வேர்ட் டிப்ஸ் Part:1



வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு






வேர்ட் அதன் டாகுமெண்ட்களில் டேபிள் களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல் களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது. எடுத்துக் காட்டாக, டேபிள் ஒன்றின் முதல் இரு 





செல்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் அதிக அகலத்திலும், மற்ற பத்து செல்கள் குறைவாக சமமான அளவில் வேண்டும் என்றால் என்ன செய்திட லாம்? வேர்ட் தானாக இதனை அமைக்காது. அதன் மாறா நிலையில், குறிப்பிட்ட அளவில் அனைத்து செல்களையும் அமைத்துவிடும். எனவே, மேலே கூறியபடி அகலத்துடன் 12 செல்கள் கொண்ட டேபிள் ஒன்றை அமைக்க, ஒரு சுருக்கமான வழியைப் பார்ப்போம்.

1. மூன்று செல்கள் கொண்ட ஒரு வரிசை டேபிள் ஒன்றை உருவாக்கவும். இது உங்கள் டாகுமெண்ட்டின் ஒரு மார்ஜின் முனை யிலிருந்து அடுத்த மார்ஜின் வரை நீட்டிக்கப் பட்டு கிடைக்கும். 




2. அடுத்து மவுஸைப் பயன்படுத்தி, முதல் இரண்டு செல்களின் அகலத்தினை நீங்களே சரி செய்திடுங்கள். எவ்வளவு அதிக அகலம் வேண்டுமோ, அவ்வளவு அகலத்தில் அமைத்திடுங்கள். 
3. மவுஸின் கர்சரை மூன்றாவது செல்லில் நிறுத்தவும்.
4. ரிப்பனுடைய Layout tab டேப்பினைத் திறக்கவும். மவுஸின் கர்சர் செல்லுக்குள் இருந்தால் தான், இந்த டேப் இருப்பது காட்டப்படும்.
5. அடுத்து Merge குரூப்பில், Split Cells என்ற டூலில் கிளிக் செய்திடவும். 
6. அடுத்து Number of Columns என்ற கண்ட்ரோலைப் பயன்படுத்தி, அந்த செல்லை பத்து செல்களாகப் பிரிக்க வேண்டும் என அமைக்கவும். 
7. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேற வும்.








புதிய பதிவுகளை E-MAIL ல்


s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்