Tablet Pc - இந்த ஆண்டிலும், இனி வரும் ஆண்டுகளிலும் வேகமான மாற்றத்தைக் காண இருப்பது டேப்ளட் பிசிக்களே?

டிஜிட்டல் உலகில், அதன் தொழில் நுட்பத்தின் பரிமாணங்களும், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களும் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன.





இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கின்ற ஒரு சாதனம், குறுகிய காலத்திலேயே மிகப் பழைய சாதனமாக, எந்த வகையிலும் பயனற்ற ஒன்றாக மாறி வருகிறது. இப்போது யார் டயலைச் சுழற்றி தரைவழி இணைப்பு 
தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர்? பலருக்குத் தங்கள் மொபைல் எண்களே மறந்து போகின்றன. நமக்கு நெருக்கமான மனைவி மற்றும் நம் 





குழந்தைகளின் தொலைபேசி எண்களைக் கூட நினைவில் வைக்காமல், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். கம்ப்யூட்டர்களின் இடத்தில் லேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன் என சுழன்று வருகின்றன. இணையத் தொடர்பின் வேகம் மின்னலுக்கு ஒப்பாகி வருகிறது. டிஜிட்டல் திரைகள் விரிந்து, நம் விழிகளின் அசைவின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் நாள் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இவ்வாறு விரியும் டிஜிட்டல் சாதனங்கள் இனி எப்படி அமையும் என்பதை இங்கு காணலாம்.




டேப்ளட் பிசி

இந்த ஆண்டிலும், இனி வரும் ஆண்டுகளிலும் வேகமான மாற்றத்தைக் காண இருப்பது டேப்ளட் பிசிக்களே. இந்த ஆண்டில், 16 கோடியே 59 லட்சம் டேப்ளட் பிசிக்கள் விற்பனை செய்யப்படும் (2012ல் இது 11.71 கோடி) என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இது 2016ல், 26 கோடியே 14 லட்சமாக இருக்கும் என 





எதிர்பார்க்கப்படுகிறது. ப்ராசசர் வரிசையிலும், ஏ.ஆர்.எம். ப்ராசசர் இவற்றிற்கு ஈடு கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களில் இவற்றின் சிறப்பான செயல்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு டேப்ளட் பிசிக்கள் சந்தையில், விண்டோஸ் 8 இயக்கத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்கள் தங்கள் சிறப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 









புதிய பதிவுகளை E-MAIL ல்


s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்