறந்து பயன்படுத்துபவரா நீங்கள்? அவ்வாறெனில், பிரவுசர் திறக்கும் போதே, இவையும் திறக்கும் வகையில் செட் செய்திடலாம். இதற்கு, Alt +F/Alt+E அழுத்தி செட்டிங்ஸ் பக்கம் செல்லவும். இங்குள்ள On Startup என்ற பிரிவில், Open A Specific Page Or Set Of Pages என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Set Pages என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். நீங்கள் இங்கு அமைத்திடும் தளங்கள் அனைத்தும், பிரவுசர் திறக்கப்படுகையில் திறக்கப்படும். அதேபோல, எந்த இணையதளம் பார்த்துக் கொண்டிருக்கையில், பிரவுசர் மூடப்பட்டதோ, அதே இணையதளத்துடன் மீண்டும் பிரவுசரைத் திறக்கும் வகையிலும் செட் செய்திடலாம். செட்டிங்ஸ் பிரிவில், Continue Where I Left Off என்பதனைத் தேர்ந்தெடுத்து செட் செய்தால் போதும்.





9. பின் தொடராதே:
அண்மையில் வந்துள்ள குரோம் பிரவுசர் 23 பதிப்பில், நாம் காணும் இணைய தளம் குறித்த தகவல்களை பிரவுசர் தொடராமல் இருக்கும்படி செய்திட வசதி தரப்பட்டுள்ளது. இந்த வசதி Do Not Track என, அல்லது சுருக்கமாக DNT என அழைக்கப்படுகிறது.
மேலே சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும், குரோம் பிரவுசரைத் தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு நேரத்தை மிச்சப் படுத்துவதுடன், இணைய உலாவினை எளிதாகவும், மனம் விரும்பும் வகையிலும் அமைத்திடும்.






குரோம் பிரவுசர் நாம் விரும்பும் வகையில் வசத்திற்கு...>> Part:2








புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்