கம்ப்யூட்டருக்குப் புதியவரா! > நோட்பேட் - ஆச்சரியப்படத்தக்க பல விஷயங்கள்?


விண்டோஸ் இயக்கத்தில் நோட்பேட் நமக்குப் பல வகைகளில் எளிதாக, பயனுள்ள வகையில் உதவிடும் புரோகிராம்களாக அமைந்துள்ளன. ஆனால்






எக்ஸெல், வேர்ட், பிரசன்டேஷன் புரோகிராம்கள் போல இவற்றை நாம் தோண்டி துருவிப் பார்ப்பதில்லை. இவை குறித்து அவ்வளவாக டிப்ஸ்கள் கூட வெளியாவதில்லை. ஆனால் இந்த புரோகிராம்களிலும், ஆச்சரியப்படத்தக்க பல விஷயங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. இவற்றைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதால், அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.





நோட்பேடில் நேரம்

பலர் தற்காலிகமாக, ஆனால் தொடர்ந்து குறிப்புகள் எழுத, நோட்பேடினைப் பயன்படுத்துகிறோம். சில தகவல்களை என்று எப்போது அமைத்தோம் என்று அறிய, அந்த நாள் மற்றும் நேரத்தினை அமைப்போம். இதனை நோட்பேட் தானாகவே அமைக்கும் வழி ஒன்று உண்டு. பைல் ஒன்றினைத் திறந்து முதல்





 வரியில் .LOG (எல்லாமே பெரிய எழுத்துக்களில்) என்று அமைக்கவும். பின் வழக்கம்போல் குறிப்புகள் எழுதி வைக்கவும். நோட்பேட், நீங்கள் குறிப்பு அமைத்திடும் நேரம் மற்றும் தேதியை எழுதி வைக்கும். பின்னர், மீண்டும் இன்னொரு நாள் அல்லது இன்னொரு நேரம் பைலைத் திறந்தால், அந்த நேரம் மற்றும் நாள் அதில் அமைக்கப்படும். இப்படியே இது தொடரும். ஒவ்வொரு முறை பைலைத் திறந்து மூடுகையில் அதனை சேவ் செய்து மூட வேண்டும்.








புதிய பதிவுகளை E-MAIL ல்


s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்