Laptop to Tablet லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் பிசிக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு?

 
டிஜிட்டல் உலகில், அதன் தொழில் நுட்பத்தின் பரிமாணங்களும், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களும் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன.
இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கின்ற ஒரு சாதனம், குறுகிய காலத்திலேயே மிகப் பழைய சாதனமாக, எந்த வகையிலும் பயனற்ற ஒன்றாக மாறி வருகிறது. இப்போது யார் டயலைச் சுழற்றி தரைவழி இணைப்பு 





தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர்? பலருக்குத் தங்கள் மொபைல் எண்களே மறந்து போகின்றன. நமக்கு நெருக்கமான மனைவி மற்றும் நம் குழந்தைகளின் தொலைபேசி எண்களைக் கூட நினைவில் வைக்காமல், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். கம்ப்யூட்டர்களின் இடத்தில் லேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன் என சுழன்று வருகின்றன. இணையத் தொடர்பின் வேகம் மின்னலுக்கு ஒப்பாகி வருகிறது. டிஜிட்டல் திரைகள் விரிந்து, நம் விழிகளின் அசைவின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் நாள் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இவ்வாறு விரியும் டிஜிட்டல் சாதனங்கள் இனி எப்படி அமையும் என்பதை இங்கு காணலாம்.






லேப்டாப் > டேப்ளட் 


லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் பிசிக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு வேகமாகக் குறைந்து வருகிறது. அமைதியாக இணைய உலா வர,





மின்னஞ்சல் நிர்வகிக்க, பாட்டு கேட்க, படம் பார்க்க என டேப்ளட் பிசிக்கள் பயன்படுத்தப்பட்டன, லேப்டாப் கம்ப்யூட்டர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து திறன் சார்ந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் அறிவுத் திறனாக்கப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால், அண்மைக் காலங்களில், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களின் செயல்பாடுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களுக்கிடையே, இயக்க முறை ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இணைவாய் இருக்கும் வகையில் மைக்ரோசாப்ட் தந்த விண்டோஸ் 8 இதற்கு முதல் பாலத்தை அமைத்துள்ளது. எதிர்காலம் இனி டேப்ளட் பிசிக்களுடையதாய்





இருக்கும். 13 அங்குல திரை கொண்ட டேப்ளட் பிசிக்கள் இந்த பணியை மேற்கொள்ளும். செயல்பாட்டிற்கு ஈடு கொடுக்கும் வகையில் திறன் கூடிய பிளாஷ் ட்ரைவ்கள் வரத் தொடங்கி உள்ளன. பற்றாக் குறைக்கு ஈடு கொடுக்க க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறை கை கொடுக்கிறது. இதற்கான இணைய இணைப்பு வேகமும் முறைகளும், எண்ணிப் பார்க்க முடியாத வேகத்தில் அமைந்து வருகின்றன. கூகுள் ஒரு நகரம் முழுமையும் தற்போது உள்ள இணைய வேகத்தினைக் காட்டிலும் 400 மடங்கு வேகத்தில் இணைய இணைப்பு தந்து, இந்த தொழில் நுட்பம் சாத்தியமே என்று காட்டியுள்ளது. வீட்டில் ஒரு டெஸ்க் டாப் பெர்சனல் கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு, அதனைச் சார்ந்த அனைவரும் கையடக்க டேப்ளட் பிசிக்களைத் தூக்கிச் சென்று, பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைப்பு பெற்று தங்கள் பணியை முடிக்க இயலும்.








புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்