Paint கம்ப்யூட்டருக்குப் புதியவரா! > பெயிண்ட் - ஆச்சரியப்படத்தக்க பல விஷயங்கள்?



விண்டோஸ் இயக்கத்தில் பெயிண்ட் அப்ளிகேஷன்கள் நமக்குப் பல வகைகளில் எளிதாக, பயனுள்ள வகையில்






உதவிடும் புரோகிராம்களாக அமைந்துள்ளன. ஆனால் எக்ஸெல், வேர்ட், பிரசன்டேஷன் புரோகிராம்கள் போல இவற்றை நாம் தோண்டி துருவிப் பார்ப்பதில்லை. இவை குறித்து அவ்வளவாக டிப்ஸ்கள் கூட 




வெளியாவதில்லை. ஆனால் இந்த புரோகிராம்களிலும், ஆச்சரியப்படத்தக்க பல விஷயங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. இவற்றைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதால், அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.







புதிய அம்சங்களுடன் பெயிண்ட்



விண்டோஸ் 7 பெயிண்ட் தொகுப்பில் இப்போது பல புதிய பிரஷ்கள் இணைக்கப் பட்டுள்ளன. இதனால் நாம் இதுவரை ஏற்படுத்திய சில வழக்கமான கோடுகளுடன் இன்னும் பல வகையான கோடுகளை ஏற்படுத்தலாம். கிரேயான், வாட்டர் கலர், ஆயில் பிரஷ் எனத் தரப்பட்டிருக்கும் இந்த பிரஷ்கள் புதிய பல உருவங்களை உருவாக்கப் பயன்படுகின்றன.





பெயிண்ட் தளத்தில் உள்ள படம் ஒன்றை, ஒவ்வொரு பிக்ஸெல்லாக எடிட் செய்வதற்கு வசதி தற்போது தரப்பட்டுள்ளது. கண்ட்ரோல் + ஜி அழுத்தி கிரிட்டைக் கொண்டு வர வேண்டும். பின் படத்தினை 600 டிகிரி அளவில் ஸூம் செய்து, காட்சி அளிக்கும் பிக்ஸெல் களில் தேவைப்படும் பிக்ஸெல்களை ஒவ்வொன்றாக எடிட் செய்திடலாம்.









புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்