சமூக வலைத் தள அக்கவுண்ட் பதிவை நீக்க : ட்விட்டர்

ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்கள் தங்களுக்கென பதிவு ஒன்றைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தங்களை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும், நண்பர்களுடன் தொடர்பு
கொள்ளவுமான பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றை நாடி, தங்களுக்கென அக்கவுண்ட் பதிவு ஒன்றை அமைப்பது மிக மிக எளிது. ஆனால், அந்த அக்கவுண்ட்டினை முடித்துக் கொள்வது அவ்வளவு எளிதான வழியாகக் காட்டப்படவில்லை. அவ்வாறு பதிவை ரத்து செய்து 





முடித்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டாலும், நாம் ஏற்கனவே அவற்றில் அமைத்த பதிவுகளையும், நம் தொடர்புகளையும் பதிந்து எடுத்து வைத்துக் கொள்ள ஆசைப்படுவோம். நாம் மேற்கொண்ட தொடர்புகள் நமக்கு எந்த நாளும் நினைவில் இருப்பது உற்சாகம் தரும் என்பதற்காக, இந்த ஆவல் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே, நீங்கள் முதலில் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் உள்ள தொடர்பு தகவல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுத்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பதிவு செய்து கொள்ளலாம். அடுத்து, அக்கவுண்ட் நீக்கும் வழியை நாடலாம். 

ட்விட்டர்





அடுத்ததாக, பிரபலமாக இயங்கும் சமூக இணைய தளம் ட்விட்டர். இதிலிருந்து விலகும் முடிவினை எடுத்து விட்டீர்களா? ட்விட்டர் இணைய தளத்திற்கு வழக்கம் போலச் செல்லுங்கள். உங்கள் அக்கவுண்ட் பதிவில் நுழையுங்கள். இணைய தளப் பக்கத்தில், வலது மேல் மூலையில் காணப்படும் சிறிய சக்கர ஐகானில் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் பக்கத்தில் கீழாகக் காட்டப்படும் ‘Deactivate my account’ என்ற தொடர்பில் கிளிக் செய்திடுங்கள். இதில் உள்ள பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது 





உங்களுக்கு ஓர் எச்சரிக்கை கிடைக்கும். தற்காலிகமாக உங்கள் அக்கவுண்ட் பதிவு நீக்கப்படு வதாகவும், தொடர்ந்து 30 நாட்கள் எந்த செயல்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என்றால், உங்கள் பதிவு நீக்கப்படும் என்று ஒரு செய்தி காட்டப்படும். இந்த 30 நாட்களில், மீண்டும் ட்விட்டர் இணையதளத் தொடர்பு தேவை என நீங்கள் எண்ணினால், வழக்கம் போல லாக் இன் செய்து தொடரலாம். 





Next Coming... : 

கூகுள் ப்ளஸ்








புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்