Mobile அதிகம் வியக்கத்தக்க வகையில் தொழில் நுட்ப முன்னேற்றம்.

டிஜிட்டல் உலகில், அதன் தொழில் நுட்பத்தின் பரிமாணங்களும், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களும் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன.
இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கின்ற ஒரு சாதனம், குறுகிய காலத்திலேயே மிகப் பழைய சாதனமாக, எந்த வகையிலும் பயனற்ற ஒன்றாக மாறி வருகிறது. இப்போது யார் டயலைச் சுழற்றி தரைவழி இணைப்பு 





தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர்? பலருக்குத் தங்கள் மொபைல் எண்களே மறந்து போகின்றன. நமக்கு நெருக்கமான மனைவி மற்றும் நம் குழந்தைகளின் தொலைபேசி எண்களைக் கூட நினைவில் வைக்காமல், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். கம்ப்யூட்டர்களின் இடத்தில் லேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன் என சுழன்று வருகின்றன. இணையத் தொடர்பின் வேகம் மின்னலுக்கு ஒப்பாகி வருகிறது. டிஜிட்டல் திரைகள் விரிந்து, நம் விழிகளின் அசைவின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் நாள் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இவ்வாறு விரியும் டிஜிட்டல் சாதனங்கள் இனி எப்படி அமையும் என்பதை இங்கு காணலாம்.





ஸ்மார்ட் போன்



அதிகம் வியக்கத்தக்க வகையில் தொழில் நுட்ப முன்னேற்றம், மொபைல் ஸ்மார்ட் போன்களில் ஏற்பட்டு வருகிறது. இவற்றில் என்ன எதிர்பார்க்கலாம் என்று பட்டியல் இடலாம். முதலாவதாக, வயர்லெஸ் சார்ஜிங். எந்தவித இணைப்பும் இல்லாமல், இந்த போன்களை சார்ஜ் செய்திடலாம். HTC Droid DNA மற்றும் Nokia Lumia 920 ஆகியவை இதற்கான எடுத்துக்காட்டுக்களாகத் தற்போது உள்ளன. அடுத்து, குவாட் கோர் ப்ராசசர்கள் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுவது பெருகும். ஸ்மார்ட் போன்களில், அதிவேக 





செயல்பாடுகளை மேற்கொள்ளவும், கூடுதல் வேகத்தில் விளையாட வேண்டிய கேம்ஸ்களுக்கு இணையாக இயங்கவும், ஹை டெபனிஷன் வீடியோ படங்களைப் பார்ப்பதற்கும் இவை பெரும் அளவில் உதவிடும். 

அடுத்து, மொபைல் போன்களின் திரைகளைக் குறிப்பிடலாம். 5 அங்குல திரை என்பது இன்றைய நடைமுறையாகி வருகிறது. இன்னும் இதில் புதிய தொழில் நுட்பம் கொண்டு வரப்பட்டு, இதன் பயன்பாட்டினை அதிகப்படுத்தும். முக்கிய செயல்பாடாக, அடுத்து, நாம் பார்க்க வேண்டியது அண்மைக் கள தகவல் 





தொடர்பு (NFC–Nearfield communication) தொழில் நுட்பம். 2012ல் வெளியான இந்த தொழில் நுட்பம், சென்ற ஆண்டில் பெரிய அளவில் எடுபடவில்லை. இந்த ஆண்டில் இது பரவலாகும் வாய்ப்புகள் அதிகம். என்.எப்.சி. தொழில் நுட்பம் கொண்ட மொபைல் போன்களைப் பல நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன. ஆனால், இந்த தொழில் நுட்பத்தினை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்பது பலருக்குப் புரியவில்லை. இருப்பினும், இந்த ஆண்டில், இது பரவலாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 









புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்