விண்டோஸ் 7 problem சில இடைஞ்சல்கள் - அவற்றை எப்படி தவிர்க்கலாம்? பகுதி:2



விண்டோஸ் 7 சிஸ்டம், பயன்படுத்த நமக்கு மிகவும் எளிமையானதாகவும், வேகமாக வேலைகளை முடிப்பதற்கான வசதிகள் கொண்டதாகவும் உள்ளது.
ஆனால், நாம் பணியாற்றுகையில், சின்ன சின்ன இடைஞ்சல்களை இது 
தருவதாக, நாம் அனைவரும் உணர்கிறோம். இவை நம் பணிக்கு கூடுதல் வசதிகளையும், பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகளையும் தருகின்றன. இருப்பினும் இவற்றை நாம் விரும்புவதில்லை. எனவே, அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பதை இங்கு காணலாம். 





கேப்ஸ் லாக் கீ

நமக்கு கேப்ஸ் லாக் கீ தேவையா? எத்தனை பேர் இதனை அடிக்கடி பயன்படுத்துகிறோம். தொடர்ந்து பெரிய எழுத்துக்களில் யாரும் டைப் செய்யப் போவதில்லை. ஓரிரு எழுத்துக்களை பெரிய எழுத்தாக டைப் செய்திட ஷிப்ட் கீ அழுத்தி பெறுகிறோம். கேப்ஸ் லாக் கீயினை , நம்மை அறியாமல் அழுத்தி அது இடைஞ்சல் தரும் ஒன்றாகவே நமக்குக் காட்சி அளிக்கிறது. இது 





அழுத்தப்படுவதையும், செயலுக்கு வருவதனையும் நிறுத்தலாம். disable_caps_ lock.reg file என்ற பைலை http://clicks.aweber.om/y/ct/?l=5GGRE&m=IsYk1pJpHuUKNK&b=g3Urkd2hC6UiLgO_fcxysw என்ற தளத்திலிருந்து டவுண்லோட் செய்திடவும். இந்த பைலில் டபுள் கிளிக் செய்துவிட்டால், இது இயங்கி, கேப்ஸ் லாக் கீ செயல்படுவதனை நிறுத்திவிடும். இதனால், எந்த பாதிப்பும் இருக்காது. இதற்குப் பின்னர், கேப்ஸ் லாக் கீயினை நீங்கள் அழுத்தினால், ஒன்றும் நிகழாது.




விண்டோஸ் அப்டேட்

விண்டோஸ் இயக்கத்திற்கான அப்டேட் பைல்கள் தானாக உங்கள் சிஸ்டத்தில் டவுண்லோட் ஆனவுடன், ஓவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒருமுறை, தரவிறக்கம் செய்யப்பட்ட அப்டேட் பைல்களை இன்ஸ்டால் செய்திடவா எனக் கேட்டு ஒரு பாப் அப் விண்டோ கிடைக்கும். போனஸாக நான் இன்ஸ்டால் செய்கிறேன். நீங்கள் உங்கள் வேலையைத் தொடரலாம் என்றும் ஒரு டிப்ஸ் தரப்படும். அடுத்து, உங்கள் கம்ப்யூட்டரை மீண்டும் 




இயக்கினால் தான் இவை செயல்பாட்டிற்கு வரும், இயக்கவா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் பதில் கொடுத்தாலும், மறுபடியும் மறுபடியும் இந்த பாப் அப் விண்டோ கிடைக்கும். இது நமக்கு நல்லது என்றாலும், நம் தொடர் பணியில் இது ஒரு குறுக்கீடுதான். எனவே இதனை நம் வசதிப்படி அமைக்க விரும்புவோம். அதாவது, எப்போது நமக்கு ரீஸ்டார்ட் செய்வதில் பிரச்னை இல்லை என்று எண்ணுகிறோமோ, அப்போது டவுண்லோட் செய்து கொள்ள விண்டோஸ் சிஸ்டத்திற்கு நாம் சொல்கிற வகையில் செட் செய்து கொள்ளலாம்.

இதற்கு Windows Update control panel திறக்கவும். இடது பக்கமாக உள்ள Change settings என்பதனை அடுத்து பெறவும். இங்கு அதற்கான மாற்றங்களை மேற்கொள்ளவும். “Download updates but let me choose whether to install them” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 









புதிய பதிவுகளை E-MAIL ல்